காதில் பூச்சி புகுந்துவிட்டால் என்ன செய்வது?

Written By: Lakshmi
Subscribe to Boldsky

காதுக்குள் பூச்சி கொள்வது என்பது ஒரு பெரிய இம்சையாகும். அது உங்களை நிம்மதியாக இருக்கவிடாது. இது வாழ்க்கையில் ஒரு தடவையாவது அனைவருக்கு நடக்கும் ஒரு விஷயம். பெரும்பாலும் இது குழந்தைகளுக்கு தான் நடக்கும்.

காது மிகவும் சென்சிடிவான பகுதி. காதிற்குள் இருக்கும் பகுதிகளை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். இந்த பகுதியில் காதிற்குள் பூச்சி புகுந்துவிட்டால் எப்படி வெளியே எடுப்பது என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

காதிற்குள் பூச்சி புகுந்துவிட்டால் ஆலிவ் ஆயில் அல்லது பேபி ஆயிலை சில துளிகள் காதிற்குள் விடுங்கள். காதிற்குள் ஆயில் இருக்கும் போது பூச்சியால் காதிற்குள் இருக்க முடியாது எனவே ஆயிலுடன் சேர்ந்து பூச்சியும் வெளியில் வந்துவிடும்.

இது இருந்தால் ஆயில் வேண்டாம்!

இது இருந்தால் ஆயில் வேண்டாம்!

மிதமான சூடுள்ள எண்ணெய்யை காதிற்குள் விட வேண்டும். மிக சூடான எண்ணெய்யை ஊற்ற கூடாது. பூச்சி புகுந்தால் மட்டும் தான் காதிற்குள் எண்ணெய் ஊற்ற கூடாது. பிற காது பிரச்சனைகள் இருந்தாலும் எண்ணெய் ஊற்றக்கூடாது. இரத்தம் வலிந்தாலும் காதில் எண்ணெய் ஊற்ற கூடாது.

ஆல்கஹால்

ஆல்கஹால்

காதிற்குள் பூச்சி புகுந்தால் ஆல்கஹாலை பஞ்சில் தொட்டு காதின் வெளிப்பகுதில் வைக்கலாம். இவ்வாறு செய்வதால் காதில் உள்ள பூச்சி வெளியேறிவிடும். சில துளிகள் ஆல்கஹாலை காதிற்குள் விடலாம்.

பட்ஸ்..!

பட்ஸ்..!

காதிற்குள் பட்ஸ் அல்லது வேறு சில பொருட்களை விட கூடாது. அவ்வாறு செய்தால் காதிற்குள் உள்ள பூச்சி மேலும் உள்ளே சென்று விடும். மேலும் நீங்கள் காதிற்குள் விடும் பொருள் காதை சேதப்படுத்தலாம்.

விரலை விட வேண்டாம்!

விரலை விட வேண்டாம்!

காதிற்குள் விரலை கூட விட வேண்டாம். இவ்வாறு விரலை விட்டால் காது அதிகமாக வலிக்க தொடங்கிவிடும்.

தீக்குச்சிகளும் வேண்டாம்

தீக்குச்சிகளும் வேண்டாம்

காதிற்குள் தீக்குச்சிகளை விடுவதால் காதில் இருக்கும் வேக்ஸ்களை இது உள்ளே தள்ளிவிடும். ஒருவேளை பூச்சி வெளியே வந்தாலும் கூட, தீக்குச்சியால் இன்பெக்சன் ஆகிவிடும். அதனால் காது கேளாமை கூட உண்டாகலாம்.

டாக்டரை பாருங்கள்

டாக்டரை பாருங்கள்

நீங்கள் வீட்டில் செய்த எதுவும் உங்களுக்கு பலன் தரவில்லை என்றால் நீங்கள் உடனடியாக மருத்துவரிடன் சென்று தீர்வு காணுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What To Do If An Insect Enters The Ear

What To Do If An Insect Enters The Ear
Story first published: Saturday, July 15, 2017, 10:30 [IST]
Subscribe Newsletter