Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
கொங்குநாடு கோழி வறுவல் ரெசிபி - சிக்கனை இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
Kongunadu Chicken Fry Recipe in Tamil: சண்டே என்றாலே அசைவ உணவு என்பது எழுதப்படாத விதியாக மாறிவிட்டது. இந்த சண்டே சிக்கன் வாங்க போறீங்களா? சிக்கனை வைத்து குழம்பு செய்யப் போறீங்களா? ஒரே மாதிரி சிக்கன் குழம்பு, வறுவல் செஞ்சு போரடிக்குதா? அப்படினா வழக்கமான வறுவல் செய்யாம கொங்கு நாடு ஸ்டைலில் சிக்கன் வறுவலை செஞ்சு பாருங்க.

இந்த கொங்கு நாடு சிக்கன் வறுவல் அட்டகாசமான சுவையில் இருப்பதோடு செய்வதற்கும் மிகவும் எளிதானதாக இருக்கும். இந்த சிக்கன் வறுவல் பிரியாணி, சாம்பார் சாதம், நெய் சாதம் மற்றும் நெய் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். இந்த கொங்கு ஸ்பெஷல் சிக்கன் வறுவல் கொங்கு பகுதிகளில் மிகவும் பிரபலமானதாகும். இந்த சிக்கன் வறுவலை நாட்டுக்கோழியிலும் செய்யலாம், பிராய்லர் சிக்கனில் செய்யலாம்.
உங்களுக்கு கொங்கு ஸ்பெஷல் சிக்கன் வறுவலை எப்படி வேசெய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொங்கு ஸ்பெஷல் சிக்கன் வறுவலின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து அரைக்க:
- 2 இன்ச் இலவங்கப்பட்டை
- 1 ஸ்பூன் மிளகு
- 3 மேசைக்கரண்டி தனியா விதை
- 1/2 ஸ்பூன் சோம்பு
- 1/2 ஸ்பூன் கசகசா
- 10 வர மிளகாய்
- 5 ஸ்பூன் தேங்காய்
சிக்கனை சமைக்க:
- அரை கிலோ சிக்கன்
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1 பெரிய வெங்காயம்
- 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
- தேவையான அளவு உப்பு
- ஒரு கைப்பிடி கறிவேப்பிலை
- 1/2 கப் நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
- தேவையான அளவு தண்ணீர்
செய்முறை:
- முதலில் சிக்கனை மஞ்சள் சேர்த்து நன்கு கழுவி தண்ணீரை வடிகட்டி தனியாக வைக்கவும்.
- ஒரு கடாயில் பட்டை, கிராம்பு, மிளகு, தனியா, சோம்பு மற்றும் கசகசா ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- இவற்றை வாசனை வரும் வரை வதக்கவும். பின்னர் வர மிளகாய் மற்றும் தேங்காயைச் சேர்க்கவும். ஒரு நிமிடம் வதக்கவும். மிளகாய் கருகாமல் இருக்க வேண்டும், அதேசமயம் தேங்காய் நிறம் மாற வேண்டும்.
- இந்த கலவையை நன்றாக ஆறவிட்டு, ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
- பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் சூடுபடுத்தவும். எண்ணெய் சூடானதும், நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து, அது கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் உப்பு மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து கிளறவும். பின்னர் கழுவி வைத்த சிக்கனை சேர்த்து நன்கு கிளறவும்.
- சிக்கனின் நிறம் மாறி தண்ணீர் வெளிவரும் வரை வதக்கவும்.
- பின்னர் அரைத்து வைத்த விழுதை சிக்கனுடன் சேர்த்து, சிக்கன் முழுமையாக வெந்து, அதிலிருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை மிதமான தீயில் சமைக்கவும்.
- தண்ணீர் முழுதாக வற்றும் வரை சில நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்கவிடவும். பின் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலைகளைத் தூவவும். ஒருமுறை கிளறிவிட்டு, சில நொடிகள் வேகவிடவும்.
- அவ்வளவுதான் அடுப்பை அணைத்து சிக்கனை இறக்கி சூடாக பரிமாறவும்.



Click it and Unblock the Notifications