தைராய்டு புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் அதற்கான சிகிச்சை முறைகள்!

Posted By:
Subscribe to Boldsky

தைராய்டு சுரப்பி பற்றிய பிரச்சனை என்று ஆரம்பித்தாலே தைராய்டு குறைவாக சுரப்பது, அதிகமாக சுரப்பது மட்டுமே பிரச்சனையல்ல.... அதில் புற்றுநோய் ஏற்படுவதற்கு கூட வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது தெரியுமா உங்களுக்கு?

தைராய்டு சுப்பி நம் முன் கழுத்தில் அமைந்திருக்கிறது. நாம் சுறுசுறுப்பாக இயங்குவதிலிருந்து பல பயனுள்ள ஹார்மோன்களை அது சுரக்க உதவிடுகிறது. இந்நிலையில் அது குறைவாக சுரந்தாலோ அல்லது அதிகமாக சுரந்தாலோ அது பாதிப்பை ஏற்படுத்திடும். உங்களது அன்றாட வேலைகளையே சிதைத்து விடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புற்றுநோய் :

புற்றுநோய் :

தைராய்டு சுரப்பியில் அசாதரணமான செல்களின் வளர்ச்சியினால் அங்கே புற்றுநோய் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. இது அபூர்வமானது என்றாலும் நீங்கள் அதைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். புற்றுநோயைப் பொறுத்தவரையில் அதன் ஆரம்பகட்டத்தில் சிகிச்சை பெற வேண்டியது மிகவும் முக்கியமானது.

சிலருக்கு மீண்டும் மீண்டும்... வருவதற்கு கூட வாய்ப்புண்டு.

காரணம் :

காரணம் :

தைராய்டு சுரப்பியில் புற்றுநோய் ஏற்படுவதற்கான தனிப்பட்ட காரணங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. ஆனால், மற்ற கேன்சர் செல்களைப் போலவே இதுவும் நம்முடைய டி.என்.ஏவை குலைக்கிறது.

அதிக ரேடியேஷன் இருக்கக்கூடிய இடங்களில் பணியாற்றுவோருக்கு தைராய்டு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அறிகுறிகள் :

அறிகுறிகள் :

சாதரண தைராய்டு பிரச்சனையின் போது ஏற்படக்கூடிய அறிகுறிகளை விட இது அதிகளவு நமக்குத் தெரிந்திடும். கழுத்து மற்றும் காது வலிக்கும், மூச்சு விடுவதில் சிரமங்கள் உண்டாகும். உங்கள் குரல் கட்டைக்குரலாக அதாவது தடித்த குரலாக மாறிடும்.

தொடர்ச்சியான இருமல் இருக்கும். இந்த இருமல் சளியினால் ஏற்படுகிற இருமலாக இருக்காது.

வகைகள் :

வகைகள் :

தைராய்டு கேன்சரில் பல வகைகள் இருக்கின்றன. பாப்பிலரி தைராய்டு கேன்சர் தான் பொதுவாக பலருக்கும் ஏற்படுவது.

இது எந்த வயதினருக்கும் வரலாம். முப்பது முதல் ஐம்பது வயது வரையில் இருப்பவர்களுக்கு நிறைய வருவதாக கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ஃபோலிக்குலர் தைராய்டு கேன்சர் என்னும் பாதிப்பு ஐம்பது வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு ஏற்படும். மெடுயுலரி தைராய்டு கேன்சர் தைராய்டு சுரப்பியில் இருக்கக்கூடிய சி செல்களில் பாதிப்பு ஏற்பட்டால் உண்டாகும்.

மிகவும் அசாதரணமானது :

மிகவும் அசாதரணமானது :

அனப்ளாஸ்டிக் தைராய்டு கேன்சர் மிகவும் அரிதானது. இதற்கு சிகிச்சையளிப்பதும் கடினம், அதோடு இந்த வகை புற்றுநோய் என்றால் அது மிகச்சீக்கிரத்தில் வளர்ந்து கொண்டேயிருக்கும்.

இது அறுபது வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது.

தைராய்ட் லிம்ப்போமா என்பது மிகவும் அரிதான ஒன்று. இது மற்ற புற்றுநோய் செல்களை விட அதி வேகமாக வளர்ந்திடும்.

கண்டறியும் முறை :

கண்டறியும் முறை :

முன் கழுத்து வீங்கினாலோ அல்லது மேற்சொன்ன அறிகுறிகளில் ஏதேனும் தெரிந்தாலோ உடனடியாக உங்கள் மருத்துவரை சந்தித்திடுங்கள். பயாப்சி சோதனை செய்வதன் மூலம் அது புற்றுநோய் இருக்கிறதா இல்லையா என்பதை கண்டுபிடித்திடலாம்.

தைராய்டு பரிசோதனை செய்ய அந்த சுரப்பியிலிருந்து சிறிய அளவிலான திசுக்கள் எடுக்கப்படும். சில நேரத்தில் பயாப்சி மூலமாக தெரியவில்லை எனில் அறுவை சிகிச்சை மூலமாக தைராய்டு சுரப்பி முற்றிலுமாக எடுக்கப்படும்.

சிக்கல்கள் :

சிக்கல்கள் :

தைராய்டு சுரப்பியில் புற்றுநோய் ஏற்பட்டு அதற்கான முறையான சிகிச்சை எடுத்துக் கொண்ட பின்னரும் மீண்டும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.

தைராய்டு சுரப்பியையே நீங்கள் நீக்கியிருந்தாலும் புற்றுநோய் உண்டாக வாய்ப்புண்டு, தைராய்டு சுரப்பியிலிருந்து மைக்ரோஸ்கோப்பிக் புற்றுநோய் செல்கள் பரவியிருப்பதால் இந்தப் பிரச்சனை.

தொடர்ச்சியாக குறிப்பிட்ட கால இடைவேளிகளில் தைராய்டு ஸ்கேன் மற்றும் ரத்தப்பரிசோதனை மூலமாக ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா இல்லையா என்பது குறித்து நாம் கண்டறியலாம்.

சிகிச்சை முறை :

சிகிச்சை முறை :

உங்களுக்கு தைராய்டு சுரப்பியில் புற்றுநோய் தாக்கியிருப்பது உறுதியானால் ஒன்று அறுவை சிகிச்சை செய்து நீக்கிடுவார்கள்.

அதன் பிறகு ரேடியோஆக்டிவ் அயோடின் தெரபி என்ற சிகிச்சை முறை அளிக்கப்படும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீமோதெரபி சிகிச்சை வழங்கப்படுமே அதைப் போல தைராய்டு சுரப்பியில் புற்றுநோய் பாதிப்பு உண்டால் இந்த சிகிச்சை முறை அளிக்கிறார்கள்.

தைராய்டு சுரப்பி நீக்கிய பிறகும் புற்றுநோயின் தாக்கம் இருக்குமானால் இந்த சிகிச்சை முறை பின்பற்றப்படுகிறது. சில நேரங்களில் ஹைப்பர் தைராய்டுக்கும் இதே சிகிச்சைமுறை பின்பற்றப்படுவதுண்டு.

தைராய்டு :

தைராய்டு :

தைராய்டில் பிரச்சினை என்றால், உடல் இயக்கம் முழுவதுமே பாதிப்புக்கு உள்ளாகும்.தைராய்டு சரியாக செயல்பட மூளை மற்றும் உடலின் குறிப்பிட்ட பாகங்கள் உதவுகின்றன.

தைராய்டு சுரப்பியில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் சீராக இயங்க வேண்டுமெனில் உங்கள் உணவுகளில் அயோடின் அதிகமிருக்கும் உணவுகளை தொடர்ந்து சேர்த்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் உங்கள் உணவில் அதிகம் சேர்க்க வேண்டிய உணவுகளின் பட்டியல்

ஸ்ட்ராபெர்ரி :

ஸ்ட்ராபெர்ரி :

உடலில் போதிய அயோடின் இல்லாவிட்டால், தைராய்டு சுரப்பியினால் எதையும் சரியாக செய்ய முடியாது. எனவே ஸ்ட்ராபெர்ரியை அதிகம் சாப்பிட்டால், தைராய்டில் இருந்து குணமாகலாம். ஏனெனில் அதில் அயோடின் அதிக அளவில் உள்ளது.

காளான் :

காளான் :

செலினியம் குறைபாடும் தைராய்டு ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணம். எனவே செலினியம் அதிகம் உள்ள காளானை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.

பூண்டு :

பூண்டு :

செலினியம் அதிகம் உள்ள உணவுகளில் பூண்டும் ஒன்று. இந்த பூண்டு தைராய்டு உள்ளவர்களுக்கு மட்டுமின்றி, நீரிழிவு நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகளுக்கும் சிறந்தது.

பசலைக் கீரை :

பசலைக் கீரை :

பச்சை இலைக் காய்கறிகளில் வைட்டமின், புரோட்டீன், கனிமங்கள் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. எனவே அவற்றில் ஒன்றான பசலைக் கீரையை அதிகம் சாப்பிட்டால், நல்லது.

மாட்டிறைச்சி :

மாட்டிறைச்சி :

மாட்டிறைச்சியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. எனவே தைராய்டால் பாதிக்கப்பட்டவர்கள், கொழுப்பு குறைவாக உள்ள மாட்டிறைச்சியை சாப்பிடுவது சிறந்தது.

முட்டை :

முட்டை :

முட்டை மற்றும் பால் பொருட்கள் தைராய்டு சுரப்பிக்கு மிகவும் ஆரோக்கியமானது. இத்தகைய உணவுகளல் கால்சியம் மட்டுமின்றி, அதிகப்படியான அளவில் இரும்புச்சத்து மற்றும் அயோடின் உள்ளது.

தானியங்கள் :

தானியங்கள் :

தானியங்களில் ப்ரௌன் அரிசி, ஓட்ஸ் மற்றும் பார்லி போன்றவற்றில் வைட்டமின் பி மற்றும் ஊட்டச்சத்துக்கள் பல உள்ளன.

இந்த சத்துக்களை அதிகம் சேர்த்தால், அவை உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். இதனால் தைராய்டு சுரப்பி சீராக இயங்கி, உடலுக்குத் தேவையான தைராய்டு ஹார்மோனை சுரக்கும்.

ப்ராக்கோலி :

ப்ராக்கோலி :

இந்த காய்கறியை தினமும் சாப்பிட்டால், தைராய்டு சுரப்பியில் ஏற்படும் பாதிப்பை தடுக்கலாம். இதனால் தைராய்டு சுரப்பியானது சீராக இயங்கும்.

தக்காளி :

தக்காளி :

தக்காளியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. முக்கியமாக இந்த உணவை தைராய்டால் பாதிக்கப்பட்டவர்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், உடலில் இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு பெரிதும் உதவுகிறது.

 தேங்காய் எண்ணெய் :

தேங்காய் எண்ணெய் :

தேங்காய் எண்ணெயில் உடலுக்கு தேவையான ஃபேட்டி ஆசிட்கள் உள்ளன. அத்தகைய ஃபேட்டி ஆசிட்கள் தைராய்டு சுரப்பியின் இயக்கத்தை சீராக வைப்பதற்கு உதவுகிறது.

 உருளைக்கிழங்கு :

உருளைக்கிழங்கு :

உருளைக்கிழங்கு அதிகம் சாப்பிட்டால், வாயுத் தொல்லை ஏற்படும் என்று பலர் தவிர்க்கின்றனர். ஆனால் இந்த உருளைக்கிழங்கை சாப்பிட்டால், இதிலுள்ள அயோடின் தைராய்டு சுரப்பியை சீராக இயங்க வைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Thyroid Cancer Symptoms And Treatment

Thyroid Cancer Symptoms And Treatment
Story first published: Thursday, December 14, 2017, 17:00 [IST]
Subscribe Newsletter