ரேபீஸ் வைரஸ் தாக்கினால் என்னாவாகும்? முழுத்தொகுப்பு

Posted By:
Subscribe to Boldsky

செல்லப்பிராணிகள் வளர்ப்பது பெரும்பாலானோருக்கு பிடித்தமான விஷயம். ஆனால் சிலருக்கு நாய் என்றாலே பதறி ஓடுவார்கள். காரணம் அவற்றால் பரவிடும் ரேபிஸ்.

நாய் கடிக்கும், கடித்தால் நமக்கு ரேபிஸ் வந்துவிடும்,அப்படியென்றால் மரணம் நிச்சயம் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பதால் தான். இதன் உண்மை நிலவரம் என்ன நாய்க்கடித்தால் என்ன செய்ய வேண்டும்? நம்மை எப்படி தற்காத்து கொள்வது என்று உலக ரேபிஸ் தினமான இன்று தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிறிய நாய் :

சிறிய நாய் :

நாயில் குட்டி நாய், பெரிய நாய் என்றில்லை எந்த நாய் கடித்தாலும் பாதிப்பு ஒன்றுதான். ஆனால் எந்த இடத்தில் கடித்தது என்பதைப் பொறுத்து அதன் பாதிப்பும், நோய் வரும் காலமும் வேறுபடலாம்.

உங்களுக்கு ஒரு புண் இருந்து, அதில் வெறிநோய் உள்ள நாய் நக்கினால் கூட, நமக்கும் ரேபிஸ் வரும். அதை விட வெறிநோய் பாதிப்புள்ள நாய் லேசாக கீறினால் கூட, அந்த வைரஸ் நம் உடலில் பரவிடும்.

எங்கிருந்து வருகிறது :

எங்கிருந்து வருகிறது :

வெறிநோய் பாலூட்டிகளிடம் மட்டுமே வருகிறது. அதுவும் நகங்கள் உடைய விலங்குகளிடம் மட்டுமே வரும். ஆனால் அது அங்கிருந்து வாய்ப்பு கிடைக்கும்போது, மனிதனிடம் பரப்பி விடுகிறது. அது மட்டுமல்ல, இந்த வியாதி ஒரு விலங்கிடமிருந்து இன்னொரு விலங்குக்கும் பரவுகிறது.

வைரஸ் :

வைரஸ் :

வெறி பிடித்த நாயின் கடி அல்லது எச்சில் மூலம் வருவதுதான் வெறிநோய்(Rabies). வெறிநோய் வைரசின் பெயர் லைஸா வைரஸ் (Lyssavirus) என்பதாகும்.ரேபிஸ் என்பது ஒரு லத்தீன் வார்த்தை. இதன் பொருள், சித்த சுவாதீனமற்ற என்பதாகும். வெறி நோயினால், அள்வுக்கதிகமான மூளை வீக்கம் (encephalitis) ஏற்படும். பின்னர் மூளையின் செயல்பாடுகளை மாற்றியமைத்துவிடும்.

யானை பெரிதா? மண் துகள் பெரிதா :

யானை பெரிதா? மண் துகள் பெரிதா :

நம்மை இவ்வளவு பாடுபடுத்தும் இந்த வைரஸ் அப்படி என்ன யானை பெரிதா என்றால் இல்லவே இல்லை. ஒரு மண் துகள் அளவு கூட இருக்காது. அந்த வைரஸ் மிகவும் சிறியது. அதன் நீளம் 180 நானோ மீட்டர். அகலம் 75 நானோமீட்டர். ஒரு நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரில், 100 கோடியில் ஒரு பகுதி.

வைரஸ் செய்திடும் அட்டூழியங்கள் :

வைரஸ் செய்திடும் அட்டூழியங்கள் :

இந்த வைரஸ் நம் உடலின் இண்டர்பெரானுடன் (interferon) சண்டையிட்டு அதனை தோல்வியுறச் செய்கிறது. உடலின் தற்காப்புத் திறனைக் காலி செய்கிறது. மூளையின் பலவித நடவடிக்கைகளை முடக்குகிறது. அங்கிருந்து உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவுகிறது. பின் நமது உமிழ் நீர் சுரப்பிக்கும் தாவுகிறது.

ஏராளமான உமிழ் நீர் கட்டுக்கடங்காமல் சுரக்கிறது. அந்த உமிழ்நீரில் எக்கச்சக்க வைரஸ் இருக்கும். அத்துடன் வாய் மற்றும் கன்னத்திலும் வைரஸ் கோடிக்கணக்கில் வழியும். எனவே நாய் கடித்து 2 நாளிலிருந்து-5 ஆண்டுகள் வரையிலும் வெளியிலேயே தெரியாமல் அடைகாத்து, இது உடலில் தங்கி, பின்னர் அறிகுறி உண்டாகி முடிவில் இறப்பு நேரிடுகிறது.

சிகிச்சை முறை :

சிகிச்சை முறை :

பொதுவாக மனிதனுக்கு ஏற்படும் வெறிநோய் என்பது அதன் தீவிரமான அறிகுறிகள் ஏற்படும் முன், கடித்த உடனேயே அதற்கான நோய்த்தடுப்பு முறைகளை 48 மணி நேரத்துக்குள் தரவேண்டும். அப்படி நோய்த்தடுப்பு மருந்து தக்க தருணத்தில், நாய் கடித்தவுடன் கொடுத்துவிட்டால் கட்டாயம் வெறிநோயிலிருந்து தப்பித்துவிடலாம்.

முதலில் கடிபட்ட இடத்தை சுமார் 15 நிமிட நேரம் தொடர்ந்து சோப்புத் தண்ணீர்/சோப்புத்தூள்/ டிங்க்சர் அயோடின் கொண்டு தொடர்ந்து கழுவி, வெறிநோய் வைரஸைக் கொல்ல வேண்டும். நிறைய தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும். பின் தடுப்பூசிகளை போடவேண்டும்.

தடுப்பூசி :

தடுப்பூசி :

ஊசியை தோள்பட்டையின் டெல்டாய்டு சதையில்(deltoid muscle) தான் போடுவார்கள். பின் ஒரு சில மணித் துளிகளுக்குள் தற்காப்புத் திறனுள்ள வெறிநோய் எதிர்ப்பானாகிய இம்முயூனோ குளோபுலின் (immune globulin) போடவேண்டும்.

பின் அதற்கு 4-5 தடுப்பூசியும் கடிபட்ட இடத்திற்கருகிலேயே போடவேண்டும். நமக்கு முன்பே வெறிநோய் தடுப்பூசி போட்டிருந்தால், நாய் கடித்த பின் இம்முயூனோ குளோபுலின் போட வேண்டாம்.

4 தடுப்பூசி மட்டும் போதும். வெறிநோய் வராமல் இருக்க அதற்கான தடுப்பூசியும் முன்னமேயே போடலாம்.

மரணம் :

மரணம் :

மனித உடம்பில் எந்த இடத்தில் நாய்க் கடித்தது என்பதைப் பொறுத்தே, அந்த வைரஸ் எத்தனை நாளில் மத்திய நரம்பு மண்டலத்தைப் போய் அடைந்து, நம் மூளையைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, வைரஸ் நம் உடலை ஆட்சி செய்யத் துவங்கும் என்பது தெரியும்.

அதனை ஒட்டி இதன் காலம் சில மாதங்களிலிருந்து ஓராண்டு வரை இருக்கலாம். ஒரு முறை இந்த வெறிநோய் வைரஸ் மைய நரம்பு மண்டலத்திற்குள் நுழைந்து விட்டால் அவ்வளவுதான்.. ! வெறிநோயின் அறிகுறிகள் உருவாகத் துவங்கும். அதன்பின் ஓரிரு நாட்களுக்குள் அதன் சிக்கல்கள் அதிகமாகி, ஓரிரு நாட்களிலேயே இறப்பு நிகழ்ந்து விடும்.

பத்தியம் :

பத்தியம் :

சிலர் நாய்க்கடிக்கு பத்தியம் இருந்தால் சரியாகிவிடும் என்ற மூட நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். 6 மாதத்துக்கு கோழிக்கறி, பூசணிக்காய் மற்றும் அகத்திக்கீரை சாப்பிடாமல் இருந்தால் வெறிநாய்க்கடி சரியாகி விடும்.

கடித்த உடன் நல்லெண்ணெய், முட்டை கொடுப்பது விஷம் ஏறாமல் தடுக்கும் என்று ஏதேதோ காரணங்களைச் சொல்லி முறையான சிகிச்சை எடுக்காமல் தவிர்க்கிறார்கள்.

இது மிகவும் ஆபத்தானது.

ஆரம்ப காலங்களில் :

ஆரம்ப காலங்களில் :

கிரேக்கர்கள், ரோமானியர்கள் மற்றும் பாபிலோனியர்கள் வெறிநோய் பற்றிய பதிவுகளை களிமண் பலகைகளில் பதிவு செய்து வைத்துள்ளனர். மனிதன் எப்போது நாய் வளர்க்கத் தொடங்கினானோ அப்போதே, வெறிநோய் பாதிப்பும் ஏற்பட்டிருக்க வேண்டும் .

மனிதனுக்கு நாயுடன்தான் முதலில் பழக்கம் ஏற்பட்டிருந்தது. அதன் ஆதாரமாக, இஸ்ரேலில் ஒரு பெண்ணின் உடலுடன் ஒரு நாயும் சேர்த்து அடக்கம் செய்யப்பட்ட மம்மி கிடைத்துள்ளது. இதன் வயது சுமார் 12,000 வருடங்கள்.

கி.மு 800-700௦௦களில் ஹோமர் பாதிப்பு வந்த நாய் பற்றி எழுதி உள்ளார். கி.மு 420களில் கிரேக்க தத்துவஞானியும் வீட்டு விலங்குகளில் வெறிநோய் வந்தது பற்றி குறிப்பிட்டுள்ளார்.

கி.மு. 400ல் வாழ்ந்த அரிஸ்ட்டாட்டில் நாய்கள் நோயினால பைத்தியம் பிடித்து திரிந்ததாகவும், அவை எரிச்சலோடு மற்ற விலங்குகளை கடித்ததாகவும் எழுதியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Life threatening rabies.Detailed version

Life threatening rabies.Detailed version
Story first published: Thursday, September 28, 2017, 14:23 [IST]