Latest Updates
-
தலைசுற்ற வைக்கும் வட கொரியாவின் கொடூரமான விதிமுறைகள் - இந்த நாட்ல மக்கள் எப்படித்தான் வாழ்றாங்களோ? -
விரிசல் இல்லாம பூர்ண கொழுக்கட்டை செய்யணுமா? இதோ சில டிப்ஸ்.. -
பெண்களுக்கு ஆண்கள் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யும் பெண்களால் ஆளப்படும் இந்தியச் சமூகம் எது தெரியுமா? -
Ganesh Chaturthi 2026: உங்க கஷ்டங்கள் குறையணுமா? அப்ப இன்னிக்கு விநாயகருக்கு உங்க ராசிப்படி இத வாங்கி கொடுங்க! -
விநாயகர் சதுர்த்திக்கு வழக்கமான சுண்டல் செய்யாம இந்த மாதிரி மசாலா அரைச்சு செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
Ganesh Chaturthi 2026: விநாயகரின் சிறப்பு ஆசீர்வாதத்தைப் பெற்ற 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி நாளில் அதிர்ஷ்ட மழையில் நனையப்போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
கூரைக்கடை கார சட்னி - இட்லிக்கு இந்த சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
செப்டம்பர் 14, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க நிறைய சோதனைகளை சந்திக்கப் போறாங்களாம் -
கடக ராசியில் உருவாகும் குரு-மங்கள யோகத்தால் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
தூங்கி எழுந்ததும் தொப்புளில் பஞ்சு போன்று உருவாவது எதனால் தெரியுமா?
நமது உடலில் நடக்கும் சில விஷயங்களே ஏன் நடக்கிறது, எவ்வாறு நடக்கிறது என வியப்படைய செய்யும். அதில் ஒன்று தான் சில சமயங்களில் தூங்கி எழும் போது தொப்புளில் உருவாகி இருக்கும் பஞ்சு பந்து.
நமது உடலில் நடக்கும் சில விஷயங்களே ஏன் நடக்கிறது, எவ்வாறு நடக்கிறது என வியப்படைய செய்யும். அதில் ஒன்று தான் சில சமயங்களில் தூங்கி எழும் போது தொப்புளில் உருவாகி இருக்கும் பஞ்சு பந்து. இது ஏன் உருவாகிறது, எதனால் உருவாகிறது என பலரும் அறிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.
தொட்டதற்கு எல்லாம் ஆய்வுகள் செய்யும் ஆராய்ச்சியாளர்கள் இதை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன? இதுக்குறித்து ஆய்வுகள் சில ஆண்டுகளுக்கு முன்னரே நடத்தி, தொப்புளில் இந்த பஞ்சு பந்து உருவாவது ஏன் என விடையும் கண்டறியப்பட்டுவிட்டது.

வேதியியலாளர்!
ஆஸ்திரிய வேதியியலாளர் ஜியார்ஜ் (Georg Steinhauser) என்பவர் பல வருடங்களாக விடையில்லாமல் புதிராக திகழ்ந்து வந்த தொப்புளில் பஞ்சு போன்றது உருவாவது ஏன் என்பதை மூன்று ஆண்டுகள் ஆய்வு செய்து கண்டறிந்தார்.

பஞ்சு!
தினமும் உறங்கி எழும் போது சில சமையங்களில் தொப்புளில் முடிகளுக்கு நடுவே பஞ்சு பந்து போன்ற ஒன்று உருவாகும். பலரும் இது சட்டை அல்லது போர்வையில் இருந்து உறிஞ்சப்பட்டு உருவாகிறது என்று தான் எண்ணுகிறோம். ஆனால், அது தவறு!

ஆராய்ச்சி!
டாக்டர். ஜியார்ஜ் ஏறத்தாழ தொப்புளில் உருவான இதுப்போன்ற 503 பஞ்சு பந்துகளை சேகரித்து ஆராய்ச்சி ஒன்று நடத்தினார். ஒவ்வொரு பந்துகளும் ஏறத்தாழ ஒரு கிராம் எடை கொண்டிருந்தது. ஒரு பந்து அதிகபட்சமாக 7.5 கிராம் எடை கொண்டிருந்தது.

வேதியல் ஆய்வு!
வேதியாலாளர் ஜியார்ஜ் இந்த பஞ்சு பஞ்சு முற்றிலும் காட்டான் உருவானது அல்ல. இவை இறந்த சருமத்தின் செல்கள், கொழுப்பு வியர்வை மற்றும் தூசினால் உருவாகிறது என கண்டறிந்து கூறினார்.

முடியில் தொடங்கி...
வேதியல் ஆராய்ச்சியாளர் ஜியார்ஜ், "இது சின்ன தூசாக முடிகளில் உருவாகி, முடிவில் மெல்ல, மெல்ல தொப்புளில் பஞ்சு பந்து போல உருவாகி தொப்புளுள் உறிஞ்சப்பட்டு சிக்கிக் கொள்கிறது" என தெரிவித்திருந்தார்.

ஆய்விடம்!
இந்த ஆய்வு வியென்னா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது. மேலும், இந்த பஞ்சு பந்து உருவாகாமல் இருக்க வேண்டுமெனில், வயிறு பகுதியில் இருக்கும் முடிகளை நீக்கினால் போதுமானது எனவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

குழப்பம்!
இந்த ஆய்வில் மொத்தம் 5000 பேர் கலந்துக் கொண்டனர். தொப்புளில் உருவாகும் பஞ்சு பந்து சிலருக்கு அதிகளவிலும், சிலருக்கு குறைவாகவும், சிலருக்கு முற்றிலும் உருவாகாமலும் இருந்தது.

கின்னஸ் சாதனை!
மிஸ்டர். பார்கர் என்பவர் கடந்த 1984-ம் ஆண்டிலிருந்து 26 வருடங்கள் (2010 வரை) தொப்புள் சுற்றில்யுள்ள முடிகளில் இருந்து உருவாகும் இந்த பஞ்சு பந்துகளை சேகரித்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.



Click it and Unblock the Notifications
