Latest Updates
-
இந்தியர்களே நுழைய முடியாத இந்தியாவிலுள்ள இடங்கள் - இதில் 3 இடங்கள் தமிழ்நாட்டில்தான் இருக்காம் தெரியுமா? -
சூரியன்-சந்திரனால் உருவாகும் வியாதிபாத யோகத்தால் ஜூலை மாதம் பணக்கஷ்டத்தில் சிக்கப்போகும் 4 ராசிகள் -
உருளைக்கிழங்கு இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பொடிமாஸ் பண்ணுங்க - டேஸ்ட் டக்கரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி பெண்களின் கழுத்தை பார்த்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லிரலாமாம் - கவனிச்சு பாருங்க -
வரகரிசி மசாலா தோசை - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 25 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு குழப்பமான நாளாக இருக்குமாம் -
கஜலட்சுமி யோகம் கடக ராசியில் இருப்பதால் கோடீஸ்வர யோகாக்கத்தால் பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வேர்க்கடலையும், கொத்தமல்லியும் இருந்தா இந்த மாதிரி சுருக்குனு சட்னி அரைங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
July 2026: ஜூலை மாதத்தின் முக்கியமான நாட்கள் மற்றும் விரத தினங்கள் என்னென்ன தெரியுமா? -
2 பிரட்டும், அரை கப் கடலை மாவும் இருந்தா டக்குனு இந்த டிபனை பண்ணுங்க - டேஸ்ட்டா, ஆரோக்கியமா இருக்கும்
உயரமாக இருப்பது நல்லதா? கெட்டதா??
சத்தியராஜ், அமிதாப் போன்றவர்களை திரையில் பார்க்கும் போது சிலருக்கு பொறாமையாக இருக்கும், காரணம் உயரம். நமது சமூகத்தில் அறிவில் உயர்ந்து இருப்பினும், உயரத்தில் குறைவாக இருந்தால் கேலி, கிண்டலுக்கு ஆளாக தான் வேண்டியிருக்கிறது.
உயரமாக இருப்பது தான் ஆண்மையா என்ன? இல்லவே இல்லை. உயரமாக இருப்பவர்கள் விரைவாக இறந்துவிடுவார்கள் என்று உலகளவில் பொதுவான கூற்று ஒன்று நிலவுகிறது. அதற்கு ஏற்றார் போல உயரமாக இருப்பவர்களுக்கு தான் சில உடல்நல பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுகின்றன....

இரத்த கட்டிகள்
உயரமாகவும், உடல் பருமனுடனும் இருக்கும் ஆண்களுக்கு இரத்தக் கட்டிகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறதாம். இதை ட்ரோம்சோ பல்கலைகழகத்தினர் ஆய்வின் மூலம் நிரூபனும் செய்துள்ளனர்.

இரத்த கட்டிகள்
முக்கியமாக இவர்களுக்கு நுரையீரல் மற்றும் கால்களில் இரத்தக் கட்டிகள் ஏற்படும் அபாயம் மற்றவர்களை விட 2.57% அதிகமாக இருக்கிறது. ஆறடிக்கு மேல் உயரமாக இருக்கும் ஆண்கள் உடல் எடையில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

இடுப்பு வலி
எவ்வளவு அதிகம் நீங்கள் உயரமாக இருக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்களுக்கு இடுப்பு / முதுகு வலி ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.

இடுப்பு வலி
குனியும் போதும், நிமிரும் போதும் அதிகமாக இவர்கள் ஸ்ட்ரெச் செய்ய வேண்டியிருக்கிறது. அதனால் தான் அதிகமாக இவர்களுக்கு இடுப்பு வலி ஏற்படுகிறது.

மார்பக புற்றுநோய்
சில வருடங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட ஆய்வில் நான்கு இன்ச் வீதம் நீங்கள் உயரம் அதிகரிக்க, அதிகரிக்க நோய் அதிகரிக்கும் அபாயமும் அதிகரிக்கிறது என தகவல் வெளியானது. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் உயரமாக இருக்கும் பெண்களுக்கு 28% அதிகமாக மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது என கண்டறியப்பட்டது.

மார்பக புற்றுநோய்
அதாவது, நீங்கள் உயரம் அதிகமாக, அதிகமாக நிறைய கவனத்துடனும், உடலநல அக்கறையுடனும் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

மெலனோமா
மெலனோமா என்பது சரும புற்றுநோய் ஏற்படுத்தும் கட்டியோடு தொடர்புடையது ஆகும். உயரமான பெண்களுக்கு அதிகமாக சரும புற்றுநோய் தாக்கம் ஏற்படுகிறது என்றும் புற்றுநோய் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நல்ல செய்தி
உயரமாக இருப்பவர்களுக்கு இதய நோய் பாதிப்புகள் குறைவாக தான் ஏற்படுகிறது. ஆய்வாளர்கள், " உயரம் குறைவான நபர்களோடு ஒப்பிடுகையில் உயரமான நபர்களுக்கு இதய பாதிப்புகள் குறைவு.

நல்ல செய்தி
உயரம் குறைவான நபர்களுக்கு தமனிகள் சிறியதாக இருக்கிறது, இதனால் இரத்த ஓட்டத்தில் குறைபாடு ஏற்பட்டு இந்த விளைவுகள் ஏற்படுகிறது என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

வாழ்நாள்
பிரிஸ்டல் பல்கலைகழக நிபுணர்கள் கால்கள் நீளமாக உள்ள நபர்களுக்கு வாழ்நாள் அதிகமாக இருக்கிறது என ஓர் ஆய்வறிக்கை மூலமாக தெரிவித்துள்ளனர். உயரமாக இருப்பவர்களுக்கு இதயம் மற்றும் சுவாச பிரச்சனைகள் குறைவாக ஏற்படுவது தான் இதற்கான காரணம் என கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications