உண்மையில் பித்தப்பையின் நலன் எவ்வளவு அவசியம்?

Posted By:
Subscribe to Boldsky

பித்தப்பை என்பது கல்லீரலின் கீழே அமைந்துள்ள ஒரு சிறிய பை போன்ற உடலுறுப்பாகும். இது கல்லீரலில் உற்பத்தியாகும் பித்தநீரை எடுத்துச் செல்லும் பித்த நாளத்துடன் இணைந்துள்ளது. கொழுப்பு வகை உணவின் செரிமானத்திற்கு தேவையான பித்தநீரைச் சேமித்து வைத்திருந்து தேவையான பொழுது குடலுக்குள் செலுத்துகிறது.

பித்தப்பை பிரச்சனைகளுக்கு 10 பிரம்மாதமான தீர்வுகள்!!

பித்தப்பை இல்லாமல் மனிதர்கள் வாழ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பித்தப்பையில் கற்கள் உண்டாகி பிரச்சனை வந்தால் அறுவை சிகிச்சை மூலம் பித்தப்பையை அகற்றிவிடுவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பலன்

பலன்

பித்தப்பை பித்த நீரை சேமித்து வைக்கும் உடல் உறுப்பாகும். இது உடலில் கொழுப்பை அதிகம் அண்டாமல் பாதுகாக்கவும், கொழுப்பு நிறைந்த உணவை செரிமானம் செய்யவும் உதவுகிறது. மேலும், உணவு செரிக்கவும் பித்தப்பை உதவுகிறது.

பிரச்சனைகள்

பிரச்சனைகள்

பித்தப்பையில் உண்டாகும் மிகப்பெரிய பிரச்சனை பித்தப்பை கற்கள். பித்த நீரில் உண்டாகும் தாக்கத்தால் (கொலஸ்ட்ரால், எலக்ட்ரோலைட்ஸ்) பித்தப்பையில் கற்கள் உண்டாகின்றன.

பெண்கள்

பெண்கள்

ஆண்களோடு ஒப்பிடுகையில் முப்பது வயதுக்கு மேல் பெண்களுக்கு பித்தப்பை பிரச்சனைகள் அதிகமாக உண்டாகிறது என ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டது.

பெண்கள்

பெண்கள்

கர்ப்பம், ஈஸ்ட்ரோஜன், உடல் பருமன், பரம்பரை கூறு, மரபணு என பலவன பெண்கள் மத்தியில் பித்தப்பை பிரச்சனைகள் அதிகரிக்க காரணிகளாக இருக்கின்றன.

அறிகுறி

அறிகுறி

பித்தப்பை கற்கள் உண்டாவதில் என்ன பிரச்சனை எனில், அது உண்டானதற்கான எந்த அறிகுறியும் பெரிதாக வெளிப்படுத்தாது. மருத்துவ பரிசோதனை செய்து மட்டுமே கண்டறிய முடியும்.

வயிற்று வலி

வயிற்று வலி

எந்த காரணமும் இன்றி உங்களுக்கு அடிக்கடி அதிகமாக வயிறு வலிப்பது, இத்துடன் செரிமான கோளாறுகள் உண்டாகிறது எனில், உங்களுக்கு பித்தப்பை கற்கள் பிரச்சனை இருக்கிறது என்பதை கண்டறிந்துக் கொள்ள முடியும்.

கொழுப்பு

கொழுப்பு

எண்ணெய் உணவுகள், கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகள் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டாம். மேலும், அன்றாட உணவில் வேகவைத்த காய்கறிகளை சேர்த்துக் கொள்வது இந்த பித்தப்பை கற்கள் பிரச்சனை உண்டாகாமல் தடுக்க உதவும்.

புற்றுநோய்

புற்றுநோய்

பித்தப்பை புற்றுநோய் என்பது மிகவும் அரிதானது தான். ஆனால், இது உண்டானால் மிகவும் அபாயமானது என்றும் புற்றுநோய் சிறப்பு மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Do You Actually Need Your Gallbladder?

Do You Actually Need Your Gallbladder? read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter