Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
இந்தியா என்றாலே பஞ்சம் தானா? அதுக்குன்னு இதிலையுமா?
சமீபத்தில் பாராளுமன்றத்தில் கிடைத்த ஓர் பதிலில் இருந்து தான் இந்தியாவில் ஓர் மிகப்பெரிய பஞ்சம் நிலவுவது கண்டறியப்பட்டது. இந்தியாவில் பணத்திற்கு மட்டுமல்ல, உடல் உறுப்பு தானத்திற்கும் கூட பெரியளவில் பஞ்சம் நிலவுகிறது.
தெரியாமல் ஒருவர் இறப்பது, வேறு ஆனால், தடுக்க முடியும் அளவிற்கு தொழில்நுட்பம், மருத்துவம் இருந்தும் பல உயிர்கள் இந்தியாவில் தினசரி மடிந்துக் கொண்டிருக்கின்றன. நமது நாட்டில் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக லட்சக்கணக்கான மக்கள் காத்திருக்கிறார்கள்.
ஆனால், கோடிக்கணக்கான மக்கள் வாழும் நமது நாட்டில் நூற்றுக்கணக்கில் கூட தானம் செய்யவில்லை என்பது தான் பெரும் சோகமே....

சிறுநீரகம்
இந்தியாவில் இரண்டு லட்சத்திற்கும் மேலானவர்கள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கிறார்கள். ஆனால், வெறும் ஆறாயிரம் சிறுநீரகங்கள் தான் பெறக்கூடிய நிலையில் இருக்கின்றன. அதாவது வெறும் 3% பேரினால் தான் பயனடைய முடியும்.

இதயம்
இந்தியாவில் இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக ஐம்பதாயிரம் இதயங்கள் தேவை. ஆனால், பெறக்கூடிய நிலையில் இருப்பதோ வெறும் 15, அதாவது 0.03%.

கல்லீரல்
இந்தியாவில் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக முப்பதாயிரம் கல்லீரல் தேவைப்படுகிறது. ஆனால், பெறக்கூடிய நிலையில் இருப்பதோ 1,500 தான். அதாவது 5% மட்டுமே.

ஒட்டுமொத்தமாக
ஏறத்தாழ ஒட்டுமொத்தமாக உடலுறுப்பு மாற்று அறுவைசிகிச்சைக்காக தேவைபடுவதோ 2.8 லச்சம் உறுப்புக்கள். ஆனால், 7,000 மட்டுமே பெறக்கூடிய நிலையில் இருக்கின்றன.

அமெரிக்கா
அமெரிக்காவில் உடலுறுப்பு தானத்திற்கு தேவையானவை 1,21,501; பெறக்கூடிய நிலையில் இருப்பவை 30,970. அதாவது 25.5% பேர் பயனடைய முடியும். இது கடந்த ஆண்டு (2015) எடுக்கப்பட்ட கணக்கின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ள விகிதம்.

மக்கள் தொகை
உலகிலேயே இரண்டாவது அதிக மக்கள் தொகையுள்ள நாடு என்ற சாதனை மட்டும் தான் கையிருப்பாக வைத்திருக்கிறோம். மண் திங்க போகும் உறுப்பை தானம் செய்ய ஏனோ நமக்கு தோன்றுவதில்லை. இறந்தும் உயிரோடு இருக்க உதவும் இந்த தானத்தை அனைவரும் மறவாது செய்ய வேண்டும்.



Click it and Unblock the Notifications
