எச்சரிக்கை! வீட்டில் பயன்படுத்தும் இந்த பொருட்கள் புற்றுநோயை உண்டாக்கும் என தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

தற்போது நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உட்பொருட்கள் சேர்க்கப்பட்ட ஏராளமான பொருட்கள் கடைகளில் விற்கப்படுகிறது. அதில் பெரும்பாலான பொருட்கள் அன்றாடம் நாம் உபயோகிக்கும் பொருட்கள் தான். அவற்றில் குறிப்பிட்ட சில பொருட்களை நாம் வீடுகளிலும், அலுவலகங்களிலும் பயன்படுத்தி வருகிறோம்.

Common Household Products To Be Banned Because They Are Believed To Cause Skin Cancer

இந்த பொருட்கள் அளவுக்கு அதிகமாக நம் சருமத்தில் படும்போது, அதில் உள்ள உட்பொருட்கள் சருமத்தின் வழியே உடலினுள் புகுந்து பல கொடிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இங்கு அந்த கொடிய பொருட்களும், அதற்கான சிறந்த மாற்று பொருட்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செயற்கை சுவையூட்டிகள்

செயற்கை சுவையூட்டிகள்

பலரும் சர்க்கரையைத் தவிர்த்து, சுவையூட்டிகளுக்கு மாறியுள்ளனர். ஆனால் செயற்கை சுவையூட்டிகளைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கை சுவையூட்டிகளை தேர்ந்தெடுப்பது தான் நல்லது. அதில் தவிர்க்க வேண்டிய சுவையூட்டிகள் இதோ!

* அக்சல்ஃப்ளேம் கே : புற்றுநோய் கட்டிகளை உண்டாக்கும் மற்றும் கர்ப்பத்தைப் பாதிக்கும்.

* அஸ்பார்டேம் : இது சரும புற்றுநோயை உண்டாக்கக்கூடியவை.

* சக்சாரின் : சிறுநீர்ப்பை புற்றுநோயுடன் தொடர்புடையது.

* சார்பிட்டோல் : இது குடலில் சரியாக செரிமானமாகாமல், வயிற்றுப்போக்கு, வீக்கம் மற்றும் வாய்வுத் தொல்லையை ஏற்படுத்தும்.

சிறந்த மாற்றுப் பொருள்

சிறந்த மாற்றுப் பொருள்

இனிப்பு சுவைக்கு செயற்கை சுவையூட்டிகளுக்கு பதிலாக தேன் பயன்படுத்துவது சிறந்த மாற்றாக இருக்கும். மேலும் தேன் ஏராளமான மருத்துவ குணங்களை தன்னுள் கொண்டதும் கூட.

வீட்டை தூய்மைப்படுத்தும் பொருட்கள்

வீட்டை தூய்மைப்படுத்தும் பொருட்கள்

வீட்டை சுத்தமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள ஏராளமான கெமிக்கல் பொருட்கள் விற்கப்படுகின்றன. அதில் குறிப்பிட்ட சில பொருட்கள் நம்மை பாக்டீரியாக்களில் இருந்து நல்ல பாதுகாப்பை வழங்கினாலும், உண்மையில் அவை உடல் ஆரோக்கியத்தை மெதுவாக அழிக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அதில் குறிப்பாக வீட்டை தூய்மைப்படுத்தும் செயற்கை பொருட்களை சுவாசிக்கும் போது, அதனால் சுவாச பிரச்சனைகள், ஆஸ்துமா மற்றும் ஹார்மோன் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

சிறந்த மாற்றுப் பொருள்

சிறந்த மாற்றுப் பொருள்

வினிகர் மற்றும் பேக்கிங் சோடா இரண்டையும் ஒன்றாக கலந்து வீட்டை சுத்தம் செய்தால், பாக்டீரியாக்கள், வைரஸ்கள் அழிக்கப்பட்டு, வீடு சுத்தமாகவும், துர்நாற்றமின்றியும் இருக்கும்.

பொடுகை நீக்கும் ஷாம்புக்கள்

பொடுகை நீக்கும் ஷாம்புக்கள்

பொடுகைப் போக்கும் என்று விற்கப்படும் ஷாம்புக்களில் புற்றுநோயை உண்டாக்கும் உட்பொருட்கள் இருப்பதாக, ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. எனவே பொடுகைப் போக்க, கெமிக்கல் கலந்த ஷாம்புக்களைப் பயன்படுத்தாமல், இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்துங்கள்.

சிறந்த மாற்றுப் பொருள்

சிறந்த மாற்றுப் பொருள்

5 டேபிள் ஸ்பூன் மைல்டு ஷாம்புவுடன், சிறிது ரோஸ்மேரி இலைகள், 5 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு அல்லது ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து, வாரத்திற்கு 4 முறை தலைக்கு பயன்படுத்துங்கள். இதனால் பொடுகு மறைந்துவிடும்.

ஆன்டி-பாக்டீரியல் சோப்பு

ஆன்டி-பாக்டீரியல் சோப்பு

கைகளில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகளை அழிக்கவென்று விற்கப்படும் ஆன்டி-பாக்டீரியா சோப்புக்களில் ட்ரைக்ளோசன் என்னும் உட்பொருள் இருப்பதாக உணவு மற்றும் மருந்து நிர்வாகம் சமீபத்தில் கண்டறிந்துள்ளது. இந்த உட்பொருள் விரைவில் குழந்தைகளைப் பூப்படையச் செய்வதாகவும், மலட்டுத்தன்மை, புற்றுநோய் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடியதாகவும் சொல்லப்படுகிறது.

சிறந்த மாற்றுப் பொருள்

சிறந்த மாற்றுப் பொருள்

கெமிக்கல் கலந்த சோப்புக்களைத் தவிர்த்து, வீட்டிலேயே சோப்புக்களை தயாரித்து பயன்படுத்துவதால், சரும ஆரோக்கியத்துடன் உடல் ஆரோக்கியமும் பாதுகாப்புடன் இருக்கும். அதற்கு ஒரு கெமிக்கல் இல்லாத சோப்பை வாங்கி துருவிக் கொள்ள வேண்டும். பின் அதனை குறைவான தீயில் ஒரு பாத்திரத்தில் உருக விடவும். பின் அதில் 30 துளிகள் லாவெண்டர் அல்லது ரோஸ்மேரி எண்ணெளை விட்டு, நன்கு கிளறி இறக்கி, ஒரு டப்பாவில் ஊற்றி, உலர வைத்தால், சோப்பு தயார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Common Household Products To Be Banned Because They Are Believed To Cause Skin Cancer

Here are some common household products to be banned because they are believed to cause skin cancer. Read on to know more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter