Latest Updates
-
இந்தியர்களே நுழைய முடியாத இந்தியாவிலுள்ள இடங்கள் - இதில் 3 இடங்கள் தமிழ்நாட்டில்தான் இருக்காம் தெரியுமா? -
சூரியன்-சந்திரனால் உருவாகும் வியாதிபாத யோகத்தால் ஜூலை மாதம் பணக்கஷ்டத்தில் சிக்கப்போகும் 4 ராசிகள் -
உருளைக்கிழங்கு இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பொடிமாஸ் பண்ணுங்க - டேஸ்ட் டக்கரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி பெண்களின் கழுத்தை பார்த்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லிரலாமாம் - கவனிச்சு பாருங்க -
வரகரிசி மசாலா தோசை - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 25 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு குழப்பமான நாளாக இருக்குமாம் -
கஜலட்சுமி யோகம் கடக ராசியில் இருப்பதால் கோடீஸ்வர யோகாக்கத்தால் பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வேர்க்கடலையும், கொத்தமல்லியும் இருந்தா இந்த மாதிரி சுருக்குனு சட்னி அரைங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
July 2026: ஜூலை மாதத்தின் முக்கியமான நாட்கள் மற்றும் விரத தினங்கள் என்னென்ன தெரியுமா? -
2 பிரட்டும், அரை கப் கடலை மாவும் இருந்தா டக்குனு இந்த டிபனை பண்ணுங்க - டேஸ்ட்டா, ஆரோக்கியமா இருக்கும்
பலரும் அறியாத மனித உடலை பற்றிய வினோதமான தகவல்கள்!
இவ்வுலகில் இன்றளவும் பெரிதாக புரிந்துக் கொள்ள முடியாமல் இருக்கும் சிக்கலான மெக்கானிஸம் மனித உடல்கூறு. இதை அறிவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் உட்பட பலரும் ஒப்புக் கொண்டும் உள்ளனர்.
நீங்கள் பயன்படுத்தும் இந்த மருந்துகளின் விசித்திர பயன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
பிறப்பில் இருந்து இறப்பு வரை மனித உடலில் ஒவ்வொரு நொடியும் பல விஷயங்கள் ஓயாது நடந்துக் கொண்டே தான் இருக்கிறது. நீங்கள் பிடிக்கும் ஓர் சிகரெட்டில் 4,800 கெமிக்கல் இருக்கின்றன இதில் 69 கெமிக்கல் தான் புற்றுநோய் உண்டாக்குகிறது என இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் அழகை அதிகரிக்க பெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்!!!
இயற்கையாகவும், செயற்கையாகவும் நமது உடலில் பல வினோதங்கள் நொடிக்கு நொடிக்கு நடந்துக் கொண்டே தான் இருக்கிறது....

ஒவ்வொரு நிமிடமும்
நமது உடலில் நிமிடத்திற்கு 35மில்லியன் செல்கள் இறக்கின்றன.

90 நொடிகள்
உலகில் ஒவ்வொரு 90 நொடிகளுக்கும் ஒரு பெண் பிரசவம் அல்லது குழந்தைப்பேறு காரணமாக உயிர் இழக்கிறார்.

கேட்கும் திறன்
ஒரு மனிதன் இறக்கும் போது, காது கேட்கும் திறனை தான் அவன் கடைசியாக இழக்கிறான்.

மருத்துவர்களின் கையெழுத்து
மருத்துவர்களின் குழப்பமான கையெழுத்தினால் மட்டுமே வருடத்திற்குக் 7,000 பேர் இறக்கிறார்கள்.

புற்றுநோய் மூலம் நடிகர்
பில்லி ஓவென் என்ற நபர் புற்றுநோய் காரணத்தினால் தனது ஒரு கண்ணையும் பாதி முகத்தையும் இழந்த பிறகு சோம்பி படத்தில் நடிகராக நடித்தார்.

மல்டி வைட்டமின்
உடலில் அதிகரிக்கும் மல்டி வைட்டமின்ஸ் புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் அதிகரிக்க காரணியாக இருக்கிறது என ஓர் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சிகரெட்
ஒரு சிங்கிள் சிகரெட்டில் 4,800 கெமிக்கல்கள் இருக்கின்றன. அதில் 69 தான் புற்றுநோய் உண்டாக்குகின்றன என இதுநாள் வரை கண்டறியப்பட்டுள்ளது.

புற்றுநோய்
ஏறத்தாழ நூறு வகைக்கும் மேலான புற்றுநோய்கள் இருக்கின்றன. நமது உடலில் எங்கு வேண்டுமானாலும் புற்றுநோய் கட்டி உண்டாகும் அபாயம் இருக்கிறது.

மரண எண்ணிக்கை
எச்.ஐ.வி, டி.பி, மலேரியா போன்றவற்றின் கூட்டு எண்ணிக்கை சேர்க்கையை விட அதிகளவு மரணம் புற்றுநோய் காரணத்தால் ஏற்படுகின்றன.

20,000
ஒருநாளுக்கு 20,000 பேர் புற்றுநோய் காரணத்தினால் உயிர் இழக்கின்றனர்.

இதய துடிப்பு
நீங்கள் கேட்கும் இசைக்கு ஏற்ப உங்கள் இதய துடிப்பு மாறும்.

கிச்சன்
நீங்கள் பாத்திரம் கழுவ பயன்படுத்தும் கிச்சன் ஸ்பான்ஞ்சில் இருந்து இருபது நிமிடத்திற்கு ஒரு புதிய பாக்டீரியா வளர்கிறது.

எலும்புகள்
நாம் அனைவரும் 270 எலும்புகளுடன் பிறந்து, 206 எலும்புகளுடன் இறக்கிறோம்.

1923
1923-ம் ஆண்டு பிறந்த 80% சோவியத் ஆண்கள் இரண்டாம் உலகப் போரில் இறந்துவிட்டனர்.

ஒவ்வொரு மணி நேரமும்
அமெரிக்காவில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு நபராவது குடித்துவிட்டு வண்டி ஓட்டும் ஓட்டுனரால் கொல்லப்படுகிறார்.



Click it and Unblock the Notifications