தினமும் ஒரு கப் கோலா குடிச்சா என்ன ஆகும்? - ஹார்வர்ட் ஆய்வின் அதிர்ச்சி தகவல்கள்!

Posted By:
Subscribe to Boldsky

உணவருந்திய பிறகு தண்ணீர் குடிக்கும் பழக்கம் போய், சோடா பானங்கள் குடிக்கும் பழக்கம் பெருகி வருகிறது உலகெங்கிலும். இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணம் விளம்பரம் தான். விளம்பரத்தை நம்பி நமது உடல்நலத்தை பறிகொடுத்து வருகிறோம் என்பதை நாம் சுத்தமாக மறந்துவிட்டோம்.

காலம் காலமாக சாம்பாரும், ரசமும் தான் தமிழ் மக்களை காப்பாற்றி வருகிறதாம் - ஆய்வில் தகவல்!

சமீபத்தில் ஹார்வர்ட் பள்ளி நடத்திய ஓர் ஆய்வில் தினமும் ஒன்று அல்லது இரண்டு பாட்டில் சோடா பானம் குடிப்பதால் மாரடைப்பு, நீரிழிவு, ஸ்ட்ரோக் போன்ற அபாய உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன என கூறப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் அவற்றில் இருக்கும் செயற்கை இனிப்பூட்டி தான்.

தேனை ஏன் சூடு செய்து சாப்பிடக்கூடாது என உங்களுக்கு தெரியுமா?

எனவே, இந்த பழக்கத்தை கூடிய விரைவில் குறைத்துக் கொள்ளுங்கள் என்ற ஆய்வறிக்கையில் ஹார்வர்ட் நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீரிழிவு நோய் அபாயம்

நீரிழிவு நோய் அபாயம்

தினமும் ஒன்றல்லது இரண்டு பாட்டில் சோடா பானம் குடிப்பதால், 26% அதிகமாக டைப் 2 நீரிழிவு பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது.

மாரடைப்பு

மாரடைப்பு

நாள்தோறும் ஒன்றல்லது, இரண்டு பாட்டில் சோடா பானம் பருகுவதால் 36% சதவீதம் அதிகம் மாரடைப்பு மற்றும் பற்ற இதய பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

ஸ்ட்ரோக்

ஸ்ட்ரோக்

நீரிழிவு, மாரடைப்பு மட்டுமின்றி, தினமும் ஒன்றல்லது இரண்டு பாட்டில் சோடா பானம் பருகுவதால் 16% அதிகம் ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயமும் இருக்கிறது என ஹார்வர்ட் ஆய்வறிக்கையின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய காரணம்

முக்கிய காரணம்

சோடா பானம் குடிப்பதால் டைப் 2 நீரிழிவு, இதய கோளாறுகள் மற்றும் ஸ்ட்ரோக் போன்றவை அதிகமாக முக்கிய காரணமாக இருப்பது, இதில் கலக்கப்படும் இனிப்பூட்டிகள் தான் என்று கூறப்படுகிறது.

ஹார்வர்ட் பள்ளி

ஹார்வர்ட் பள்ளி

இந்த ஆய்வு ஹார்வர்ட் பள்ளியில் (Harvard T.H. Chan School of Public Health) பேராசிரியர் பிரான்க் ஹு என்பவரது தலைமையில் நடத்தப்பட்டது. "இனிப்பூட்டிகள் கலப்புள்ள பானங்களை பருகுவதால், பல அபாய உடல்நல பாத்திப்புகள் ஏற்படுகின்றன. இவற்றை உட்கொள்வதை உடனடியாக நாம் குறைத்துக் கொள்ள வேண்டும்" என பிரான்க் ஹு கூறியிருக்கிறார்.

உடல்பருமன் அதிகரிப்பு

உடல்பருமன் அதிகரிப்பு

ஒன்று அல்லது அதற்கு மேலான அளவு சோடா பானங்கள் தினமும் குடிப்பதால் அதிகப்படியான கலோரிகள் உடலில் சேர்கின்றன. இதனால் மாரடைப்பு, நீரிழிவு மட்டுமின்றி உடல் பருமன் அதிகரித்தாலும் ஏற்படுகிறது. அதிகரிக்கும் உடல் எடை இதயத்தின் வலிமையை குறைக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கல்லீரல் செயலிழப்பு

கல்லீரல் செயலிழப்பு

இதே நாள்பட, நாள்பட., கல்லீரலை பாதிக்கும் எனவும் இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது என பேராசிரியர் பிரான்க் ஹு கூறியுள்ளார். அதிகப்படியான சோடா பானம், நமது உடலில் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்கிறது. இதனால் தான் நீரிழிவு நோய் பாதிப்பு வர காரணமாக இருக்கிறது. இது தொடர்ச்சியாக ஏற்படும் பட்சத்தில் கல்லீரல் பாதிக்கும் அபாயமும் இருக்கிறது.

எலும்பு வலி, மூட்டு வலி

எலும்பு வலி, மூட்டு வலி

சோடா பானத்தில் இருக்கும் அதிகப்படியான பிரக்டோஸ் எனும் இனிப்பு தான் இவற்றுக்கு எல்லாம் காரணம். இது அதிகப்படியாக இரத்தத்தில் கலக்கும் போது, மூட்டு வலி, எலும்பு பலவீனம் போன்றவை ஏற்படுவதற்கான அபாயங்களும் இருக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Two Cans Of Soda Per Day Gifts You Heart Attack Diabetes Stroke

Just TWO cans of sugary fizzy drinks a day 'significantly increases the risk heart attack, diabetes and stroke, Take a look.
Subscribe Newsletter