ஓயாமல் வேலை செய்யும் ஐ.டி. வாசிகள் தவிர்க்க வேண்டிய சில உடல்நலத் தவறுகள்!!!

By: John
Subscribe to Boldsky

வெற்றியும், தோல்வியும் மாறி, மாறி வர வாழ்க்கை வட்டமும் அல்ல, தோல்வியை தவிர்க்க ஓயாமல் ஓட அது ஓட்ட பந்தயமும் அல்ல. வாழ்க்கை மிகவும் எளிமையானது, அதை கடினமாக்குவதும், இலகுவாக்குவதும் அவரவர் கைகளில் தான் இருக்கின்றது.

பெண்களை போலவே, ஆண்களையும் பாதிக்கும் மார்பக புற்றுநோய் - கூறப்படாத உண்மைகள்!!

சொல்ல போனால், வாழ்க்கை ஒரு பலூன் போல, அதில் எவ்வளவு வேணாலும் காற்றினை (பணம்) ஏற்றலாம். ஆனால், அளவுக்கு மீறி காற்று அதிகமாகும் போது அது வெடிப்பது மட்டுமின்றி, சந்தோசத்தையும் இழக்க செய்கிறது.

ஞாபக மறதியை அதிகரிக்கும் சில தீயப் பழக்கவழக்கங்கள்!!

வேலை, வேலை என தான் செய்யும் வேலைகளிலேயே மூழ்கி இருப்பவர்கள் சிலர், தன்னை சுற்றியும், தன் உடலிலும் என்ன நடக்கிறது என்று கூட யோசிப்பது இல்லை. இனி, அவ்வாறான வேலைகளில், அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் செய்யும் தவறு, அதனால் விளையும் உடல்நலப் பிரச்சனைகள் குறித்து பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சீரான இடைவேளையில் தண்ணீர் பருகுங்கள்

சீரான இடைவேளையில் தண்ணீர் பருகுங்கள்

பெரும்பாலும், ஓர் வேலையில் அமர்ந்துவிட்டால், அதை முடிக்கும் வரை எழாமல் மணிக்கணக்காக இருப்பார்கள். அந்த வேளைகளில் பெரும்பாலானோர் சரியாக தண்ணீர் கூட பருகமாட்டார்கள் (ஆனா, கோக், பெப்சி எல்லாம் நிறைய உள்ள போகும்). சீரான இடைவேளையில் தண்ணீர் குடிக்க வேண்டியது நமது உடல் நலத்திற்கு அவசியம். நீரின் அளவை உடலில் சரியான அளவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

படிகளை பயன்படுத்துங்கள்

படிகளை பயன்படுத்துங்கள்

ஒரே இடத்தில் அதிகமாக உட்கார்ந்து வேலை செய்வதனால், உடல் வேலை மிகவும் குறைவாக இருக்கும். ஆதலால், கலோரிகள் கரையாமல் கொழுப்பாக மாற வாய்ப்புகள் அதிகம். எனவே, குறைந்தது லிப்டையாவது தவிர்த்து, படிகளை பயன்படுத்துவது, உங்கள் உடலுக்கு நல்லது.

கார் பார்க்கிங்

கார் பார்க்கிங்

முடிந்த வரை உங்கள் கார், அல்லது பைக்கை பார்கிங் ஏரியாவின் தொலைவில் வைத்துவிடுங்கள், இதனாலாவது கொஞ்ச தூரம் நடக்க முடியும். உடல்நலத்திற்கு நடைபயிற்சி மிகவும் முக்கியம் அமைச்சரே!!!

எம்.எஸ்.ஜி

எம்.எஸ்.ஜி

சைனீஸ் உணவுகளில் அதிகமாக எம்.எஸ்.ஜி. இருக்க வாய்ப்புகள் உண்டு எனவே, அவற்றை தவிர்த்துவிடுங்கள். அதேப் போல, இன்ஸ்டன்ட் உணவுகளையும் தவிர்த்துவிடுங்கள். அதிக உடல் வேலையும் செய்யாமல், இவ்வாறன உணவுகள் சாப்பிடுவது, உடலுக்கு கேடு விளைவிக்கும்.

உடல்நலத்தை பற்றி நிறைய படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்

உடல்நலத்தை பற்றி நிறைய படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்

அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது, உடல்நலத்தை பாதுகாப்பது பற்றியும் படித்துத் தெரிந்துக் கொள்ளுங்கள். மன அழுத்தம் இன்றி வேலை செய்யுங்கள்.

டிராயரில் தின்பண்டங்கள்

டிராயரில் தின்பண்டங்கள்

தாங்கள் அமர்ந்திருக்கும் டிராயரில் தின்பண்டங்களை நிறைத்து வைத்திருப்பது. கணினியை விட்டு நகர முடியாத அளவு வேலை செய்யும் போது, அந்த நொறுக்கு தீனிகள் தான் அவர்களது காலை, மதிய, இரவு உணவு. இவ்வாறு ஊட்டச்சத்துகள் அற்ற நொறுக்கு தீனிகள் தான் உடல்நலத்தை பாதிக்கும் முதல் கருவி ஆகும்.

சாப்பிட்டால் அதிகமாக சாப்பிடுவது

சாப்பிட்டால் அதிகமாக சாப்பிடுவது

வேலை, வேலை என சாப்பிடாமல் உழைத்துவிட்டு, ஆன்லைன் அல்லது ஹோட்டல் சென்று மொத்ததமாக தின்று தீர்த்துவிடுவது. இவ்வாறு செய்வதனால் உங்கள் மனதும், வயிறும் தான் நிறையும். ஆரோக்கியம் மொத்தமாக குறைந்துவிடும். சீரான முறையில் உணவு எடுத்துக்கொள்வது தான் சிறந்தது மற்றும் உடல்நலத்துக்கு நல்லது.

வார இறுதி பார்ட்டி

வார இறுதி பார்ட்டி

ஐந்த நாள் உட்கார்ந்து விழிப் புடைக்க வேலை செய்துவிட்டு, வார இறுதியில் அதே விழி சிவக்க குடிக்க வேண்டியது. ஆக மொத்தம் 24x7 ஆரோக்கியத்திற்கு விடுமுறை அளிப்பதே ஐ.டி. வாசிகள் பலரின் பழக்கமாகிவிட்டது.

"டீம் லன்ச்"

ஐ.டி.யில் மாதம் ஒருமுறை ஒலிக்கும் சொல் "டீம் லன்ச்". சிலர் இந்த மதிய உணவிற்காக காலை உணவுகளை கூட தவிர்த்துவிடுவார்கள். உண்மையில், காலை உணவு தான் உடல்நலத்திற்கு மிகவும் முக்கியமானது. ஆனால், வேலை பளு, ஷிப்ட் வேலைகள் என்ற முரண்பாடான வாழ்வியல் முறையில் பெரும்பாலானோர் காலை உணவை தான் தவிர்க்கின்றனர்.

சாக்லேட்

சாக்லேட்

சாக்லேட் சாப்பிடுவது உங்களுக்கு பிடித்தமான விஷயமாக இருக்கும். சிலரது கணினி அருகேவே சில பல சாக்லேட்டுகள் சிதறிக் கிடக்கும். ஆனால், சாதாரண சாக்லேட் சாப்பிடுவதை தவிர்த்து டார்க் சாக்லேட் சாப்பிட தொடங்குங்கள், இது உங்கள் உடல்நலத்திற்கு நல்லது. ஏனெனில், இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் உடல் எடை குறையவாவது உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ten Health Hacks For Workaholics

Be either hard worker or smart worker, but don't be a workaholics. Do you know about the health hacks for workaholics? read here.
Story first published: Friday, June 12, 2015, 15:25 [IST]
Subscribe Newsletter