For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வலி நிவாரண மாத்திரைகளை அதிகமாக உட்கொள்வதனால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

|

இன்றைய சூழ்நிலையில் நம்மில் பலருக்கும் வலி நிவாரண மாத்திரைகளை உட்கொள்ளும் பழக்கம் அதிகரித்து வருகிறது. ஏதேனும் சிறு வலியாக இருந்தாலும் கூட உடனே அருகில் இருக்கும் மருந்தகத்திற்கு சென்று வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டுவிடுகிறோம்.

பெரிதோ, சிறிதோ அது எந்த ஒரு உடல்நலக் கோளாறாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை இன்றி எந்த மருந்து மாத்திரைகளையும் உட்கொள்ள வேண்டாம், முக்கியமாக வலி நிவாரண மாத்திரைகள்.

ஏனெனில், வலி நிவாரண மாத்திரைகளை அதிகமாக உட்கொள்வதனால் கல்லீரல் பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, வயிற்றுப் புண், கருச்சிதைவு, மன தளர்ச்சி மற்றும் இரத்தம் மெலிந்து போதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கல்லீரல் பாதிப்பு

கல்லீரல் பாதிப்பு

பொதுவாகவே எல்லா மருந்துகளிலும் ஆல்கஹால் தன்மை சிறிதளவு இருக்கும். வலி நிவாரண மாத்திரைகளில் கொஞ்சம் அதிகமாக சேர்க்கப்பட்டிருக்கும். அதிலும் அதிக டோஸ் உள்ள வலி நிவாரண மாத்திரைகளை சாப்பிடும் போது நாள்பட்ட கல்லீரல் பாதிப்பு ஏற்படும்.

வயிற்று புண்

வயிற்று புண்

மருந்து மாத்திரைகள் அதிகமாக சாப்பிடுவோருக்கு சாதாரணமாகவே வயிற்றுப் புண் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. அதிலும், வலி நிவாரண மாத்திரைகள் அதிகமாக சாப்பிடுவோருக்கு வயிற்று புண் பிரச்சனைகள் விரைவாக ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சிறுநீரகம் செயலிழப்பு

சிறுநீரகம் செயலிழப்பு

நீங்கள் அதிகமாக வலி நிவாரண மாத்திரைகள் சாப்பிடுபவராக இருந்தால் இரத்த அழுத்தமும், நீரிழிவு நோயும் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதன் காரணத்தால், சிறுநீரகங்கள் பாதிப்பு அடையும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

கருச்சிதைவு

கருச்சிதைவு

வலி நிவாரண மாத்திரைகளில் அதிகம் சாப்பிடுவதனால், கருச்சிதைவு ஏற்படும். இது மட்டுமின்றி, கருத்தரிக்க விரும்புவோரும் வலி நிவாரண மாத்திரைகளை உட்கொள்ள வேண்டாம். ஏனெனில், அது கருத்தரிக்கும் சதவீதத்தை குறைத்து விடும்.

மன தளர்ச்சி

மன தளர்ச்சி

அதிக அளவில் வலி நிவாரண மாத்திரைகள் சாப்பிடுவதனால், உங்கள் செயல்திறனில் குறைபாடு ஏற்படும். இதனால், உங்களுக்கு மன சோர்வும், தளர்வும் ஏற்படும். எனவே, எக்காரணம் கொண்டும் மருத்துவரின் ஆலோசனை இன்றி வலி நிவாரண மாத்திரைகளை சாப்பிட வேண்டாம்.

இரத்தம் மெலிதல்

இரத்தம் மெலிதல்

அதிகமாக வலி நிவாரண மாத்திரைகளை உட்கொள்வதனால், இரத்தத்தின் அடர்த்திக் குறைந்துவிடும். இது உங்களுக்கு பல உடல்நல கோளாறுகள் ஏற்பட காரணமாக இருக்கின்றது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Six Surprising Side Effects of Painkiller Overdose

Think your over-the-counter pain drug is perfectly safe? It usually is when used as directed, but there are some potentially dangerous side effects that you should be aware of.
Desktop Bottom Promotion