Latest Updates
-
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
Independence Day 2026: இந்த ஆண்டு இந்தியா கொண்டாடுவது 79-வது சுதந்திர தினமா? 80-வது சுதந்திர தினமா? -
பீர் பாட்டில் ஏன் எப்போதும் பச்சை அல்லது ப்ரவுன் நிறத்தில் மட்டுமே உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 4 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் கம்பு இருந்தா, காலையில் இப்படி ஒருடைம் செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும்
விந்தணு உற்பத்தி அதிகரிக்க ஆராய்ச்சியாளர்கள் புதியக் கண்டுப்பிடிப்பு!!
கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்களோடு ஒப்பிடுகையில், தற்போது வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஆண்களுக்கு, ஆண்மைத் தன்மை பெரும்பாலும் குறைவாக தான் இருக்கின்றது என்று முன்பே ஓர் ஆராய்ச்சியில் கூறியிருந்தனர்.
ஆண்களின் விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் குறைந்த விலையில் கிடைக்கும் சில உணவுப் பொருட்கள்!!!
இதற்கு கரணம் நமது உணவு பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றமும், உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் இராசயனங்களும் தான். அதிலும், இன்ஸ்டன்ட் உணவுகள் மற்றும் பதப்படத்தி வைக்கப்படும் உணவுகள் பெருவாரியாக பாதிப்பை ஏற்படுத்துகிறது.
விந்தணுவிற்காக ஓர் ஆண் மகனை கடத்தி கற்பழித்த மூன்று இளம் பெண்கள் - அதிர்ச்சி!!!
இந்த காரணங்களினால், விந்தணு உற்பத்தி குறைதல், விறைப்புத்தன்மை குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனால், ஆண்மைக் குறைவு ஏற்படுகிறது. இதற்கு தீர்வளிக்க தான் பிரான்ஸ்சில் உள்ள ஆராய்ச்சி மையம் ஓர் புதிய கண்டுப்பிடிப்பை கண்டுப்பிடித்துள்ளனர்...

ஆய்வுக்கூடத்தில் விந்தணு வளர்ச்சி
உலகில் முதன் முறையாக கருப்பையின் வெளியே விந்தணுவை வளர்ச்சியடைய வைத்திருக்கின்றனர். பல வருடங்களாக, பல ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வரும் இந்த முறையில், பிரான்ஸ் நாட்டு ஆராய்ச்சி மையம் வெற்றிக் கண்டுள்ளது.

காலிஸ்ட்டெம் ஆய்வுக்கூடம் (Kallistem)
பிரான்ஸில் உள்ள காலிஸ்ட்டெம் ஆய்வுக்கூடத்தில், எஞ்சியுள்ள மரபணு கூறுகளை வைத்து முழுமையாக செயல்படும் விந்தணுவை உருவாக்கி அதை, செயல்படவும் வைத்திருக்கின்றனர்.

விந்தணு உறபத்தியை ஏற்படுத்த முடியும்
விந்தணு உற்பத்தி குறைவாக இருக்கின்ற அல்லது இல்லாத ஆண்களுக்கு, இது நல்ல தீர்வளிக்கும். இதன் மூலம், அவர்களுக்கு இயற்கையாக விந்தணு உற்பத்தியாக செய்யலாம் என்று அவர்கள் கூறியிருக்கின்றனர்.

இரண்டு வருடத்தில் ஆய்வு முடிவுக்கு வரும்
இது குறித்து மேலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும், முழு முடிவுகள் இரண்டு ஆண்டுகளுக்குள் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

பயனாளிகள்
இதன் மூலம், வருடத்திற்கு 50,000 கும் மேற்பட்ட ஆண்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கின்றனர்.

மதிப்பு
இந்த கண்டுப்பிடிப்பின் மூலம், இந்த ஆய்வுக்கூடத்திற்கு உலக அளவில் இருந்து 1.7பில்லியன் யூரோ வரை வருமானம் கிடைக்கலாம் என்று தெரிகிறது. ஆனால், 7 பில்லியன் யூரோ வரை வருமானம் ஈட்ட முடிவு செய்துள்ளதாக அந்த ஆராய்ச்சி மையத்தின் மேலாண்மை கூறியிருக்கிறது.

விந்தணு உற்பத்தி (Spermatogenesis)
இந்த விந்தணு உற்பத்தி முறை, ஆணின் உடலுக்குள் செலுத்த 72 நாட்கள் வரை ஆகும் என்றும், சீரான முறையில் இதை செலுத்த வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

15 வருட ஆராய்ச்சி
இதைக் கண்டுப்பிடிக்க 15 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வந்ததாக பிரான்சின் காலிஸ்ட்டெம் ஆய்வுக்கூட ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பலன்
இந்த கண்டுப்பிடிப்பின் மூலம் தந்தை ஆக அதிர்ஷ்டம் இல்லாமல் இருந்த ஆண்கள் எளிதாக குழந்தை பேரு பெற முடியும் என்றும். எப்போது அவர்கள் குழந்தைப் பெற்றுக் கொள்ள விரும்புகிறார்களோ, அப்போது இந்த முறையை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறியிருக்கின்றனர்.



Click it and Unblock the Notifications