For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரவு நல்ல தூக்கம் வர உதவும் அதிகாலை நடைப்பயிற்சி!!

By John
|

தூக்கம் ஒரு வரம் என்று தான் சொல்ல வேண்டும். அதுவும், இந்த செல்போன் யுகத்தில், நாமே தூங்க விரும்பினாலும், "டொயிங், டொயிங்..." ஒலி எழுப்பி நம்மை தூங்கும் முன்னே எழுப்பிவிடுகிறது நமது ஸ்மார்ட்போன்கள். என்ன செய்ய அந்த ஒலியை விரும்பி வைத்ததே நாம் தானே.

தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம்

நாள் முழுக்க ஓயாது வேலை, மாலை வீடு திரும்பினாலும் கூட நள்ளிரவு வரை லேப்டாப்பைக் கட்டிக்கொண்டு வீட்டிலும் வேலை என பணம் என்ற ஒற்றை வார்த்தைக்காக தானே நாம் இப்படி ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், அது நமது உறக்கத்தையும், ஆரோக்கியத்தையும் சீர்கெடுத்து நம்மிடம் இருந்து மருத்துவரிடம் ஓடிவிடுகிறது.

வாக்கிங்கை விட அதிக ஆரோக்கிய நன்மைகள் தரும் ஜாக்கிங்!!!

சரியான தூக்கம் இல்லாவிட்டால், மன அழுத்தம் மற்றும் உடல் பருமன் பிரச்சனைகள் அதிகமாகும். இவை இரண்டும் தான் பல உடல்நலக் கோளாறுகள் உண்டாக காரணியாக இருக்கின்றது. அதிகாலை வேளையில் நடைப்பயிற்சி செய்தால், இரவு நல்ல உறக்கம் வரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆய்வில் தகவல்

ஆய்வில் தகவல்

சமீபத்திய ஓர் ஆராய்ச்சியில் வியக்கும் வகையில், வீட்டு வேலைகள், குழந்தைகள் பராமரிப்பு மற்றும் அதிகாலை நடைப்பயிற்சி போன்றவை நல்ல உறக்கம் வர வழிசெய்கிறது என்று தெரியவந்துள்ளது.

நான்கு லட்சம் பேர்

நான்கு லட்சம் பேர்

இந்த ஆய்வில் மொத்தம் நான்கு லட்சம் பேர் பங்கெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யோகாவை விட சிறந்தது

யோகாவை விட சிறந்தது

சிலர் யோகா செய்தால் நல்ல உறக்கம் வரும் என்று கூறுவார்கள். ஆனால் இந்த ஆய்வின் மூலம், யோகா செய்வதைவிட, வீட்டு வேலைகள், தோட்ட வேலைகள், நடைப்பயிற்சி போன்றவை உறக்கம் வர நல்ல பயனளிப்பதாகக் கூறியுள்ளனர்.

பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில்

பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில்

அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் (University of Pennsylvania ), மருத்துவ துறையை சேர்ந்த மைகேல் கிராண்ட்னர் என்பவர் தான் இந்த தகவல்களை தனது ஆய்வின் முடிவில் கூறியிருக்கிறார்.

வீட்டுவேலை செய்தல்

வீட்டுவேலை செய்தல்

இந்த ஆய்வில் மிகவும் ஆச்சரியப்படும் வகையில், வீட்டு வேலை செய்பவர்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை அதிகமாக வருவதில்லை என்றும் தெரியவந்துள்ளது. எனவே, உடல் வளைந்து நெளிந்து நன்கு வேலை செய்தாலே நல்ல தூக்கம் வரும் என்று ஆராய்ச்சியாளர் மைகேல் கிராண்ட்னர் தெரிவித்துள்ளார்.

 நம்ம ஊரு பழமொழி

நம்ம ஊரு பழமொழி

நமது ஊர் பழமொழிகளிலேயே, இந்த கருத்தை பல ஆண்டுகளுக்கு முன்னர் பாடி சென்றிருக்கின்றனர். அதை, இந்த அதிமேதாவி அறிஞர்கள் இப்போது தான் கண்டறிந்துள்ளனர்.

மொபைல் பயன்படுத்துவது

மொபைல் பயன்படுத்துவது

இரவு அதிக நேரம் மொபைல், லேப்டாப் போன்றவற்றை பயன்படுத்துவது கண்களை மிகவும் பாதிப்பதாகவும். அதனால் தான் நிறைய பேர் தூக்கமின்மையினால் அவதிப்படுகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

நல்ல மாற்றம்

நல்ல மாற்றம்

ஒரு மாத காலம் நீங்கள் தொடர்ந்து காலை நடைப்பயிற்சி மேற்கொண்டு வந்தாலே, உங்கள் உறக்கத்தில் ஓர் நல்ல மாற்றம் தெரிய வரும் என்றும் இந்த ஆய்வை மேற்கொண்ட மைகேல் கிராண்ட்னர் கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Morning walk can give you a good nights sleep

If you are having sleep problems, walking a little can go a long way in resolving them, suggests a new research involving over 400,000 adults.
Desktop Bottom Promotion