Latest Updates
-
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம்
மூச்சு கணக்கின்படி ஆயுட்காலத்தை கணக்கிடுவது எப்படி - சித்தர்கள் கூற்று!!!
ஒரு மனிதன் நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனது ஆயுட்காலம் முடியும் போது அவனது வயது என்னவாக இருக்கும் என்று உங்களால் கணிக்க முடியுமா? முடியும் என்கிறது சித்தர்களின் கூற்று. ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதிக்கப்பட்ட வயதானது 100 ஆண்டுகள்.
21,600/1440=15. ஒரு நாளுக்கு 1440 நிமிடங்களாகும் (60 நிமிடம் x 24 மணி நேரம் =1440) மேற்கண்டவாறு கணக்கிட்டால் ஒரு மனிதனின் மூச்சு கணக்கை வைத்து அவனது வாழ்நாளை கணிக்க முடியுமாம்...,
இவ்வாறான தகவல் பல இணையங்கள், மற்றும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த அளவு உண்மை, பொய் இருக்கிறது என்று தெரியவில்லை....

15 மூச்சு
100 ஆண்டுகள் வாழ்ந்தால், அவர் நிமிடத்திற்கு 15 மூச்சுகள் விட்டுள்ளார்.

16 மூச்சு
93 ஆண்டுகள் வாழ்ந்தால், அவர் ஒரு நிமிடத்திற்கு 16 மூச்சுகள் விட்டுள்ளார்,

17 மூச்சு
87 ஆண்டுகள் வாழ்ந்தால், அவர் ஒரு நிமிடத்திற்கு 17 மூச்சுகள் விட்டுள்ளார்,

18 மூச்சு
80 ஆண்டுகள் வாழ்ந்தால், அவர் ஒரு நிமிடத்திற்கு 18 மூச்சுகள் விட்டுள்ளார்,

19 மூச்சு
73 ஆண்டுகள் வாழ்ந்தால், அவர் ஒரு நிமிடத்திற்கு 19 மூச்சுகள் விட்டுள்ளார்,

20 மூச்சு
66 ஆண்டுகள் வாழ்ந்தால், அவர் ஒரு நிமிடத்திற்கு 20 மூச்சுகள் விட்டுள்ளார்,

7 வருடம் ஆயுள் குறைகிறது
இவ்வாறு நிமிடத்திற்கு ஒவ்வொரு மூச்சு அதிகரிக்கும் போதும், நமது ஆயுளில் 7 வருடங்கள் குறைகிறது என்று இதில் கூறப்பட்டுள்ளது.

இதுவும் சத்தியமா??
2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு, 1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு மற்றும் "0 "முறை சுவாசித்தால் முடிவேயில்லை .இது சித்தர்களால் மட்டுமே முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அறிவியலா? சித்தர் ரகசியமா?? புரளியா??
அறிவியல் வளர்ந்துக் கொண்டிருக்கும் இந்நிலையில் சமூக வலைத்தளங்களில், இணையங்களில் இவ்வாறான செய்திகள் அதிகம் உலா வருகின்றன. இவை எந்த அளவு உண்மை, பொய் என்று கணிப்பது சிரமமாகவே இருக்கிறது. மற்றும் இந்த கணக்கு முறைக்கு முழுமையான மற்றும் தெளிவான விளக்கம் எங்கும் தரப்படவில்லை.

யோகா பயிற்சி
சிலர் பிராணயாமம் மூலம் இது சத்தியம் என்றும் கூறுகிறார்கள்.



Click it and Unblock the Notifications
