அஸ்வகந்தா செக்ஸ் வாழ்க்கைக்கு எப்படி மீண்டும் புத்துணர்ச்சி அளிக்கிறது?

By: Ashok CR
Subscribe to Boldsky

அஸ்வகந்தா என்பது நம் வாழ்க்கையில் நாம் கண்டுள்ள அதிசயமான மூலிகைகளில் ஒன்றாகும். இந்த மூலிகையை சிறிய அளவில், நீண்ட காலம் சாப்பிட்டு வந்தால், உங்கள் உடல் நலத்திலும் மன நலத்திலும் நல்ல விதமான தாக்கங்களை ஏற்படுத்தும். அஸ்வகந்தாவால் கிடைக்கும் மருத்துவ பயன்கள், அதை உட்கொள்ளும் அளவு, அதனால் கிடைக்கும் நன்மைகள் ஆகியவைகளைப் பற்றி தான் நாம் குறிப்பாக பார்க்க போகிறோம்.

செக்ஸ் வாழ்க்கையை அழிக்கும் ஆச்சரியமான சில உணவுகள்!!!

அஸ்வகந்தா என்பது ஒரு அபூர்வமான மூலிகை என்று ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகமாக கிடைக்கக்கூடிய குணப்படுத்தும் மூலிகை இது. பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் மூலிகை இது. "இந்திய குணசிங்கி" என்றும் இது அழைக்கப்படுகிறது. மேலும் சக்தி வாய்ந்த பாலுணர்வூட்டியாகவும் இது கருதப்படுகிறது.

காம உணர்வைத் தூண்டும் 10 உணவுகள்!!!

இதன் வேர்களில் பல உயரிய மருத்துவ குணங்கள் உள்ளது. இதனை காய வைத்து, பொடியாக்கி, மருந்தாக பயன்படுத்தப்படும். இப்போது அஸ்வகந்தாவின் முதன்மையான மருத்துவ குணங்கள் பற்றிப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சக்தி வாய்ந்த பாலுணர்வூட்டி

சக்தி வாய்ந்த பாலுணர்வூட்டி

பல்வேறு மக்கள் பல விதமான பாலியல் ரீதியான பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறார்கள். அதில் ஆணுறுப்பு விறைப்பை நீட்டிக்க முடியாதது, படுக்கையில் நீண்ட நேரம் செயல்பட முடியாமல் போதல், விறைப்பு செயல்பிறழ்ச்சி போன்றவைகள் குறிப்பிடத்தக்கவை. அஸ்வகந்தா என்ற அதிசயமான மூலிகை பாலியல் ரீதியான அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கும்.

உலகத்தில் உள்ள மிக சக்தி வாய்ந்த பாலுணர்வூட்டியாக இது உள்ளது. இதனை உண்ணும் போது, பாலியல் சக்தி அதிகரிக்கும், குறிப்பாக ஆண்களிடம். இது ஆண்மையை அதிகரித்து, படுக்கையில் நீண்ட நேரம் நீடிக்க உதவும்.

கருவுறும் தன்மையை மேம்படுத்தும்

கருவுறும் தன்மையை மேம்படுத்தும்

ஆண்கள் இதனை உண்ணும் போது, விந்தணு எண்ணிக்கையும் அதன் தரமும் அதிகரிக்கும். இதனால் கருவுறும் தன்மை அதிகரிக்கும்.

மீண்டும் புத்துணர்ச்சி

மீண்டும் புத்துணர்ச்சி

அஸ்வகந்தாவை உண்ணுவதால் ஒட்டு மொத்த உடலும் புதுப்பிக்கப்பட்டு, புத்துணர்வையும் பெறும். இது உங்கள் இனப்பெருக்க உறுப்புகளுக்கு புத்துணர்வை அளிக்கும், நரம்புகளை மறுபடியும் உயிர்ப்பிக்க செய்யும், உடலுக்கு புதிய வலிமையை அளிக்கும். உடலுக்கு புதிய வலிமையை தருவதால், உடலின் சோர்வும் வலுவின்மையும் நீங்கும். மேலும் மனதுக்கு அமைதியை அளிக்கும். கூடுதலாக நல்ல உறக்கத்தையும் கொடுக்கும்.

இளமையை பேணிடும்

இளமையை பேணிடும்

வயதாவதை தடுக்கும் வலிமையையும், இளமையை பராமரிக்கும் ஆற்றலையும் இந்த மூலிகை பெற்றுள்ளது. நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்களுக்கு எதிராக போராட உதவும்.

இரத்த கொதிப்பைக் குறைக்கும்

இரத்த கொதிப்பைக் குறைக்கும்

இரத்த கொதிப்பைக் குறைப்பதில் இந்த மூலிகை சிறப்பாக செயல்படும். மன அழுத்தத்தையும் கூட இது குறைக்கும்.

சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும்

சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும்

இந்த மூலிகையை உண்ணுவதால், சர்க்கரை அளவு குறைந்து, கட்டுப்பாட்டில் வைத்திடும். மேலும் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கும்.

கீல்வாதத்திற்கு சிகிச்சை

கீல்வாதத்திற்கு சிகிச்சை

மூட்டுக்களில் உள்ள அழற்சியை குறைத்து, கீல்வாதத்தை குணப்படுத்த இந்த மூலிகை உதவும்.

செரிமான கோளாறுகளை குணப்படுத்தும்

செரிமான கோளாறுகளை குணப்படுத்தும்

இந்த மூலிகை பசியை அதிகரித்து, செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை குணப்படுத்தி, செரிமான செயல்முறையை இயல்பாக்கும்.

தூக்கமின்மை

தூக்கமின்மை

தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் இந்த மூலிகையை உண்ணலாம். இது மனதுக்கு அமைதியை உண்டாக்கி, நல்ல நிம்மதியான தூக்கத்தை ஏற்படுத்தும்.

பெண்களுக்கு ஏற்படும் வெண்கழிவு

பெண்களுக்கு ஏற்படும் வெண்கழிவு

வெண்கழிவால் அவதிப்படும் பெண்கள் இந்த மூலிகையை உண்ணலாம். இது வெண்கழிவை குணப்படுத்தும்.

பிற பயன்கள்

பிற பயன்கள்

* பதற்றம் மற்றும் மன அழுத்தத்தை சிறப்பாக குணப்படுத்தும்.

* இரத்தத்தில் உள்ள இரும்புச்சத்து இந்த மூலிகையிலும் இருப்பதால், காசநோயால் அவதிப்படுபவர்களை இது சிறப்பாக குணப்படுத்தும்.

* பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மையை குணப்படுத்தும்.

பாலியல் சக்தியை அதிகரிக்க...

பாலியல் சக்தியை அதிகரிக்க...

1 ஸ்பூன் அஸ்வகந்தா லேகியம் அல்லது அரை ஸ்பூன் அஸ்வகந்தா பொடி அல்லது தினமும் 2 மாத்திரைகள் என தொடர்ந்து 1 மாதத்திற்கு உண்ணுங்கள். விந்தணு தரம், எண்ணிக்கை, பாலியல் சக்தி, நீடித்து நிற்கும் திறமையில் கண்டிப்பாக கவனிக்கத்தக்க மாற்றத்தை காண்பீர்கள்.

உடலுக்கும் நரம்புகளுக்கும் புத்துணர்ச்சி அளிக்க...

உடலுக்கும் நரம்புகளுக்கும் புத்துணர்ச்சி அளிக்க...

அரை ஸ்பூன் அஸ்வகந்தா பொடியுடன் தேன், கற்கண்டு மற்றும் நெய்யை கலந்து, அதனை உணவருந்திய பின் உண்ணவும். அஸ்வகந்தாவை திரிபலா பொடியுடனும் கலந்து தினமும் உண்ணலாம். இதனை எடுத்துக் கொண்ட பிறகு வெதுவெதுப்பான ஒரு டம்ளர் பாலை குடியுங்கள்.

இளமையை பராமரித்து வயதாவதை தடுக்க...

இளமையை பராமரித்து வயதாவதை தடுக்க...

அரை ஸ்பூன் அஸ்வகந்தாவுடன் நெல்லிக்காய் ஜூஸை கலந்து தினமும் குடியுங்கள். இதனால் உங்கள் இளமை பராமரிக்கப்பட்டு, நீண்ட காலம் இளமையுடன் இருக்கலாம்.

முன்னெச்சரிக்கைகள்

முன்னெச்சரிக்கைகள்

* பரிந்துரைக்கப்பட்ட அளவில் உண்ணும் போது, அஸ்வகந்தாவால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது.

* கர்ப்பமான பெண்கள் உண்ணும் போது சிசுவின் மீது தீவிரமான தாக்கம் ஏற்படும்.

* அஸ்வகந்தாவின் மீது போதிய ஆய்வுகள் நடத்தப்படவில்லை. அதனால் இதனை நீண்ட காலம் உட்கொண்டு வருவதால் ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றி தெரியவில்லை. இருப்பினும், அஸ்வகந்தா தைராய்டை ஊக்குவிக்கும் என ஓர் ஆய்வறிக்கை கூறியுள்ளது. இதனால் இதனை நீண்ட காலத்திற்கு அதிகமாக உட்கொள்ளும் போது, சில பேருக்கு தைராய்டு ஏற்படும்.

* இரத்த கொதிப்பு மற்றும் வயிற்று அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மூலிகையை எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுவதில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How Ashwagandha Can Be Used As Sexual Rejuvenator

There are various sexual problems faced by various people. Ashwagandha is a magical herb which cures all sexual related problems.
Story first published: Tuesday, January 20, 2015, 9:56 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter