உடல் நாற்றம் / நறுமணம் உங்களை பற்றி என்ன சொல்கிறது என்று தெரியுமா???

Posted By:
Subscribe to Boldsky

நாக்கு, கைவிரல்களின் நீளம், கருவிழிகளின் நிறம் என பலவற்றை வைத்து ஓர் நபரை பற்றி கண்டறியலாம் என நிறைய படித்திருப்போம். ஆனால், ஒரு நபரின் வாடை அதாவது, நறுமணம் / நாற்றத்தை வைத்து கூட ஒருவரை பற்றி தெரிந்துக் கொள்ளலாம் என உங்களுக்கு தெரியுமா?

உங்க ஆரோக்கியத்தைப் பத்தி உங்க நாக்கு என்ன வாக்கு சொல்லுதுன்னு தெரியுமா!!!

ஆம், ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு தனி நறுமணம் இருக்கிறது. ஒருவேளை நீங்கள் சென்ட்டு, வாசனை திரவியம் / பொருட்கள் உபயோகித்தால் அது தெரியாமல் இருக்கலாம். ஆனால், அனைவருக்கும் தனித்துவமான வாசனை இருக்கத்தான் செய்கிறது.

இந்த மூணுல நீங்க எந்த ரகம்??? தெரிஞ்சிக்க உடனே படியுங்க!!!

மற்றும் ஓர் நபரின் உடல் நாற்றத்தில் ஏற்படும் மாற்றத்தை வைத்து அவருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது, அவர் மன அழுத்தத்தோடு இருக்கிறாரா? என்பது வரை தெரிந்துக் கொள்ள முடியும்....

உங்கள் உடல்நலத்தைப் பற்றி பாதங்கள் சொல்லும் 8 விஷயங்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காதலை வெளிக்காட்டும்

காதலை வெளிக்காட்டும்

ஓர் ஆய்வில் உடல் நறுமணம் எதிர் பாலினத்தை ஈர்க்க உதவுகிறது என்று கூறப்பட்டுள்ளது. ஆண், பெண் அவர்களது காதலர்களின் உடல் நறுமணத்தை நன்கு உணரும் திறன் கொண்டிருப்பார்கள்.

இரண்டு நாட்கள் அணிந்திருந்த சட்டை

இரண்டு நாட்கள் அணிந்திருந்த சட்டை

ஆய்வொன்றில், பெண்களிடம் அவர்களது துணை இரண்டு நாட்கள் அணிந்திருந்த சட்டையை, நிறைய சட்டைகளோடு கலந்து கொடுத்த போது, சரியாக அவர்களது துணையின் சட்டையை கண்டுபிடித்தார்களாம்.

மன அழுத்தத்தை வெளிக்காட்டிவிடும்

மன அழுத்தத்தை வெளிக்காட்டிவிடும்

மன அழுத்தம் அதிகமாகும் போது நிறைய வியர்க்கும். ஆனால், உங்கள் உடல் நாற்றம் / நறுமணத்தில் கூட மாற்றம் ஏற்படும் என்பது பலரும் அறிந்திராத விஷயம். இதை உங்கள் வீட்டுப் பிராணிகள் கண்டுபிடித்துவிடும்.

நாய்கள் படு கெட்டி

நாய்கள் படு கெட்டி

சில வேளைகளில் நீங்கள் சோர்ந்து அல்லது கவலையாக இருக்கும் போது நீங்கள் வளர்க்கும் நாய் உங்களையே சுற்றி சுற்றி வருவதை நீங்கள் கண்டிருக்கலாம். ஏனெனில், நாய்கள் உடல் நாற்றத்தை வைத்தே ஒருவரின் நிலையை அறிந்துவிடுமாம்.

உடல் நலன் பற்றியும் கூறுகிறது

உடல் நலன் பற்றியும் கூறுகிறது

உங்களுக்கு உடல்நல குறைபாடு ஏற்படும் போதும் உங்கள் உடல் நறுமணம் / நாற்றத்தில் மாற்றம் ஏற்படும். ஐரோப்பியாவில் புற்றுநோயை மோப்பம் பிடித்து கண்டறிய ஓர் நாய்க்கு பயிற்சியெல்லாம் கொடுக்கப்பட்டது.

புற்றுநோய், நீரிழிவு

புற்றுநோய், நீரிழிவு

புற்றுநோய், நீரிழிவு போன்ற பாதிப்புகள் ஏற்படும் போது நாமே கூட நமது உடல் நறுமணத்தில் ஏற்படும் மாற்றத்தை எளிதாக கண்டுணரலாம்.

கொசுக்களின் தோழன்

கொசுக்களின் தோழன்

கொசுக்கள் சூழ்ந்திருக்கும் பகுதியில், ஒருசிலரை நன்கு கடிக்கும் கொசு, சிலரை கடிக்கவே கடிக்காது. இதை நாம் எல்லாருமே கண்டிருப்போம். ஏனெனில், நமது உடல் நறுமணமும், கொசுக்களும் உயிர் நண்பர்கள்.

இரட்டையர் என்ற பாரபட்சம் இல்லை

இரட்டையர் என்ற பாரபட்சம் இல்லை

அதிலும் இரட்டையர்கள் என்ற பாரபட்சம் இன்றி சம அளவில் இருவரையும் கடிக்குமாம் கொசு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Five Things Your Body Odor Says About You

Five Things Your Body Odor Says About You, Take a look.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter