Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
மூட்டு வலி ஏற்பட காரணமாக இருக்கும் பொதுவான தவறுகள்!!
முன்பெல்லாம் தாத்தா, பாட்டிகள் தான் மூட்டு வலி என்ற ஒன்றை பற்றி அடிக்கடி புலம்பிக் கொண்டே இருப்பார்கள் ஆனால், இன்றோ, பிறந்த குழந்தை முதல், இளைஞர்கள், நடு வயது மக்கள் என அனைவரும் மூட்டு வலி இருக்கிறது என்று கூறுகிறார்கள். இதற்கு நமது வாழ்வியல் மாற்றங்கள் கூட ஓர் காரணமாக விளங்குகிறது.
குழந்தைகள் ஓடியாடி விளையாடுவதில்லை, இளைஞர்கள் மற்றும் நடு வயது மக்கள் உட்கார்ந்தே வேலைப் பார்க்கும் பழக்கம் கொண்டிருக்கிறார்கள். கணனியுகம் தந்த இந்த மாற்றத்தினால் தான் மூட்டு வலி என்பது மிக சாதாரணமாக மாறிவிட்டது. இனி நீங்கள் செய்யும் பொதுவான தவறுகளால் எப்படி மூட்டு வலி ஏற்படுகிறது என்று பார்க்கலாம்....

விளையாட்டிற்கு பிறகு ஓய்வு
வெறித்தனமாக விளையாடிய பிறகு போதிய அளவி ஓய்வெடுக்க வேண்டியது அவசியம். அவ்வாறு ஓய்வெடுக்காமல் இருந்தால் மூட்டு வலி ஏற்படும்.

சரியான அளவு ஷூ
நீங்கள் அணியும் ஷூவின் அளவு உங்கள் காலுக்கு சரியாக பொருந்தும் அளவில் இருக்க வேண்டும். இறுக்கமாக ஷூ அணிவது கூட மூட்டு வலியை ஏற்படுத்தும்.

குதிக்கும் போது
குதித்து தரையில் இறங்கும் போது முட்டி மடக்கிய நிலையில் இருக்க வேண்டும். முட்டி நேராக இருக்கும் பட்சம் மூட்டி வலியை ஏற்படுத்தும்.

வார்ம்-அப்
உடற்பயிச்சி மற்றும் விளையாடும் முன்பு வார்ம்-அப் செய்ய வேண்டியது அவசியம். இல்லையேல் மூட்டு வலி ஏற்பட அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன.

ஸ்ட்ரெச் பயிற்சி
ஸ்ட்ரெச்சிங் செய்யும் போது முட்டியை நேராக வைத்து பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். சாய்வாக அல்லது ட்விஸ்ட்டாக இருக்கும் பட்சத்தில் இது மூட்டுவலியை ஏற்படுத்தும் வாய்ப்புகள் இருக்கின்றன.

கால்களை ஒரே நிலையில் வைத்திருத்தல்
கால்களை நீட்டியே வைத்திருப்பது, உட்கார்ந்தே இருப்பது போன்று கால்களை ஒரே நிலையில் அதிக நேரம் வைத்திருந்தால் மூட்டு வலி அதிகம் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

மூட்டு வலியை குறைக்கும் உணவுகள்
மீன், வால்நட்ஸ், ஆளி விதை போன்ற உணவுகளில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மூட்டு வலியை குறைக்க உதவுகின்றன.

மூட்டு வலியை குறைக்கும் பழங்கள்
ஆப்பிள், ப்ளம்ஸ், பெர்ரி போன்ற உணவுகளில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் மூட்டு வலியை குறைக்க உதவுகின்றன.



Click it and Unblock the Notifications
