Latest Updates
-
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா -
சிகரெட்டை நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய உண்மையில் எவ்வளவு காலம் ஆகும்? விளக்கும் நுரையீரல் நிபுணர்! -
1 முள்ளங்கியும், பாசிப்பருப்பும் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கூட்டு செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
ஆண்டின் கடைசி 3 மாதம் இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த நாட்டில் மக்கள் டிவி பாத்தா சிறை தண்டனை முதல் மரண தண்டனை கூட கொடுப்பார்களாம் - எந்த நாடு தெரியுமா -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடை இருமடங்கு வேகத்துல குறையும்! -
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
நைட் ஷிபிட் பார்க்கும் போது காபி வேண்டாம் - ஜப்பான் நபர் மரணம்!
காலை எழுந்ததும் காபி, இரவு படுக்கைக்கு செல்லும் முன் காபி, இடையே, 11 மணிக்கு ஒருமுறை, உணவருந்திய பிறகு ஒருமுறை, மாலை ஒருமுறை, வீடு திரும்பியதும் ஒருமுறை என காபியின் ருசி நாவை விட்டு விலகாதவண்ணம் இருக்கும் அளவு காபி குடிக்கும் நபர்களின் எண்ணிக்கை ஏராளம்.
ஆனால், இந்த பழக்கம் இப்போது ஜப்பான் மற்றும் அமெரிக்க மருத்துவ நிபுணர்களின் வயிற்றில் புளியைக் கரைத்துக்கொண்டிருக்கிறது. ஆம், அதிகப்படியாக காபி பருகுவதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு கடைசியில் ஒரு நபர் மரணம் அடைந்துவிட்டார் என்பது தான் அந்த அதிர்ச்சிக்குரிய செய்தி.
இதனால், இனிமேல் அதிகளவு காபியை பருக வேண்டாம் என கூறப்பட்டு வருகிறது....

காபியால் ஏற்பட்ட மரணம்
ஜப்பானின் தென்மேற்கு பகுதியான கியூஷூவில் (Kyushu) வாழ்ந்து வந்த நபர் ஒருவர், இரவில் அதிகளவு காபி பருகி வந்தாதால் பரிதாபமாக உயிரிழந்தார்.

பரிசோதனை அறிக்கை
இவரை ஃப்யூகூவோகா பல்கலைகழகத்தை சேர்ந்த தடயவியல் (Forensic) நிபுணர்கள் பரிசோதனை செய்தனர். அதில் இவரது வயிற்றில் நிறைய காஃபினை பில்ஸ் இருந்ததாக கூறியுள்ளனர். இது தான் இவரது மரணத்திற்கு காரணம் என்றும் ஊர்ஜிதம் செய்துள்ளனர்.

அயராது வேலை
ஒரு ஷிபிட் முடிந்து வீடு திரும்பிய சிறிது நேரத்திலேயே அடுத்த ஷிபிட் வேலைக்கு செல்லும் பழக்கம் கொண்டிருந்தாராம் அவர். சில நாட்களில் இவர் 24 மணிநேரமும் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. உறக்கம் வராமல் இருக்க நிறைய காஃபினை உபயோகித்துள்ளார்.

வாந்தி, மயக்கம்
அதிகப்படியாக காபி பருகியதால் இவருக்கு வாந்தி, நச்சுத்தன்மை பாதிப்புகள் போன்றவை ஏற்பட்டுள்ளன. இவர் இறந்த அன்று, மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் முன்னர் கூட இவர் வாந்தி எடுத்து மயக்கநிலையில் தான் இருந்தார் என்று ஜப்பான் செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

ஜப்பான் அதிர்ச்சி
இந்த மரணத்தை கண்டு ஜப்பான் அதிர்ச்சியடைந்துள்ளது. ஜப்பானில் இதுப் போன்ற மரணம் இது தான் முதல் முறை என ஜப்பான் செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அடிக்கடி ஏற்படுகிறது
சமீபக் காலத்தில் அமெரிக்காவில் இது போன்ற மரணங்கள் நிறைய நடப்பதாக கூறப்படுகிறது. இதுவரை 13 பேருக்கும் மேல் ஒரே மாதிரியான எனர்ஜி பானம் குடித்து உயிரிழந்துள்ளனர். இதுக்குறித்து அமெரிக்காவின் எப்.டி.ஏ விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது.



Click it and Unblock the Notifications
