Latest Updates
-
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது! -
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
தயவு செய்து குளியலறையில் இந்த தவறுகளை செய்யாதீங்க...
அனைவருக்குமே குளியலறை மற்றும் கழிவறையின் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நோய்த்தொற்றுகள் பரவும் என்பது தெரியும். அதற்காக நாம் நம் குளியலறையை சுத்தமாக வைத்துக் கொள்வோம். இருப்பினும் நாம் இன்னும் தவறுகளை செய்து கொண்டிருக்கிறோம். அந்த தவறுகளின் மூலம் நோய்த்தொற்றுகளானது மிகவும் வேகமாக பரவுகிறது.
அது என்ன தவறுகள் என்று யோசிக்கிறீர்களா? இக்கட்டுரையைப் படித்துப் பார்த்தால் உங்களுக்கே புரியும். அதைப் படித்து இனிமேல் அந்த தவறுகளை செய்யாதீர்கள். சரி, இப்போது குளியலறை மற்றும் கழிவறையில் நாம் செய்யும் தவறுகள் என்னவென்று பார்ப்போம்.

மொபைல் போனை எடுத்துச் செல்வது
இப்பழக்கம் நிச்சயம் நிறைய பேருக்கு இருக்கும். மொபைல் போன் வந்த பின் கழிவறைக்கு கூட அதனை எடுத்துச் சென்று, பார்த்த வண்ணம் இருப்போர் பலர். ஆனால் இப்படி கழிவறைக்கெல்லாம் மொபைல் போனை எடுத்துச் சென்றால், அதனை அங்குள்ள பலகையில் வைக்கும் போது, அதிலிருந்து பாக்டீரியாக்கள் ஒட்டிக் கொண்டு, அதன் மூலம், பல நோய்த்தொற்றுகள் ஏற்படக்கூடும்.

டாய்லெட் ஃப்ளஷ்ஷிங்
தற்போது பெரும்பாலானோரின் வீடுகளில் வெஸ்டர்ன் டாய்லெட் உள்ளது. சமீபத்திய ஆய்வில் வெஸ்டர்ன் டாய்லெட்டை ஃப்ளஷ் செய்யும் போது, அதிலிருந்து வெளிவரும் சிறு நீர் துளிகள் வெளியே பட்டு, அதன் காரணமாக பல்வேறு நோய்த்தொற்றுக்கள் வரும் வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் அந்த அந்த தண்ணீர் காற்றின் மூலம் 6 அடிக்கு மேல் வந்து கூட விழும் வாய்ப்புள்ளதாம். எனவே கழிவறையின் மூலம் நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் இருக்க வெஸ்ட்ர்ன் டாய்லெட்டை ஃப்ளஷ் செய்யும் போது, மூடிக் கொண்டு ஃப்ளஷ் செய்யுங்கள்.

குளியலறையிலேயே டூத் பிரஷ் வைப்பது
நிறைய வீடுகளில் டூத் பிரஷ்ஷானது குளியலறையில் தான் இருக்கும். இதனால் எப்போதும் ஈரப்பதமான சூழ்நிலையில் வளரும் பாக்டீரியாக்கள் டூத் பிரஷ்ஷில் ஊடுருவி வளர ஆரம்பிக்கும். இதனால் பற்களைத் துலக்கும் போது, அதில் உள்ள பாக்டீரியாக்கள் வாயின் வழியே உடலினுள் நுழைந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே எப்போதும் டூத் பிரஷ்ஷை குளியலறைக்கு வெளியே காற்றோட்டமான பகுதியில் வைத்துப் பழகுங்கள்.

குளியலறையில் மேக்கப் பொருட்கள்
எப்போதுமே குளியலறையில் மேக்கப் பொருட்கள் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். இதனால் குளியலறையில் உள்ள பாக்டீரியாக்கள் மேக்கப் பொருட்களில் நுழைந்து, பின் மேக்கப் போடும் போது சருமத்தை தாக்கிவிடும். எனவே இத்தவறை எப்போதும் செய்யாதீர்கள்.

உடலைத் தேய்த்து குளிக்கும் ஸ்பாஞ்ச்
நாம் செய்யும் மற்றொரு முக்கியமான தவறு, உடம்பைத் தேய்த்துக் குளிக்க பயன்படுத்தும் ஸ்பாஞ்ச்சை குளியலறையிலேயே வைப்பது. ஈரப்பதமான இடத்தில் தான் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகம் இருக்கும். அப்படி இருக்கையில் இந்த ஸ்பாஞ்ச்சை குளியலறையில் வைத்தால் என்ன ஆகும் என்று சற்று யோசித்துப் பாருங்கள். எனவே எப்போதும் ஸ்பாஞ்ச்சைப் பயன்படுத்திய பிறகு, அதனை வெளியே சூரிய வெளிச்சத்தில் உலர வைத்து பின்னரே பயன்படுத்த வேண்டும்.

டவலை குளியலறையிலேயே தொங்க விடுவது
குளித்து முடித்த பின் பயன்படுத்தும் டவலை பலர் குளியலறையிலேயே வைத்துவிடுவார்கள். இப்படி ஈரப்பதமான டவலை குளியலறையிலேயே வைத்தால், எளிதில் பாக்டீரியாக்களானது டவலில் வளர ஆரம்பித்துவிடும். ஆகவே குளித்து முடித்த பின் அந்த டவலை சூரிய வெளிச்சத்தில் உர வைக்க வேண்டும். இப்படி செய்தால் டவலில் உள்ள பாக்டீரியாக்கள் அனைத்தும் அழிக்கப்படும்.

எக்ஸாஸ்ட் ஃபேன்
சில வீடுகளில் குளியலறை மற்றும் கழிவறையில் உள்ளே சுற்றும் காற்றை வெளியேற்றும் எக்ஸாஸ்ட் ஃபேன் இருக்கும். ஆனால் இதனை பலரும் பயன்படுத்த மறந்துவிடுவார்கள். உங்கள் வீட்டில் எக்ஸாஸ்ட் ஃபேன் இருந்தால், அதனை மறக்காமல் அறையைப் பயன்படுத்தியப் பின் ஆன் செய்து விடுங்கள். இதனால் உள்ளே சுற்றிக் கொண்டிருக்கும் ஈரப்பதமான காற்று வெளியேற்றப்பட்டு, பாக்டீரியாக்களின் வளர்ச்சி தடுக்கப்பட்டு, குளியலறை மற்றும் கழிவறையில் வீசும் துர்நாற்றமும் தடுக்கப்படும்.



Click it and Unblock the Notifications