விறைப்புத்தன்மை பத்தி ஆம்பளைங்க தெருஞ்சுக்க வேண்டிய விஷயங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

உடலுறவு என்பது உயிரினங்களுக்கு மத்தியில் இயற்கையான செயல். ஏன், ஒவ்வொரு உயிரனத்தின் முக்கிய அடிப்படை செயல்பாடு என கூட கூறலாம். இனப்பெருக்கம் இன்றி எந்த ஒரு உயிரினத்தினாலும் இவ்வுலகில் நிலைத்திட முடியாது. பிறப்பென்று ஒன்றுருக்கையில், இறப்பும் இருக்கிறது. இதை ஈடு செய்ய இனப்பெருக்கம் தான் உதவுகிறது. இனப்பெருக்கத்திற்கு உடலுறவுக்கொள்ளவேண்டியது அவசியம். அதற்கு முதலில் விறைப்புத்தன்மை ஏற்பட வேண்டும்.

அபாரமான உறுப்பு எழுச்சியை எப்படிப் பெறலாம்?.. இதை 'பாலோ' பண்ணுங்க!

இயல்பாகவே ஆண்களுக்கு விரைவில் விறைப்புத்தன்மை ஏற்பட்டுவிடும். பெண்களோடு ஒப்பிட்டு பார்க்கும் போது, ஆண்கள் மிக விரைவில் உச்சம் அடைந்துவிடுகின்றனர் என கூறுகின்றனர். உடலுறவின் போது அதிவேகமாக உச்சம் அடைந்து, விறைப்புத்தன்மை ஏற்படும் ஆண்களுக்கு, அது ஏன், எப்படி, எவ்வாறு என்பன எல்லாம் தெரியாது. ஏற்படுகிறது என மட்டுமே அறிவார்கள்.

நீங்க 'அதுல' ஸ்ட்ராங்கா இருக்கணுமா? அப்படின்னா இந்த உணவுகளை சாப்பிடுங்க...

விறைப்புத்தன்மையில் பல வகைகள் உண்டு, நேரிடியாக ஏற்படுவது, ஒளி, ஒலி வழியாக ஏற்படுவது, இரவு நேரங்களில் ஏற்படுவது என பல வகைகள் இருக்கின்றன. இதுமட்டுமில்லாது சில விஷயங்கள் ஆண்கள் செய்தால் விறைப்புத்தன்மை அதிகரிக்கும். அதே போல சில செயல்களில் ஈடுப்படும் போது விறைப்புத்தன்மை குறையும். இதை பற்றி எல்லாம் பெரும்பாலான ஆண்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதை, பெற்றி மேலும் விரிவாகத் தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படியுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வகைகள்

வகைகள்

ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத்தன்மையில் மூன்று வகைகள் இருக்கின்றன. முதலாவது நேரடி தொடர்பில் ஏற்படுவது. இரண்டாவது ஒளி மற்றும் ஒலி மூலமாக ஏற்படுவது, மூன்றாவது சிலருக்கு இரவு நேரங்களில் பொதுவாக ஏற்படுவது. இதில் இரண்டாவது மற்றும் மூன்றாவது வகை ஆண்கள் தாங்களாக ஏற்படுத்திக்கொள்வது. இது உகந்ததல்ல என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மது மற்றும் புகை - எதிரி

மது மற்றும் புகை - எதிரி

விறைப்புத்தன்மைக்கு மதுவும், புகையும் எதிரிகள் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அதிகப்படியாக மது அருந்துவோர்கள் மற்றும் புகைப்பிடிப்பவர்களுக்கு விரைப்புத்தன்மை குறைந்துவிடுகிறது மற்றும் ஆண்மை இழப்பு ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

பேசுதல்

பேசுதல்

உடலுறவுக்கொள்வதற்கு முன்பு அதிகம் அதைப்பற்றி பேசுபவர்களுக்கு விறைப்புத்தன்மை அதிகரிக்கிறது. எனவே, ஆண்கள் உங்கள் துணையோடு உடலுறவுக்கொள்ளும் முன் சில வார்த்தைகள் பேசி சிலாகித்துவிட்டு உறவுக்கொள்ளும் போது உங்களது விறைப்புத்தன்மை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

உறக்கம்

உறக்கம்

நல்ல உறக்கம் கொள்பவர்களுக்கு, விறைப்புத்தன்மை அதிகரிக்கும். உடலில் சோர்வு இருக்கும் பட்சத்தில் விறைப்புத்தன்மை குறைய வாய்ப்பிருகிறது. நீங்கள் நன்கு தூங்கி எழும் போது, உங்கள் உடலில் இருக்கும் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி அடைகிறீர்கள். இதனால், நல்ல தூக்கம் கொள்பவர்களுக்கு விறைப்புத்தன்மை அதிகரிக்கிறது.

தனிமையில் இனிமை அவசியம்

தனிமையில் இனிமை அவசியம்

நண்பர்கள், உறவினர்கள் அல்லது குழந்தைகள் வீட்டில் சூழ்ந்திருக்கும் தருணங்களில் ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைகிறது. எனவே, பெரும்பாலும் உடலுறவுக்கொள்ளும் போது தனிமையான சூழல் ஏற்படுத்திக்கொள்வது உடலுறவுக்கு உகந்தது.

விரைப்படையும் போது வளைவது

விரைப்படையும் போது வளைவது

சில ஆண்களுக்கு ஆண்குறி விறைப்படையும் போது சிறிது வளைந்து காணப்படும். இதற்காக கவலைக்கொள்ள தேவையில்லை. இது இயற்கையான ஒன்றுதான். ஆனால், ஆண்குறி மிக வளைந்து காண்பது போல் இருந்தால் மருத்துவரை அணுகுங்கள். ஏனெனில், அது, பெரோனி (Peyronie) நோயாக இருக்க வாய்ப்புள்ளது.

சுயஇன்பம்

சுயஇன்பம்

நீங்கள் சில நாட்கள் சுயஇன்பம் காணாது, உடலுறவில் ஈடுப்படும் போது விறைப்புத்தன்மை அதிகரிக்கும். ஏனெனில், ஆண்குறியில் ஏற்படும் அதிக இரத்த ஓட்டத்தினால் விறைப்புத்தன்மை அதிகரிக்கிறது. இது மருத்தவ ரீதியில் நிரூபிக்கப்பட்ட உண்மை என நிபுணர்கள் கூறுகின்றனர்.

உடல் எடை

உடல் எடை

உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கு. விறைப்புத்தன்மை குறைகிறது. அதிகப்படியான உடல் பருமன் உள்ளவர்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் எனப்படும் ஆண் ஹார்மோன் அளவு குறைந்த அளவில் தான் சுரக்கிறது. இதனால், அவர்களுக்கு விரைப்புத்தன்மை குறைகிறது.

காண்டம்

காண்டம்

சில ஆண்களுக்கு காண்டம் உபயோக படுத்துவதனால் விறைப்புத்தன்மை குறைகிறது என கூறப்படுகிறது. அனைத்து ஆண்களுக்கும் இவ்வாறு ஏற்படுவதில்லை. ஒருசிலருக்கு மட்டுமே ஏற்படுகிறது. ஒருவேளை காண்டம் உபயோகிக்கும் போது சிலறுக்கு ஏற்படும் அச்சம் கூட விறைப்புத்தன்மை குறைய வாய்ப்பிருக்கிறது என கருதப்படுகிறது.

கட்டுப்பாடு

கட்டுப்பாடு

சில ஆண்களுக்கு தங்களது உணர்ச்சியை கட்டுப்படுத்த முடிவதில்லை. இதனால், அவர்களுக்கு ஒன்றிரண்டு முறை தொடர்ச்சியாக உடலுறவுக்கொள்ளும் போது அவர்களது விறைப்புத்தன்மையை கட்டுப்படுத்த முடியாது போய் விடுகிறது. எனவே, சரியான நேர இடைவேளை எடுத்துக்கொள்வது உகந்தது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

10 Things You Never Knew About Erections

We are sure that, 10 Things You Never Knew About Erections. Read here.,
Story first published: Saturday, February 21, 2015, 10:51 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter