Latest Updates
-
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க..
தினமும் ஆயில் புல்லிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!
ஆயில் புல்லிங் என்பது ஒரு ஆயுர்வேத சிகிச்சை முறை. இந்த சிகிச்சை முறையின் மூலம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வுகளைக் காணலாம். ஆயில் புல்லிங் என்பது வேறொன்றும் இல்லை, காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் வாயில் எண்ணெயை ஊற்றி 10-15 நிமிடம் கொப்பளிக்க வேண்டும், அவ்வளவு தான். மேலும் ஆயில் புல்லிங் செய்த பின்னர் தான் பிரஷ் செய்ய வேண்டும்.
அதிலும் ஆயில் புல்லிங் செய்வதற்கு நல்லெண்ணெயைப் பயன்படுத்தினால், இன்னும் நல்ல பலனைப் பெறலாம். மேலும் ஆய்வு ஒன்றில், ஆயில் புல்லிங் செய்து வந்தால், வாய் ஆரோக்கியம் மேம்படும் என்று சொல்கிறது. ஆனால் ஆயில் புல்லிங்கினால் வாய் ஆரோக்கியம் மட்டுமின்றி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரித்து, உடலில் ஏற்படும் ஒருசில பிரச்சனைகளையும் குணப்படுத்தி, ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.
இதுப்போன்று சுவாரஸ்யமான வேறொன்று: கூச்சப்படாம வீட்டுக்குள்ள 'சும்மா' சுத்துங்க.. உடம்புக்கு ரொம்ப நல்லதாம்!
அதுவும் தற்போதுள்ள ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையில், இந்த ஆயில் புல்லிங் சிகிச்சையை ஒருவர் தினமும் தவறாமல் செய்து வந்தால், உடல்நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். சரி, இப்போது அந்த ஆயில் புல்லிங்கை தினமும் செய்து வந்தால் கிடைக்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி பார்ப்போமா!

வெள்ளையான பற்கள் மற்றும் ஆரோக்கியமான ஈறுகள்
தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால், பற்களில் உள்ள கறைகள் நீங்கி, பற்கள் வெள்ளையாகவும், ஆரோக்கியமானதாகவும் காணப்படும்.

வாய் துர்நாற்றம்
தினமும் காலையில் ஆயில் புல்லிங் செய்து வந்தால், வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும் வெளியேறி, வாய் துர்நாற்றம் அடிக்காமல் இருக்கும்.

ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவு
ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்பட்டால், ஆயில் புல்லிங் செய்தால், இரத்தக்கசிவு ஏற்படுவது தடுக்கப்பட்டு, ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கும்.

உடலின் எனர்ஜி அதிகரிக்கும்
ஆயில் புல்லிங்கை தினமும் செய்தால், உடலின் ஆற்றலானது அதிகரித்து, நாள் முழுவதும் நன்கு சுறுசுறுப்புடன் இருக்கலாம்.

ஒற்றை தலைவலி
ஒற்றை தலைவலியால் அவஸ்தைப்படுபவர்கள், தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால், அந்த தொல்லையில் இருந்து விடுபடலாம்.

சைனஸ்/ஆஸ்துமா
சைனஸ்/ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள், தினமும் ஆயில் புல்லிங் செய்தால், இந்த பிரச்சனைகள் குணமாகும்.

நிம்மதியான தூக்கம்
தூக்கமின்மையால் அவஸ்தைப்படுபவர்கள் ஆயில் புல்லிங் செய்தால், இரவு நேரத்தில் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

பொலிவான சருமம்
ஆயில் புல்லிங் செய்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, சருமம் பொலிவோடு இருக்க உதவும்.

முறையான மாதவிடாய் சுழற்சி
முறையற்ற மாதவிடாய் சுழற்சி உள்ளவர்கள், தினமும் ஆயில் புல்லிங் செய்தால், ஹார்மோன் சமநிலையின்மை குணமாகி, சரியான மாதவிடாய் சுழற்சி ஏற்படும்.

தைராய்டு
தைராய்டு உள்ளவர்கள், ஆயில் புல்லிங் செய்து வந்தால், தைராய்டு ஹார்மோனை சீராக சுரக்க செய்து, தைராய்டு பிரச்சனையைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.

பார்வைக் கோளாறு
பார்வைக் கோளாறு இருந்தால், ஆயில் புல்லிங் செய்து வர, பார்வைக் கோளாறானது சரியாகும்.

மூட்டு பிரச்சனைகள்
மூட்டுகளில் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால், அது மூட்டுகளில் ஏற்படும் வீக்கம், வலியை குணமாக்கும்.

சிறுநீரக செயல்பாடு
தினமும் ஆயில் புல்லிங் செய்தால், சிறுநீரக கோளாறு ஏற்படாமல், சிறுநீரகமானது சீராக செயல்படும்.

வறட்சிகளைப் போக்கும்
தொண்டை வறட்சியால் அடிக்கடி இருமல், வாய் மற்றும் உதடுகள் அடிக்கடி வறட்சி அடைந்தால், தினமும் ஆயில் புல்லிங் செய்துவர தடுத்துவிடலாம்.



Click it and Unblock the Notifications