For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒற்றைத் தலைவலியைத் தூண்டும் 7 ஆச்சரியமான விஷயங்கள்!!!

By Ashok CR
|

ஒற்றைத் தலைவலியின் இறுக்கிப் பிடிக்கும் வலியால், ஒருவரால் சுறுசுறுப்பாக இயங்க முடியாமல், சோர்வாக இருக்கும். இந்த வலி வந்தால், 48 மணி நேரம் வரை நீடிக்கும். சில நேரங்களில் அதற்கு மேலும் நீடிக்கலாம்.

ஒற்றைத் தலைவலி வரும் பொது சில உணர்வுப் பூர்வமான அறிகுறிகளும் இணைந்து வரும். பார்வைக் கோளாறுகள், கை மற்றும் கால் நடுக்கம், வாந்தி, குமட்டும் உணர்வு, கண்களில் ஒளிதெரிப்பு மற்றும் கண் கூச்சம், மிகை ஒலி உணர்திறன் போன்ற பிரச்சனைகளும் ஒற்றைத் தலைவலியோடு இணைந்து ஏற்படுகின்றன.

கடுமையான ஒற்றைத் தலைவலியா? இந்த உணவுகளை சாப்பிடுங்க...

மைக்ரைன் எனப்படும் ஒற்றைத் தலைவலி, ரத்த நாளங்கள் விரிவடைதல் மற்றும் இரத்த நாளங்களை சுற்றி சுருள்களாக அமைந்துள்ள நரம்பு இழைகளில் இருந்து வேதிப்பொருள் வெளியேற்றம் போன்ற நிகழ்வுகளின்சேர்க்கையால் ஏற்படுகிறது.

மைக்ரைன் நோயாளிகள், கண்டிப்பாக ஒற்றைத் தலைவலியை தூண்டும் காரணங்களை அறிந்து கொள்ள வேண்டும். இது அவர்களுக்கு எதிர் கால தாக்கத்தை தவிர்க்க உதவுகிறது. சில முக்கியமான தூண்டு காரணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மன அழுத்தம்

மன அழுத்தம்

நீண்ட நேர மற்றும் அதிக அளவிலான கடின உழைப்பால், உண்ணும் நேரம் மற்றும் உறங்கும் நேரங்களில் மாற்றம் ஏற்படுகிறது. இது ஒற்றை தலைவலிக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். ஓய்வாய் இருப்பவர்களைக் காட்டிலும்,கடினமாய் உழைப்பவர்களுக்கு இந்த தாக்கம் அதிக அளவில் இருக்கும். இதை தவிர்க்க கடின உழைப்பிற்கு பின்னர் நல்ல தூக்கமும், போதுமான அளவு ஓய்வும் அவசியம். வெந்நீர் குளியல் மற்றும் ஒரு கப் எலுமிச்சை டீ இவற்றின் மூலம் நீங்கள் ஆசுவாசமாக இருக்கலாம். மேலும் இதனால் உங்கள் உடல் அயர்விலிருந்து விடுபடும். உறங்கச் செல்லும் முன் எப்போதும், நிம்மதியான மனதோடு உறங்கச் செல்லுங்கள்.

தப்ப வெட்ப நிலை

தப்ப வெட்ப நிலை

வெயிலில் சுற்றி அலைவதன் மூலம்,ஒற்றைத் தலை வலி ஏற்படும். இது மற்ற காரணிகளை விட எளிதில் ஏற்படக் கூடிய காரணி. மற்றபடி, பாரமானிய அழுத்தம், உயர் வெப்ப நிலை, உயர் ஈரப்பதம் போன்ற தட்ப வெட்ப நிலை காரணங்களாலும் ஒற்றை தலை வலி ஏற்படுகிறதுஎனவே வெயிலில் போவதை தவிர்ப்பது நல்லது. ஒரு வேளை, வெயிலில் போக வேண்டிய அவசியம் ஏற்படின், குடையை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும். குடையை தூக்கி செல்வது கடினமாக இருப்பின், நீங்கள் உங்கள் தலையை ஒரு ஸ்கார்ப் கொண்டு மூடிக் கொள்வது நல்லது..

காப்ஃபைன் எடுத்துக் கொள்ளல்

காப்ஃபைன் எடுத்துக் கொள்ளல்

காப்ஃபைன் என்பது காபியில் உள்ள ஒரு வேதி பொருள். காபி குடிக்காமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு அடிமையானவர்கள், ஒரு நாளைக்கு எடுக்க கூடிய இரண்டு கப் காபியின் அளவை குறைக்க வேண்டும். ஒற்றை தலை வலிக்கு இந்த காப்ஃபைன் காரணம் என சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. காப்ஃபைன் எடுத்துக் கொள்ளலுக்கு, சில மணி நேரங்களுக்கு பின் இந்த ஒற்றை தலைவலி ஏற்படுகிறது. காப்ஃபைன் எடுத்துக் கொள்ளலை, படிப்படியாக குறைத்தலே சிறந்தது என அறிவுறுத்தப் படுகிறது. காப்ஃபைன் எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் அது மிகவும் நல்லது.

அதிக சத்தத்தில் இசை

அதிக சத்தத்தில் இசை

நீண்ட காலமாக இசையை,அதிக அளவிலான சத்தத்தில் கேட்பது மைக்ரைனுக்கான முக்கிய காரணமாகும். அதிக அளவிலான டெசிபெல் ஒலியானது, மைக்ரைனை ஏற்படுத்திவிடும். 72 மணிநேரம் அல்லது அதற்கும் அதிகமான நேரம் குறைந்த அளவிலான ஒலியைக் கேட்டால், ஒற்றைத்தலை வலிக்கான ஒரு தாக்கத்தை தவிர்க்க முடியும்.

இரத்தத்தில் சர்க்கரையின் தாழ்நிலையை தோற்றுவிக்கும்

இரத்தத்தில் சர்க்கரையின் தாழ்நிலையை தோற்றுவிக்கும்

இரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் மாவு பொருட்களின் அளவு உயரும் போது, மைக்ரைன் ஏற்படும். இதனால் உடலானது சர்க்கரை அளவை குறைக்க, அதிக அளவிலான இன்சுலினை தோற்றுவிக்கும். இந்த செயல் திரும்பி, திரும்பி நடக்கும் போது, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு மிகவும் குறைந்து விடும். இரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுவது மற்றும் குறைவது, தீவிர தலைவலியை ஏற்படுத்தும்.

அதீத தூக்கம்

அதீத தூக்கம்

ஒரு நாளைக்கு ஒன்பது மணி நேரத்துக்கு மேல் தூங்கினால், ஒற்றைத் தலைவலி ஏற்படும். வேலைக்கு செல்லும் மக்கள் வார நாட்களில் அதிகம் தூங்குவது இல்லை. எனவே அவர்கள் வார இறுதியில் விடுமுறை நாட்களில் அதிக நேரம் தூங்குகின்றனர். அவர்கள் உடம்பானது, ஒரு குறிப்பிட்ட அளவு உறக்கத்திற்கே தினமும் பழகி விடும்.திடீரென சிலமணி நேரங்கள் அதிகரிப்பதால், தினசரி வழக்கத்தில் மாற்றம் ஏற்படும். இதனால் உடல் வலி, களைப்பு மற்றும் பயங்கர தலை வலி போன்றவை ஏற்படும்.

வெறும் வயிறு

வெறும் வயிறு

நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் இருந்தால், இரைப்பை அலர்ஜி, மற்றும் தலை வலி முதலிய பிரச்சனைகள் ஏற்படும். காலை உணவைத் தவிர்த்தல் எல்லோருக்கும் பொதுவான பழக்கம். ஆனால் அது மிகவும் தவறான பழக்கம். நீங்கள் ஒருநாள் துவங்கும் போது, பழங்கள், தானிய வகைகள் மற்றும் நிறைய தண்ணீர் போன்றவற்றை எடுத்துக் கொள்ளல் மிகவும் நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 Surprising Triggers Of Migraine

For a patient of migraine, it is very important to identify what triggers the pain to avoid future attacks. Here are some of the surprising triggers.
Desktop Bottom Promotion