காற்றோட்டமாக உடற்பயிற்சி மேற்கொள்வது மனச்சோர்வினை தடுக்கும் என்பதற்கான காரணங்கள்!!!

By SATEESH KUMAR S

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" ஆரோக்கிய வாழ்வை பெற உடற்பயிற்சி அவசியமாகும். மேலும் இயற்கை சூழலில் உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது கிடைக்கும் பலன் அதிகம். அது குறித்து காண்போம்.

காற்று நிறைந்த வெளிப்புற பகுதிகளில் உடற்பயிற்சி மேற்கொள்வது மனச்சோர்வினை தடுக்கும் என்று கூறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. நமது வசிப்பிடத்தின் உட்பகுதியிலோ அல்லது வெளிப்பகுதியிலோ, குளிர் கால மாதங்களில் உடற்பயிற்சி மேற்கொள்வது நமது மனோநிலை, ஆரோக்கியம மற்றும் நிச்சயமாக, நமது உடல் எடைக்கும் நன்மை பயக்கும். நாம் ஏதோ ஓரிடத்தில் வசித்தாலும் கூட ஒரு நாளின் சில நேரங்களிலாவது வெளிப்புற பகுதியில் உடற்பயிற்சி (ஓடுவது,நடப்பது) செய்வது ஊக்கபடுத்தப்படக்கூடியது.

வெளியில் குளிரான சூழ்நிலை நிலவும் போது நாம் நமது வசிப்பிடத்தின் உள்ளே உடற்பயிற்சி செய்வது எளிதானது அல்லது அதை முற்றிலும் தவிர்ப்போம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த குளிரான நாட்களிலும் வெளிப்புற பகுதியில் உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது நம்மை நாமே புதியவர்களாக உணர்வோம். தட்ப வெப்ப நிலையில் ,அதிக குளிர் காணப்படும் போது, உடற்பயிற்சி செய்ய ஏதுவான உடைகளை அணிவதும், வியர்க்கும் வரை உடற்பயிற்சி செய்வதும் நம்மை கதகதப்பாக வைத்து கொள்ள உதவும்.

இந்த அனைத்து காரணங்களுடன் வெளிப்புற உடற்பயிற்சி மன சோர்வினை தடுக்கும்.அனைத்து சூழ்நிலைகளிலும் வெளிப்புற பகுதியில் உடற்பயிற்சி செய்வது சாத்தியமற்றது. எனினும் குறைந்தபட்ச முயற்சியாவது செய்யலாம். கீழே தரப்பட்டுள்ள பல காரணங்களினால் வெளிப்புற உடற்பயிற்சி சிறந்தது என்று கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வைட்டமின் டி வெளிப்பாடு

வைட்டமின் டி வெளிப்பாடு

வெளிப்புற உடற்பயிற்சி மனச்சோர்வினைக் குறைக்குமென்று கூறுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அவற்றுள் முதன்மையான காரணம் வைட்டமின் டி வெளிப்பாடு. நமது மனோநிலையை உயர்த்தி ஹார்மோன்களை ஊக்கப்படுத்தும் செரோடோனின் உற்பத்திக்கு உதவுகிறது.மேலும் மன சோர்வினை ஆரம்பத்திலேயே தடுக்கிறது. மேலும் வைட்டமின் டி நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்குகிறது. மற்ற எந்த மூலகாரணத்தையும் விட சூரியனிடமிருந்து பெறப்படும் வைட்டமின் டி எளிதாக உறிஞ்சபடுகிறது. சூரியன் வெளிப்பட்டாலும், இல்லாவிட்டாலும், மேக மூட்டமாக இருந்தாலும் சரி, வெயிலாக இருந்தாலும் சரி, வெளிப்பகுதியில் காணப்படும் ஒளியிலிருந்து நாம் அதிகமான வைட்டமின் டி பெற்று கொள்ளலாம். இதன் பலனாக வெறும் அரை மணி நேரம் வெளியில் செலவளிப்பதன் மூலம் மன சோர்வினை தவிர்கலாம் .

இயற்கை காட்சி மாற்றம்

இயற்கை காட்சி மாற்றம்

நேர்மையாக யோசிக்கும் போது ட்ரெட் மில்லைப் பயன்படுத்தி உடற்பயிற்சி செய்வது எளிதாக இருந்த போதிலும் அது நமது உடலை சோர்வடைய செய்ய சிறந்தது அல்ல. வெளிப்புறத்தில் உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது, நாம் இயற்கை காட்சி மற்றும் சுற்றுப்புறச்சூழல் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து கொள்கிறோம். மேலும் இது மூளையிலுள்ள நீயூரான்களை ஒருங்கிணைக்கிறது. என்டோர்பினை தூண்டுகிறது. அந்த நாளின் எஞ்சியுள்ள பகுதிக்கான படைப்பாற்றலை நமக்கு மேம்படுத்த உதவுகிறது.

புத்தம் புதிய காற்று

புத்தம் புதிய காற்று

குளிர் காலத்தில், வெளியில் குளிராக இருந்தாலும் கூட புத்தம் புதிய காற்று நமக்கு தரும் உணர்வு மிக சிறப்பானது. ஒவ்வொரு நாளும் சிறிதளவேனும் புதிய காற்றினை உணர்வது நமக்கு நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறது.

குளிர் காலத்தில் வெளிப்புற பகுதியில் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் நாம் இவற்றை சாத்தியமாக்கி கொள்ளலாம். இதயத்திற்கான பயிற்சிகளை வெளியில்

மேற்கொண்டு பின்பு உள்ளே யோகா ,எடை தூக்குவது போன்ற பயிற்சிகளில் ஈடுபடலாம். இதற்காக வெளியில் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டாம் என்று அர்த்தமில்லை. குளிர்காலமாக இருந்தாலும் வெளியில் தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றும் அர்த்தமில்லை. நாம் அவற்றை தவிர்த்து விடலாம் எனினும் தட்ப வெப்ப நிலை ஏற்று கொள்ள கூடிய வகையில் உள்ள நாட்களை நமக்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதாகும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

நம்பினாலும் நம்பாவிட்டாலும்,வெளியில் உடற்பயிற்சி மேற்கொள்வது நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்கப்படுத்துகிறது. நமது நோய் எதிர்ப்பு மண்டலம்.

களைத்து போகும் போது, மன சோர்வு உண்டாகும் வாய்ப்பு ஏற்படுகிறது. இதை தவிர்த்து நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த ஒவ்வொரு நாளும் நடைப்பயிற்சி உள்ளிட்ட சில பயிற்சிகளை சில நிமிடங்களாவது வெளிப்புற

பகுதியில் மேற்கொள்ள வேண்டும்

தசை கட்டுமானம்

தசை கட்டுமானம்

வெளிப்பகுதியில் உடற்பயிற்சி மேற்கொள்வது மனச்சோர்வினை தடுக்கும் என்று கூறப்படுவதற்கு மற்றொரு சிறப்பான காரணம் தசை கட்டுமானம் ஆகும். பொதுவாக

ட்ரெட் மில்லில் உடற்பயிற்சி செய்யும் போது தவிர்க்கப்படும் ஒன்றான தசை கட்டுமானத்திற்கு இது உதவுகிறது.

வெளிப்புறத்தில் உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது முக்கியமாக தாழ்வாரத்திலோ அல்லது சீரற்ற தளத்தின் மீதோ மேற்கொள்ளப்படும் நடைப்பயிற்சியின் போது தசைகள் ஈடுபடுவது அவசியமாகிறது. புற்களின் மீது நடப்பது கூட நமது தசைக்கு சற்று கடினமான உடற்பயிற்சியை வழங்குகிறது. இதனால் உடலின் ஆற்றல் மற்றும் என்டொர்ஃபின் ஆகியவற்றை ஊக்கப்படுத்தப்படுகிறது. தசைகள் கடினமான உடற்பயிற்சியை மேற்கொள்ளும் போது உடலின் மெட்டாபாலிசம் மேம்படுத்தப்பட்டு, அதிக ஆற்றல் பெறப்படுகிறது. இதனால் நாம் அறிந்து கொள்ளாமலேயே இயல்பாகவே, மனச்சோர்வு தடுக்கப்படுகிறது, ஒரு நாளின்

துவக்கத்தில் செய்யப்படும் உடற்பயிற்சி அந்நாளின் எஞ்சியுள்ள பொழுதை அற்புதமாக்கிவிடுகிறது. எனவே வெளிப்புற பகுதியில் உடற்பயிற்சி மேற்கொள்வது சிறந்த ஒன்றாகும். மேலும் சரிவான மலை பிரதேசங்களில் பயிற்சி

மேற்கொள்ளும் போது, நமது ட்ரெட் மில்லின் கைப்பிடியை சார்ந்திருப்பது அவசியமற்றதாகிவிடுகிறது. நமது உடலின் அதிகமான கலோரிகள் எரிக்கப்படுகிறது.

பருவ நிலை மாற்றம்

பருவ நிலை மாற்றம்

வெளிப்புற பகுதியில் உடற்பயிற்சி மேற்கொள்வது மனச்சோர்வினை தடுக்கிறது என்று கூறப்படுவதற்கு மற்றொரு தனித்துவமான வழி யாதெனில் உடற்பயிற்சி

மேற்கொள்ளும் போதே பருவ நிலை மாற்றதை காண முடியும் என்பது தான். நாம் அனைவருமே எப்போது தீவிரமாக பருவ நிலை மாற்றத்தை எதிர் நோக்குகிறோம். பனி விழும் காலம் குளிர்காலமாக மாறுவதையும், குளிர்காலம் வசந்த காலமாக மாறுவதையும் பார்த்து புத்துணர்ச்சி கொள்ளலாம். இந்நிலையில் பருவ நிலை

மாற்றங்களை பாராட்டி, காற்றில் நிகழும் மாற்றங்களை விரும்ப கற்கலாம். இது நாம் பெறுகின்ற மனோ நிலைகளில் மிகவும் சிறந்தது. சிறப்பாக குறிப்பிட வேண்டுமெனில் இலைகள் மரத்திலிருந்து உதிர்வதையும் மீண்டும் தன் வாழ்விற்கு திரும்புவதையும் காண்கிறோம். எப்பொழுதெல்லாம் முடிகிறதோ அப்பொழுதெல்லாம் இயற்கை நமக்கு வழங்கும் நன்மைகளை பெற்று கொள்ள வேண்டும். குறைவாக பயன்படுத்தியுள்ள இயற்கை ஒரு மனச்சோர்வு நீக்கிகள் ஆகும்.

நச்சு பொருட்களை குறையுங்கள்

நச்சு பொருட்களை குறையுங்கள்

நாம் நீண்ட காலமாக வீட்டின் உள்ளேயே தங்கியிருப்பது, நமக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ஒன்றாகும் அனைத்து வீடுகளிலும், தூய்மையாக்கிகள், வெப்பகாற்று, இரசாயன வர்ண பூச்சுக்கள், மற்றும் பிளாஸ்டிக் பொருட்களினாலும் கூட நச்சு உண்டாகும். நாம் முழுமையான நச்சு பாதுகாப்பு

பொருத்தப்பட்டுள்ள வீடுகளில் வசிப்பது சாத்தியமற்றது என்ற நிலையில், வீட்டின் உள்ளேயே தங்கியிருக்கும் நேரத்தை குறைத்து கொண்டு வெளியே வர வேண்டும். இவ்வாறு செய்வது காற்றோட்டமில்லாத நச்சு காற்று நிறைந்துள்ள பகுதி உண்டாக்கும் மனச்சோர்வினை நீக்கும். இதனை பெரும்பாலான மக்கள் அறிந்து கொள்வதில்லை. குளிர் காலத்தில் வெளியில் உடற்பயிற்சி செய்வது

என்பது வேடிக்கையானது அல்ல. ஒருமுறை செய்ய ஆரம்பித்த பிறகுகாற்றோட்டமில்லாத நச்சு காற்றினை தவிர்த்து நமக்கு மகிழ்ச்சியை தரும்.

இத்தனை அதிகமான பலன்கள் கிடைக்கும் போது உடற்பயிற்சி மேற்கொள்ள இயந்திரங்களை சார்ந்திருப்பதை விடுத்து இயற்கையை சார்ந்திருப்போமே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Sunday, March 30, 2014, 7:00 [IST]
Desktop Bottom Promotion