For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

By Maha
|

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் தயாரிக்கப்பட்ட எலுமிச்சை ஜூஸைக் குடிப்பது மிகவும் நல்லது என்று பலர் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். ஆம், அவர்கள் சொல்வது 100% உண்மை. எலுமிச்சையில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அதனால் தான் எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனைக்கு இயற்கை வழியை நாடும் போது, அதில் நிச்சயம் எலுமிச்சை முக்கிய பங்கினைப் பெறுகிறது.

விரைவில் உடல் எடையில் மாற்றம் வேண்டுமா? உணவில் தேன் மற்றும் பட்டையை சேத்துக்கோங்க...

சரி, நன்மை என்று சொல்கிறார்களே, என்ன நன்மை என்று உங்களுக்குத் தெரியுமா? அதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். அதுமட்டுமின்றி, தவறாமல் தினமும் காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை ஜூஸ் குடித்தும் வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செரிமானத்திற்கு உதவும்...

செரிமானத்திற்கு உதவும்...

எலுமிச்சையானது செரிமானத்திற்கு உதவும் பித்தநீரை சுரக்க உதவுகிறது. மேலும் இதில் கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், அவை செரிமான பாதையில் உள்ள டாக்ஸின்களை எளிதில் வெளியேற்றும். மேலும் நிபுணர்கள் கூட காலையில் வெதுவெதுப்பான நீரில் செய்யப்பட்ட எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் குடலியக்கம் சீராக இருக்கும் என்று சொல்கின்றனர்.

உடல் எடையை குறைக்க உதவும்

உடல் எடையை குறைக்க உதவும்

இது அனைவருக்குமே தெரிந்த நன்மையாகவே இருக்கும். அதிலும் ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து, அதில் தேன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும். இதனால் எலுமிச்சையில் உள்ள பெக்டின் என்னும் நார்ச்சத்து நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும் விரைவில் உடல் எடை குறைவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

சுத்தமான சருமம்

சுத்தமான சருமம்

எலுமிச்சையானது இரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு மட்டுமின்றி, புதிய இரத்த செல்களின் உற்பத்திக்கும் உதவியாக உள்ளன. அதிலும் இந்த ஜூஸில் தேன் சேர்த்து குடிப்பதால், அவை கொலாஜனை ஊக்குவித்து, சருமத்தை சுத்தமாகவும், பொலிவோடும் வைத்துக் கொள்ள உதவுகிறது.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

எலுமிச்சையில் வைட்டமின் சி வளமாக நிறைந்திருப்பதால், அவற்றை வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து பருகும் போது, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்களின் தாக்கத்தில் இருந்து உடலைப் பாதுகாக்கும். மேலும் இதில் உள்ள பொட்டாசியம் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைப்பதோடு, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.

நச்சுக்களை வெளியேற்றும்

நச்சுக்களை வெளியேற்றும்

முன்பே கூறியது போல எலுமிச்சையானது செரிமான பாதையில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்ற உதவுகிறது. அதே சமயம் அவை சிறுநீரின் அளவை அதிகரித்து, உடலில் தங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் வழியாக வெளியேற்றி, சிறுநீரகத்தை ஆரோக்கியமாக செயல்படவும் வைக்கிறது. அதுமட்டுமின்றி, எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் ஆசிட், கல்லீரலில் உள்ள நொதிகளின் செயல்பாட்டினை ஊக்குவிக்கிறது.

குறிப்பு

குறிப்பு

எலுமிச்சையானது மிகவும் புளிப்பாக இருப்பதால், அதனை நீருடன் சேர்த்து பருக வேண்டும். அதிலும் குளிர்ச்சியான நீரை விட வெதுவெதுப்பான நீரில் சேர்த்து பருகினால் தான் செரிமான மண்டலத்தில் எளிதில் இயக்க முடியும். அதுமட்டுமின்றி, காலையில் வெறும் வயிற்றில் பருகுவதால், மேற்கூறிய நன்மைகள் கிடைத்து, எப்போதும் உடலானது புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 Reasons You Should Be Drinking Warm Lemon Water Every Morning

Drinking freshly squeezed lemon juice mixed with a cup of lukewarm water every morning right after you wake up can go a long way in aiding your health.
Desktop Bottom Promotion