For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் 15 அறிகுறிகள்!!!

By Maha
|

சரியான அளவில் தண்ணீர் குடிப்பது என்பது மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் இதனால் உடலின் செயல்பாடுகள் அனைத்தும் முறையாக செயல்பட்டு, நீண்ட நாட்கள் உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். எப்படியெனில், தண்ணீர் அதிகம் பருகினால், உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஊட்டச்சத்துக்கள் எடுத்துச் செல்வதோடு, மெட்டபாலிசம் அதிகரிக்கப்பட்டு, உறுப்புகள் பாதுகாப்பட்டு, நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, உடலின் வெப்பமும் சீராக இருக்கும்.

சுவாரஸ்யமான ஒன்று: தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் 12 நன்மைகள்!!!

மேலும் உடலின் பெரும்பாலான உறுப்புகள் நீராக உருவானது. அதில் 70 சதவீத தண்ணீரால் தசைகளும், 90 சதவீத தண்ணீரால் மூளையும் மற்றும் 83 சதவீத தண்ணீரால் இரத்தமும் உருவாகியுள்ளது. எனவே தான் உடலின் அனைத்து பாகங்களுக்கும் தண்ணீர் மிகவும் இன்றியமையாததாக உள்ளது. ஆகவே தான், உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு அனைத்து மருத்துவர்களும் தண்ணீரை அதிகம் பருக வேண்டும் என்று சொல்கின்றனர்.

கருப்பு நிறத்தில் மலம் வெளியேறுவதற்கான காரணங்கள்!!!

அதுமட்டுமின்றி, பல ஆய்வுகளும், உடலின் செயல்பாடுகள் தங்கு தடையின்றி நடைபெற வேண்டுமெனில், ஒரு நாளைக்கு குறைந்தது 8 டம்ளர் தண்ணீரை பருக வேண்டும் என்றும் சொல்கிறது. சரி, இப்போது உடலில் தண்ணீர் குறைவாக உள்ளது, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகளைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தாகம்

தாகம்

உடலில் தண்ணீர் குறைந்த அளவில் இருந்தால், அடிக்கடி தாகம் ஏற்படும். தாகம் என்பது உடலில் தண்ணீர் குறைபாட்டை வெளிப்படுத்தும் முக்கியமான அறிகுறிகளில் ஒன்று.

வாய் வறட்சி

வாய் வறட்சி

வாயானது அடிக்கடி வறட்சியடைந்தால், தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதற்கான அறிகுறியாகும்.

அடர் நிறத்தில் சிறுநீர்

அடர் நிறத்தில் சிறுநீர்

சிறுநீரானது வெளிர் மஞ்சள் நிறத்தில் வந்தால், உடலில் சரியான அளவில் தண்ணீர் உள்ளது என்று அர்த்தம். அதுவே சிறுநீரானது நல்ல அடர் நிறத்தில், கடுமையான துர்நாற்றத்துடன் வெளிவந்தால், உடலில் தண்ணீர் குறைவாக உள்ளது என்று அர்த்தம்.

கண்ணீர்

கண்ணீர்

அழும் போது, கண்களில் இருந்து போதிய தண்ணீர் வராவிட்டால், உடல் தண்ணீரின்றி வறட்சியுடன் உள்ளது என்றும், அதிகமான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் அர்த்தம்.

சோர்வு

சோர்வு

உடலில் போதிய தண்ணீர் இல்லாவிட்டால், உடலானது நன்கு செயல்படுவதற்கு தேவையான சக்தியானது இல்லாமல், சோர்வுடன் இருக்கும். இவ்வாறு அடிக்கடி சோர்வு ஏற்பட்டால், உடலில் தண்ணீர் குறைவாக உள்ளது, அதிகம் குடிக்க வேண்டும் என்று பொருள்.

பசி உணர்வு

பசி உணர்வு

சிலருக்கு உடல் வறட்சி அதிகமாகி, தாகத்தையும் தாண்டி, அதிகப்படியான பசியானது ஏற்படும். இவ்வாறு அடிக்கடி பசி உணர்வு ஏற்பட்டால், அது உணவு உண்பதற்கான அறிகுறி அல்ல. மாறாக அது உடலில் வறட்சி உள்ளது என்பதை சொல்லாமல் சொல்கிறது. ஆகவே இந்நேரத்தில் தண்ணீரை அதிகம் பருக வேண்டும்.

வறட்சியான சருமம்

வறட்சியான சருமம்

உடலில் உள்ள மிகப்பெரிய உறுப்பு தான் சருமம். இந்த சருமத்திற்கு அதிகப்படியான தண்ணீரானது மிகவும் அவசியம். இல்லாவிட்டால், அது சருமத்தில் வறட்சி அல்லது செதில்செதிலான சருமத்தை ஏற்படுத்தி, தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்று சொல்லும்.

குறைவான வியர்வை

குறைவான வியர்வை

உடலின் வியர்வையானது தண்ணீரால் உருவானது. ஆனால் உடலில் போதிய தண்ணீர் இல்லாவிட்டால், வியர்வையானது வற்றிவிடும். இதனால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேற்றப்படுவது தடைபட்டு, சருமத்தை மட்டுமின்றி, உடலையும் ஆரோக்கியமற்றதாக்கிவிடும்.

மயக்க உணர்வு

மயக்க உணர்வு

உடலில் வறட்சி இருந்தால், தலைவலியுடன், மயக்கமும் உருவாகும். எனவே தேவையில்லாமல், இத்தகைய உணர்வுகள் ஏற்பட்டால், தண்ணீரை அதிகம் பருக ஆரம்பியுங்கள்.

தசைப்பிடிப்பு

தசைப்பிடிப்பு

70 சதவீதம் தண்ணீரால் ஆன தசைகளில், தண்ணீர் குறைவாக இருந்தால், தசைப்பிடிப்பு, தசை வலிகள் போன்றவை உடற்பயிற்சி செய்யும் போதோ அல்லது செய்த பின்னரோ ஏற்படும்.

இதய படபடப்பு

இதய படபடப்பு

இதயம் கூட தண்ணீரால் ஆனது தான். இத்தகைய இதயத்திற்கு போதிய நீரானது இரத்த ஓட்டத்தின் மூலம் கிடைக்கும். ஆனால் இரத்தத்திற்கே போதிய தண்ணீரானது கிடைக்காவிட்டால், இதயத்திற்கு செல்ல வேண்டிய இரத்தத்தின் அளவும் குறைந்து, அடிக்கடி படபடப்பை ஏற்படுத்திவிடும். எனவே அடிக்கடி இதய படபடப்பு ஏற்படுமாயின், உடலில் போதிய நீர் இல்லை என்று அர்த்தம்.

சரும நெகிழ்வுத்தன்மை

சரும நெகிழ்வுத்தன்மை

உடலில் நீர் வறட்சி இருந்தால், சருமத்தின் நெகிழ்வுத் தன்மையானது குறைந்துவிடும். மேலும் இதனால் சருமம் முதுமை தோற்றத்தை அடைந்தவாறு வெளிப்படுத்தும். ஆகவே இந்த மாதிரியான நேரத்தில் தண்ணீரை அதிகம் பருக வேண்டும்.

மலச்சிக்கல்

மலச்சிக்கல்

மலச்சிக்கல் ஏற்படுவதும், தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதற்கான அறிகுறியே. ஏனெனில் உடலில் போதிய நீர் இல்லாவிட்டால், குடலானது செரமானமடைந்த உணவை எளிதாக வெளியேற்ற முடியாமல், மலத்தை இறுக்கமடையச் செய்துவிடும்.

அதிகப்படியான உடல் வெப்பம்

அதிகப்படியான உடல் வெப்பம்

உடலின் வெப்பநிலையானது போதிய அளவில் இல்லாமல், அதிகப்படியான வெப்பத்துடன் இருந்தால், அது உடலில் போதிய தண்ணீர் இல்லாததற்கான அறிகுறிகளில் ஒன்றாகும். ஆகவே உடலானது அதிகப்படியான வெப்பத்தில் இருந்தால், தண்ணீர் அதிகம் பருகினால் சரியாகிவிடும்.

ஒற்றை தலைவலி

ஒற்றை தலைவலி

உடலில் நீர் வறட்சி இருந்தால், ஒற்றை தலைவலி ஏற்படும். எனவே அடிக்கடி ஒற்றை தலைவலி வந்தால், தண்ணீர் அதிகம் பருகுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

15 Signs That You Need To Drink More Water

The amount of water required daily by a person is subject to various factors. But on an average, scientists agree that every individual needs at least 8 glasses of water every day to keep the body running smoothly. Let us look at the various signs that you need to drink more water.
Desktop Bottom Promotion