Latest Updates
-
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும்
மனம் அமைதியாக இருந்தால் எளிதில் தாய்மை அடையலாம் !

தாய்மை என்பது ஒரு வரம். திருமணமான ஒவ்வொரு பெண்ணும் தாய்மைக்காக தவம் இருக்கின்றனர். ஆனால் மாறிவரும் உணவுப்பழக்கத்தினாலும், சமூக மாற்றத்தினாலும் இன்றைக்கு இந்திய பெண்களிடையே கருமுட்டை உற்பத்தி குறைந்து நாளடைவில் அவர்கள் தாய்மை அடையவே தகுதியற்றவர்களாக மாறிவருகின்றனர் என்ற அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த
அபாயமணியை அடித்திருப்பவர்கள் மிகப்பிரபலமான விஞ்ஞானிகள்.
கருமுட்டை உற்பத்தி
பெண் குழந்தைகள் வயதிற்கு வந்த உடன் அவர்களுக்கு 3 லட்சம் முதல் 5 லட்சம் கரு முட்டைகள் வரை உற்பத்தியாகிறது. அது வயதாக வயதாக குறைந்து 37 வயதில் 25000 கருமுட்டைகள் மட்டுமே பெண்ணிற்கு உற்பத்தியாகின்றன. மெனோபாஸ் பருவம் நெருங்கும் போது அது ஆயிரமாக குறைந்து போகிறது. எனவேதான் 32 வயதிற்குள்ளாகவே பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். 37 வயதிற்கு மேல் கருமுட்டை உற்பத்தி குறைந்து போவதோடு தாம்பத்ய வாழ்க்கையிலும் பாதிப்பு ஏற்படுகிறது.
குழந்தை பிறப்பை தடுக்காதீங்க
சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவின் நகர்புறங்களில் வசிக்கும் தம்பதியினர் 10 சதவிகிதம் பேர் வரை குழந்தை பெற்றுக்கொள்ளும் தகுதியை இழந்து வருகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. இதில் 30 முதல் 40 சதவிகிதம் வரை 35 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள். இதற்கு காரணம் பணிக்காக பெண்கள் தங்களின் திருமணத்தை தள்ளிப்போடுவதும், குழந்தை பிறப்பை ஒத்திப்போடுவதும்தான் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
ஆண் மலட்டுத்தன்மைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அதில் முக்கியமாக விந்தணு குறைபாடு, ஹார்மோன் சுரப்பில் மாறுபாடு, தொற்றுநோய், புகை மற்றும் ஆல்கஹால் போன்றவை ஆண் மலட்டுத்தன்மைக்கு காரணமாக கூறப்படுகின்றன.
அதேபோல் பெண்களுக்கு கருப்பை கோளாறு, கருமுட்டை உற்பத்தியில் பாதிப்பு, தொற்று நோய், காயம், புற்றுநோய்க்காக சிகிச்சை மேற்கொள்ளுதல் போன்றவை மலட்டுத்தன்மைக்கு காரணமாக கூறப்படுகின்றன.
தாமதம் வேண்டாம்
வயதான பிறகு குழந்தை பெற்றுக்கொள்வது நடிகைகளுக்கு வேண்டுமானால் ஒத்துக்கொள்ளக்கூடியதாக இருக்கலாம். ஆனால் சராசரி இந்தியப்பெண்கள் ஒரு குறிப்பிட்ட வயதிற்குள் தாய்மை அடைய வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இல்லையெனில் பெண்ணின் கரு முட்டைக்குள் நுழையும் விந்தணுக்கள் பெண்ணின் உடம்பில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே 33 வயதிற்குள் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.
35 வயதிற்கு மேற்பட்ட தம்பதியர் கருத்தரிப்பதில் தாமதம் ஏற்பட்டால் அவர்கள் உடனடியாக மகப்பேறு சிறப்பு மருத்துவர்களை அணுகவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். இன்றைக்கு குழந்தையில்லாத தம்பதியர்களுக்கு வரப்பிரசாதமாக செயற்கை கருத்தரித்தல் முறை உள்ளிட்டவைகள் வந்துள்ளன இதன்மூலம் ஒரு குழந்தைக்கு தாயாக முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
சரியான உணவு முறை
மன அழுத்தம் இன்றி வாழ்க்கையை மகிகழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் சத்தான உணவுகளை உட்கொண்டு சரியான வாழ்க்கை முறையை வாழவேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். தியானம், யோகா போன்றவைகளை தினசரி செய்து மனதையும், உடலையும் அமைதியாக வைத்துக்கொள்வதன் மலட்டுத்தன்மை ஏற்படாமல் தவிர்க்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications