Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
திகில் படங்களைப் பார்த்தால் கலோரி காலி!: ஆய்வில் தகவல்
உடற்பயிற்சி செய்தால் உடலில் கலோரி குறையும் என்பார்கள். ஆனால் திகில் படங்களைப் பார்ப்பதன் மூலம் உடலில் கலோரி குறையும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
உடல் பருமன் பிரச்சினை இன்றைக்கு பலரையும் வாட்டி வதைக்கிறது. உடலை இளைக்க வைக்க டயட்டில் இருக்கின்றனர் பலர். உடற்பயிற்சி செய்து கலோரியை குறைக்க முயற்சி செய்கின்றனர் ஏராளமானோர். ஆனால் புதிதாக திகில், திரில்லர் படங்களை பார்ப்பதன் மூலம் உடல் இளைக்கும் என்று கூறி ஆச்சரியப்படத்தக்க செய்தியை வெளியிட்டுள்ளனர் ஆய்வாளர்கள்.
90 நிமிடங்கள் திகில் படங்கள் பார்த்தால் 113 கலோரி காலியாகிறதாம். 1980ம் ஆண்டு வெளியான ‘தி சைனிங்' என்ற திரைப்படத்தைப் பார்த்தால் 184 கலோரிகள் காலியாகிவிடுமாம். ‘ஜாஸ்' படத்தை பார்த்தவர்களுக்கு 158 கலோரிகள் காலியானதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் 10 திகில்படங்களை பார்வையிட பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் இதயத்துடிப்பு, ஆக்ஸிஜன் எடுத்துக்கொள்வது, கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றம் போன்றவைகளின் செயல்பாடு கண்காணிக்கப்பட்டது. திரில்லர் படங்களைப் பார்க்கும் போது உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்களினால் அவர்களின் கலோரி எரிக்கப்படுவது கண்டறியப்பட்டது. திகில் படங்களினால் மனிதர்களின் நாடித்துடிப்பு அதிகரிக்கிறது இதயத்துடிப்பை எகிறுகிறது என்கிறார் வெஸ்ட்மினிஸ்டர் பல்கலைக்கழக பேராசிரியர் ரிச்சர்ட் மெக்கன்சி. இதனால் ரத்த ஓட்டம் உடலில் வேகமாக செலுத்தப்படுகிறது. தேவையற்ற கலோரிகள் காலியகின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள்.
திகில் படம் பார்ப்பவர்கள் சீட்டு நுனிக்கு வந்து விடுவார்கள். தலைமுடி கூட சிலருக்கு குத்திட்டு நிற்கும். தலையணையை அழுத்தமாக பிடித்துக்கொள்வார்கள். இதுபோன்ற செயல்கள் உடலுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தி அவர்களின் உடலில் தேவையற்ற கலோரிகளை காலி செய்கின்றனவாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
