Latest Updates
-
தலைசுற்ற வைக்கும் இந்திய அரசர்களின் ஆடம்பரம் - எதுக்கெல்லாம் கோடிக்கணக்குல செலவு பண்ணிருக்காங்க பாருங்க -
ராகு-கேது பெயர்ச்சி 2026: மேஷம் முதல் கன்னி வரை யாருக்கு ராஜயோகம்?- விளக்கும் ஜோதிடர்! -
கேரட் தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
செப்டம்பர் 11, 2026: இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பம் ரெசிபி - இந்த வருஷம் இந்த சூப்பரான இனிப்பை செஞ்சு பாருங்க -
காளான் வாங்குனா ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்.. -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடத்துல கண்ணாடியை வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பீங்க.. -
97 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? இந்த நாட்டில் ஒரு ஹாஸ்பிடல் கூட இல்லையாம்
சத்தான உணவு சாப்பிடுங்க..கருப்பை கோளாறு வராது

அடிக்கடி அபார்சன், அடிக்கடி குழந்தைப்பேறு, மாதவிலக்கின் போது அதிக உதிரப்போக்கு, நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம் போன்றவைகளினால் கருப்பை பாதிக்கப்படும் என்கின்றனர் மருத்துவர்கள். பரம்பரை காரணமாகவும் கருப்பை பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.
கருப்பையை பாதுகாக்க நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளவேண்டும். உணவில் கூடுமானவரை உப்பை குறைக்கவேண்டும். அரிசி சாதத்தை குறைத்து காய்கறி, கீரைகளை அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டும். ஆட்டு ஈரலை எடுத்து சூப் வைத்து குடித்தால் கர்ப்பப்பை பலப்படும். முருங்கைக்கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால் கருப்பைக்கு நன்மை தரும்.
கருப்பை கோளாறுகள் வராமல் தடுக்க அசோகமரப்பட்டையை பொடி செய்து பாலில் கலந்து குடிக்கலாம். அருகம்புல் வேருடன் வெண்ணெய் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்சனை குணமாகும். அசோகமரப்பட்டை, மாதுளம் பழத்தை காய வைத்து பொடி செய்து தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் மூன்று சிட்டிகை அளவுக்கு தண்ணீரில் கலந்து குடித்தால் கருப்பை கோளாறுகள் குணமாகும்.
ஆற்றுத்தும்பட்டியை மூலப்பொருளாக கொண்டு செய்யப்படும் குன்மகுமோரி மெழுகை கடைகளில் வாங்கி பட்டாணி அளவு தினமும் சாப்பிட்டு வந்தால் கருப்பை சார்ந்த அத்தனை கோளாறுகளும் தீரும். ஆலமரப்பட்டையை பொடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் கருப்பை வீக்கம் குணமாகும்.
பத்து கிராம் இம்பூறல் வேர்ப்பட்டையுடன் ஒரு கிராம் பெருங்காயம் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் மாதவிலக்கு கோளாறு சரியாகும். கரிசலாங்கண்ணி கீரைச்சாறு 30 மில்லியுடன் பருப்பு கீரைசாறு 30 மில்லி எடுத்து இரண்டையும் ஒன்றாக கலந்து தினமும் காலையில் சாப்பிட்டால் ஆரம்பநிலை புற்றுநோய் குணமாகும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
