For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கால் வலி அதிகமாக இருக்கிறதா?

By Maha
|

Leg Pain
இன்றைய காலகட்டத்தில் உடலில் பல வலிகள் வருகின்றன. அதற்கு முக்கிய காரணம், நல்ல ஊட்டச்சத்துக்கள் இருக்கும் உணவுகளை உண்ணாமல் இருப்பதே ஆகும். அவ்வாறு உண்ணாமல் இருப்பதால் உடலைத் தாங்குகின்ற கால்கள் வலுவிழந்து, சோர்வடைந்து வலிகள் ஏற்படுகின்றன. மேலும் பெண்களுக்கே இத்தகைய வலிகள் அதிகம் வருகின்றன. அதற்கு காரணம், அவர்கள் அணியும் செருப்புகள். ஏனெனில் செருப்புகள் அணியும் போது அதிகமான உயரம் கொண்ட செருப்புகளை அணிவதால் இடுப்பு வலிகளோடு, கால் வலிகளும் வருகின்றன. ஆகவே அத்தகைய கால் வலி மற்றும் கால்களில் அலுப்பு போன்றவற்றை நீக்க ஈஸியான சில வழிகள் இருக்கின்றன. அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

* ஒரு வாளியில் வெழவெதுப்பான நீரை எடுத்துக் கொண்டு, அதில் சிறிது உப்பை போட்டு, கால்களை நீரில் மூழ்கி இருக்குமாறு 15-20 நிமிடம் வைக்கவும். இதனால் கால்களானது வலி இல்லாமல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஒரு வேளை நிறைய நேரம் தண்ணீரில் கால்களை வைக்க நேரம் இல்லாமல் இருப்பவர்கள், குளிக்கும் போது ஒரு வாளியில் வெதுவெதுப்பான தண்ணீரை விட்டு, உட்கார்ந்து கொண்டு கால்களை மட்டும் வாளியில் விட்டுக் கொள்ளலாம். இதனால் கண்டிப்பாக கால் வலியானது போகும்.

*சுளுக்கு எடுக்க தெரிந்திருந்தால், விரல்களை வைத்து கால்களை சுளுக்கு எடுப்பது போல் 15-20 நிமிடம் தேய்த்து இழுத்து விடவும். இதனால் உடனடியாக கால் வலியானது போய்விடும். அது தெரியவில்லை என்றால், கால்களை நன்கு மடக்கி நீட்ட வேண்டும். இது ஒரு சிறந்த உடற்பயிற்சி. தண்ணீரை குடிக்கும் போதெல்லாம், இந்த உடற்பயிற்சியை செய்தால் கால் வலியானது வராமல் இருப்பதோடு, கால்களும் சோர்வடையாமல் இருக்கும்.

* ஒரு டேபிள் ஸ்பூன் காட்-லிவர் எண்ணெயை ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் உடன் கலந்து, படுக்கும் முன்பு குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்தால் கால் வலி போவதோடு, உடலில் இருக்கும் சோர்வும் குறையும்.

* தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை, ஒரு கப் வெதுவெதுப்பான நீருடன் குடிக்க வேண்டும். அது விரைவில் கால் வலி மற்றும் கால் சோர்வை குணப்படுத்தும்.

* உண்ணும் உணவில் அதிகமான அளவு கால்சியம், புரோட்டீன் மற்றும் வைட்டமின் ஈ போன்றவற்றை சேர்த்து உண்ண வேண்டும். அதிலும் இதனை சரியான அளவு உண்டு வந்தால், கால் வலி வராமல் இருக்கும்.

* முழங்கால்களில் வலி ஏற்படும் போது, அந்த இடத்தில் ஐஸ்களை வைத்து 10-15 நிமிடம் ஒத்தடம் தர வேண்டும். இவ்வாறு கொடுத்து வந்தால் எந்த வலியும் ஈஸியாக குணமாகும்.

* முக்கியமாக எப்போது தூங்கும் போதும் கால்களுக்கு அடியில் குஷன் அல்லது தலையணை வைத்து தூங்க வேண்டும். அதனால் கால்கள் வலிக்காமல் இருப்பதோடு, மெதுமெதுப்பான இடத்தில் கால்களை வைத்து தூங்குவதால் தூக்கமும் நன்றாக வரும்.

ஆகவே எப்போதெல்லாம் கால்கள் வலிக்கின்றதோ, அப்போதெல்லாம் நன்றாக ஓய்வு எடுத்தால் கால்கள் வலிக்காது. அதிலும் முதலில் ஹீல்ஸ் போடுவதை முக்கியமாக தவிர்க்க வேண்டும். மேலும் ஆரோக்கியமாக உணவுகளை, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் உணவுகளை உண்டால் கால்கள் வலிக்காமல் இருக்கும்.

English summary

home remedies for tired legs and pain | கால் வலி அதிகமாக இருக்கிறதா?

There are a number of people who experience tiredness in their legs all throughout the day. The worst is getting up with a pain in the leg and having a feeling that you cannot walk. If you are one of these people who are suffering from tired legs frequently, then here are some quick home remedies that can help you get relief from tired legs.
Story first published: Monday, July 30, 2012, 16:14 [IST]
Desktop Bottom Promotion