Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
வலி நீக்கும் மூலிகைத் தேநீர்

பச்சைச் தேயிலை தேநீர்
மருத்துவ குணம் நிறைந்த பச்சைச் தேயிலை ஆன்டி ஆக்ஸிடென்ஸ் அதிகம் உள்ளது. இது பல உடல் நோய்களை தீர்க்கும் வல்லமை படைத்தது. உடல் எடையை கட்டுப்படுத்தும், ஜீரண சக்தியை அதிகரிக்கும். புற்றுநோய் உள்ளிட்ட நோய்களில் இருந்து பாதுகாக்கும். தீராத தலைவலியை போக்கும்.
துளசி தேநீர்
துளசி நமக்கு அருமருந்தாகும். துளசி இலையுடன் சீரகம் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து தேநீராக அருந்தலாம். அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்களுக்கும், வெயில் மற்றும், மழைக்காலங்களில் அலைந்து திரிபவர்களுக்கு துளசி குடிநீர் அருமருந்தாகும். இது உடற்சூடு, பித்தம் போன்றவற்றைத் தணிக்கக் கூடியது.
டைபாய்டு, மஞ்சள்காமாலை, மலேரியா, காலரா நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். தொண்டைச்சளி, வறட்டு இருமல், புகைச்சல், தலையில் நீர் கோர்த்தல், அடிக்கடி தும்மல், போன்றவற்றைப் போக்கும். இரத்தத்தில் உள்ள சளியை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும். தீராத தலைவலியை போக்கும்.
வல்லாரை தேநீர்
காயவைத்த வல்லாரை பொடியை நீரில் போட்டு கொதிக்க வைத்து அனைவரும் அருந்தலாம். இது அறிவுத் திறனுக்கும், ஞாபக சக்திக்கும் ஏற்ற மூலிகையாகும். இது ஞாபக சக்தியைத் தூண்டுவதுடன், பித்த அதிகரிப்பைக் குறைக்கும். இரத்தத்தில் ஏற்படும் இரும்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கி இரத்தச் சோகையை நீக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுக்கும். தலைவலிக்கு சிறந்த மருந்தாகும்.
சீரகத் தேநீர்
சீரகத்தை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி ஆறிய நீரை தினம் தேநீர் போல பருகி வருவது நல்லது. இது இதயத்திற்கு இதமானது. இது உடற் சூட்டைத் தணிக்கும்.பித்தத்தைக் குறைக்கும். இது ரத்தத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்கி, ரத்தத்தைக் சுத்தப்படுத்தும். வியர்வை மற்றும் சிறுநீரைப் பெருக்கும். உடல் சூட்டினால் ஏற்படும் கண் எரிச்சல், வாய்ப்புண் போன்றவற்றை குணமாக்கும். சரும நோய்கள் வராமல் தடுக்கும். தலைவலியை போக்கும்.
லவங்கப்பட்டை தேநீர்
வாசனைப் பொருட்களில் ஒன்றான லவங்கப்பட்டையில் தயாரிக்கப்படும் மூலிகைத் தேநீர் தலைவலியைப் போக்கும். இது வலி நிவாரணியாகவும் விளங்குகிறது.
இஞ்சி தேநீர்
இஞ்சி சிறந்த மூலிகையாகும். இதனை நன்றாக இடித்து தண்ணீர் ஊற்றி தேநீர் தயாரிக்கலாம். தலைவலி, இருமல் போக்கும் எளிதான மூலிகைத் தேநீர் இது. அநேக வீடுகளில் இது தயாரிக்கப்படுகிறது.
சாமந்திப் பூக்கள் தேநீர்
சாமந்திப் பூக்களைக் கொண்டு தயாரிக்கப்படும் மூலிகைத்தேநீர் உடல் நலத்திற்கு ஏற்றது. இதில் ஆன்டி ஆக்ஸிடென்ட், அதிகம் உள்ளது. இது தலைவலியை நீக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
