Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
உடற்பயிற்சி செய்யாமல் தினமும் 1200 கலோரிகளை எரிக்கணுமா? அப்ப இந்த விஷயங்களை டெய்லி செய்யுங்க போதும்..
Weight Loss Tips In Tamil: உலகளவில் உடல் பருமன் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. ஏனெனில் உடல் பருமனால் நிறைய பேர் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதிகரித்த உடல் எடையைக் குறைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதுவும் உடற்பயிற்சியே செய்யாமல் இருப்பவர்கள் உடல் எடையைக் குறைப்பது என்பது சவாலான காரியம் தான்.
உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றால் முதலில் நினைவிற்கு வருவது டயட்டுகளும், உடற்பயிற்சிகளும் தான். அனைவராலுமே உடல் எடையைக் குறைக்க இவ்விரண்டு விஷயங்களையும் மேற்கொள்வது சற்று சிரமம் தான்.

உடல் எடை குறைய வேண்டுமானால், உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை எரிக்க வேண்டும். அதற்கு கலோரிகள் குறைவான உணவுகளை உண்பதோடு, கலோரிகளை எரிக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.
இது தவிர கலோரிகளை எரிக்க வேண்டுமானால் உடற்பயிற்சிகளை அவசியம் செய்ய வேண்டும் என்று பலரும் நினைக்கலாம். ஆனால் உடற்பயிற்சி செய்யாமலேயே தினமும் 1200 கலோரிகள் வரை எரிக்கலாம் என்பது தெரியுமா?
ஆம், கீழே உடற்பயிற்சி செய்யாமலேயே உடலில் உள்ள கலோரிகளை எப்படி எரிப்பது என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினாலே, உடல் எடையில் மாற்றத்தைக் காணலாம்.
உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சியை கட்டாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை நீங்கள் கொண்டிருந்தால், முதலில் அதை மாற்றுங்கள். ஏனெனில் உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சியை விட, நாம் தினமும் வீட்டில் செய்யும் சில வேலைகளே அதிகப்படியான கலோரிகளை எரிக்கும் திறன் கொண்டவை.
எனவே நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவரானால், உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை எரிக்க உதவும் வேறு சில வழிகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
* இதுவரை நீங்கள் வீட்டு வேலைகளை செய்யாமல் இருக்கலாம். ஆனால் எளிய வழியில் எடையைக் குறைக்க நினைத்தால், உங்கள் வீட்டை தினமும் சுத்தம் செய்யுங்கள். ஆய்வுகளானது தினமும் வீட்டின் ஹால், ஒரு படுக்கை அறை மற்றும் ஒரு சமையலறையை சுத்தம் செய்வது 830 கலோரிகளை எரிக்கும், அதாவது 1 மணிநேரம் 30 நிமிடம் செய்யும் HIIT உடற்பயிற்சிக்கு இணையான அளவு கலோரிகளை எரிப்பதாக கூறுகின்றன.
* ஒருவேளை உங்கள் வீடு மிகப்பெரியது என்றால், அதாவது 3 படுக்கையறை, ஒரு பெரிய ஹால், ஒரு பெரிய கிச்சன் போன்றவற்றைக் கொண்டிருந்தால், இவற்றை தினமும் ஒருமுறை சுத்தம் செய்வதன் மூலம், உடலில் இருந்து 1311 கலோரிகள் எரிக்கலாம்.
* அதுவும் 3 படுக்கையறை மற்றும் ஒரு சமையலறையை மட்டும் சுத்தம் செய்தால் 276 கலோரிகள் எரிக்கப்படும். அதாவது இது 40 நிமிட ஜாக்கிங் செய்வதால் எரிக்கப்படும் கலோரிகளின் அளவாகும்.
* முக்கியமாக வீட்டை சுத்தம் செய்யும் போது நாம் உடற்பயிற்சிகளின் போது மேற்கொள்ளும் சில நிலைகளை நம்மை அறியாமல் மேற்கொள்வோம். உதாரணமாக வீட்டை சுத்தம் செய்யும் போது ஸ்குவாட்டிங் நிலையில் இருப்போம். இந்நிலையானது பிட்டம் மற்றும் கால்களைச் சுற்றியுள்ள கொழுப்பைக் குறைத்து, தசைகளை வலுவாக்க உதவுகின்றன.
* தினமும் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை வாங்க பைக்கில் செல்லாமல், காற்றோட்டமாக நடந்து சென்றால், அது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடல் எடையை வேகமாக குறைக்க உதவி புரியும்.
* வீடு மற்றும் அலுவலகத்தில் லிப்ட் இருந்தால், அவற்றைத் தவிர்த்து, படிக்கட்டுகளை பயன்படுத்துங்கள். இதனால் கால் மற்றும் தொடைகளில் உள்ள தசைகளுக்கு, அது ஒரு சிறந்த உடற்பயிற்சியாக இருக்கும் மற்றும் கால்கள் வலுவாகவும், சிக்கென்றும் இருக்கும்.
* வீட்டில் துணிகள் இருந்தால், அவற்றை வாஷிங் மெஷினில் போடாமல், கைகளினாலேயே துவைத்து போடுங்கள். அதேப் போல் போன் பேசும் போது, படுத்துக் கொண்டு அல்லது உட்கார்ந்து கொண்டு பேசாமல், நடந்து கொண்டே பேசுங்கள்.
உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் மட்டும் போதாது, உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சியில் ஈடுபட முடியவிட்டாலும், அதை விட சிறந்த பலனைத் தரும் வீட்டு வேலைகளை தினமும் செய்து வந்தாலே, வீடும் சுத்தமாக இருக்கும், உடலும் ஃபிட்டாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications