Latest Updates
-
புதன் கன்னி ராசியில் உதயமாவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா?
அதிக கஷ்டப்படாம தொப்பையை குறைக்கணுமா? இந்த 2 பொருளை தண்ணில கொதிக்க வெச்சு 2 வேளை குடிங்க போதும்...!
Weight Loss Tips In Tamil: தற்போதைய உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை மற்றும் வேலையின் காரணமாக நிறைய பேர் தொப்பையைக் கொண்டுள்ளனர். ஒருவருக்கு தொப்பை வந்துவிட்டால், அவரது உடல் ஆரோக்கியம் பாழாகத் தொடங்கிவிட்டது என்று அர்த்தம்.
தொப்பையானது அதிகப்படியான கொழுப்புக்களின் தேக்கத்தினால் வருபவை. எனவே ஆரோக்கியமாக இருக்க நினைப்பவர்கள், தொப்பையைக் குறைக்க கட்டாயம் முயற்சிக்க வேண்டும். தொப்பையைக் குறைக்க ஏராளமான டயட்டுகள் இணையத்தில் உலா வருகின்றன.

ஆனால் நன்கு சாப்பிட்டு பழக்கப்பட்டவர்களால் டயட்டை மேற்கொள்வது என்பது முடியாத ஒன்று. அத்தகையவர்கள் எளிய முறையில் எப்படி உடல் எடை மற்றும் தொப்பையைக் குறைப்பது என்று வழிகளைத் தேடிக் கொண்டிருப்பார்கள். நீங்களும் அப்படி ஈஸியான வழியில் தொப்பையைக் குறைக்க விரும்புகிறீர்களானால், ஒரு அற்புதமான வழி உள்ளது.
அதுவும் நமது வீட்டு சமையலறையில் உள்ள கிராம்பு மற்றும் எலுமிச்சைக் கொண்டு எளிய வழியில் தொப்பையைக் குறைக்கலாம். அதற்கு இந்த இரண்டையும் கொண்டு ஒரு பானம் தயாரிக்க வேண்டும். இப்போது கிராம்பு மற்றும் எலுமிச்சை எப்படி தொப்பையைக் குறைக்க உதவுகிறது மற்றும் இந்த இரண்டையும் கொண்டு எப்படி பானத்தை தயாரிப்பது என்பன குறித்து விரிவாக காண்போம்.
கிராம்பு எப்படி எடையைக் குறைக்க உதவுகிறது?
சமையலறையில் உள்ள கிராம்பு பல்வலியை குணப்படுத்தும் என்பதை அனைவரும் அறிவோம். மேலும் கிராம்பு சர்க்கரை நோய், ஆஸ்துமா மற்றும் இதய நோய் போன்ற பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு நன்மை அளிக்கிறது. அதுமட்டுமின்றி, கிராம்பு உடல் எடையைக் குறைக்கவும் பெரிதும் உதவி புரியும்.
கிராம்பில் வைட்டமின் ஈ, வைட்டமின் சி, ஃபோலேட், ரிபோஃப்ளேவின், வைட்டமின் ஏ, தயமின் மற்றும் வைட்டமின் கே போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனால் கிராம்பை உட்கொள்வதன் மூலம், அது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, செரிமானத்தை மேம்படுத்தி, உடல் எடை இழப்பிற்கு உதவி புரிகிறது.
கிராம்பில் கொலஸ்ட்ரிமிக் எதிர்ப்பு மற்றும் லிப்பிட் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இந்த கிராம்பை மிளகு, பட்டை, சீரகம் போன்ற மசாலாக்களுடன் சேர்த்து எடுக்கும் போது, அது உடலின் மெட்டபாலிசய அளவை அதிகரிக்க உதவி புரிந்து, உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகிறது. இது தவிர கிராம்பில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் குறைவதன் மூலம், பல நாள்பட்ட நோய்களின் அபாயம் குறையும்.
எலுமிச்சை எப்படி எடையைக் குறைக்க உதவுகிறது?
எலுமிச்சை உடல் எடையைக் குறைக்க உதவும் அற்புதமான பழம் என்பதை அனைவருமே அறிவோம். இதற்கு எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் காரணம். இவை செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. ஒருவரது செரிமானம் சிறப்பாக இருந்தாலே தொப்பை வராது. மேலும் எலுமிச்சையில் டயூரிக் பண்புகள் உள்ளன. இவை உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவி புரிகிறது.
இந்த எலுமிச்சையுடன் கிராம்பை சேர்த்து ஒரு பானம் தயாரித்து உட்கொள்ளும் போது, அது உடலின் மெட்டபாலிசத்தை இருமடங்கு அதிகரித்து, அதிகப்படியான உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க உதவுகிறது. இப்போது அந்த பானத்தை எப்படி தயாரிப்பது என்பதைக் காண்போம்.
தேவையான பொருட்கள்:
* கிராம்பு - 10
* எலுமிச்சை - 3-4
தயாரிக்கும் முறை:
* ஒரு பாத்திரத்தில் 1 லிட்டர் நீரை ஊற்றி, அதில் 10 கிராம்பைப் போட்டு அடுப்பில் வைத்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* பின் எலுமிச்சைகளை நீரில் கழுவி, அவற்றை வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த எலுமிச்சைகளை கிராம்பு நீரில் பிழிந்து, எலுமிச்சையின் தோலையும் அப்படியே அந்நீரில் போட்டு, குறைந்தது 10 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு அதை வடிகட்டி, ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
எப்போது மற்றும் எப்படி குடிக்க வேண்டும்?
* இந்த கிராம்பு எலுமிச்சை நீரை தினமும் காலையில் எழுந்ததும் காபி, டீ-க்கு பதிலாக ஒரு டம்ளர் குடிக்க வேண்டும்.
* அதேப் போல் இந்த பானத்தை இரவு உணவு உண்ட பின் ஒரு டம்ளர் குடிக்க வேண்டும்.
* இந்த பானத்தை தொடர்ந்து 14 நாட்கள் குடித்து வந்தால் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications