Latest Updates
-
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்..
ஒரே வாரத்தில் உடல் எடையில் மாற்றம் தெரியணுமா? அப்ப தினமும் 2 வேளை இந்த பானத்தை குடிங்க...
Weight Loss Tips In Tamil: உடல் எடை குறைய வேண்டுமா? உங்கள் வயிறு பானை போன்று வீங்கி அசிங்கமாக உள்ளதா? உங்களின் முதன் நோக்கம் உடல் எடையைக் குறைத்து சிக்கென்று மாறுவது தானா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது.
ஏனெனில் இக்கட்டுரையில் உடல் எடையைக் குறைக்க உதவும் ஒரு அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளன. நமது சமையலறையில் உடல் எடையைக் குறைக்க உதவும் ஏராளமான பொருட்கள் உள்ளன.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் உடல் எடையைக் குறைக்க உதவி புரிகின்றன. அதில் ஒரு பொருள் தான் பூண்டு. இந்த பூண்டு உணவிற்கு நல்ல மணத்தையும், சுவையையும் கொடுப்பதோடு, உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன.
அதில் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவது, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குவது, இரத்த அழுத்தத்தைக் குறைப்பது, இரத்த நாளங்களில் உள்ள அழற்சியைக் குறைத்து பாதுகாப்பு அளித்து, இதய நோயின் அபாயத்தைக் குறைப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை. இது தவிர பூண்டு உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவி புரிகிறது.
அதுவும் உடல் எடையைக் குறைக்க நினைப்போர் பூண்டுகளை சரியான வழியில் உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைத்து, குறுகிய நாட்களிலேயே சிக்கென்று மாறலாம். உடல் எடை இழப்பிற்கு பூண்டு பற்களை பலவாறு ஒருவர் உட்கொள்ளலாம். குறிப்பாக இதைக் கொண்டு பானம் தயாரித்துக் குடித்து வந்தால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.
பூண்டு எப்படி எடையைக் குறைக்க உதவுகிறது?
பூண்டு ஒருவரது பசியுணர்வை நீண்ட நேரம் கட்டுப்படுத்துகிறது மற்றும் இது செரிமான செயல்முறையை சிறப்பாக செயல்பட வைக்கிறது. ஒருவரது செரிமானத்தில் பிரச்சனை இருந்தால் தான், உணவுகளானது உடலில் தேங்கி உடல் எடையை அதிகரிக்கும். ஆனால் பூண்டில் உள்ள உட்பொருட்கள், ட்ரைகிளிசரைடுகளை எதிர்த்துப் போராடுகிறது மற்றும் கலோரிகளை எரிப்பதில் வல்லவை.
ஆய்வு ஒன்றில் கூட, தொடர்ந்து பூண்டு உட்கொண்டு வந்தால், அது வயிறு மற்றும் பிட்டப் பகுதியில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்க உதவுவது நிரூபிக்கப்பட்டுள்ளன.
பூண்டில் எடை இழப்பில் முக்கிய பங்கை வகிக்கும் வைட்டமின் பி6, வைட்டமின் சி, நார்ச்சத்து, மாங்கனீசு, கால்சியம் போன்றவை அதிகம் நிறைந்துள்ன. முக்கியமாக பூண்டு மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவுகிறது. அதுவும் பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் பொருள், கெட்ட கொலுப்புக்களைக் குறைக்க உதவுகிறது.
பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடலாமா? கூடாதா?
பூண்டு பற்களை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது என்பதற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை. எனவே இதை எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். அதுவும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 2 பல் பூண்டு சாப்பிட்டால், அது உடலில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
சொல்லப்போனால், பூண்டு பற்களை எப்போதும் தோல் உரித்ததும் சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால், காற்றில் அதன் தன்மை குறைந்துவிடும். இப்போது உடல் எடையைக் குறைக்க உதவும் பூண்டு பானத்தை எப்படி தயாரிப்பது மற்றும் அந்த பானத்தை எந்த நேரத்தில் குடிக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
பூண்டு பானம் தயாரிக்க தேவையான பொருட்கள்:
* பூண்டு - 3 பல்
* இஞ்சி - 1 பெரிய துண்டு
* சுடுநீர் - 1 டம்ளர்
* எலுமிச்சை - பாதி
செய்முறை:
* முதலில் பூண்டு மற்றும் இஞ்சியின் தோலை நீக்கிவிட வேண்டும்.
* பின் பூண்டு மற்றும் இஞ்சியைத் துருவிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு டம்ளர் நன்கு கொதிக்க வைத்த நீரை எடுத்து, அதில் துருவிய இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் எலுமிச்சை சாற்றினைப் பிழிந்து, மூடி வைத்து 10 நிமிடம் தனியே வைக்க வேண்டும்.
* அடுத்து அதை வடிகட்டினால், பூண்டு பானம் தயார்.
எப்போது குடிக்க வேண்டும்?
நீங்கள் உடல் தொப்பையை வேகமாக குடிக்க வேண்டுமென்று விரும்பினால், அதுவும் இந்த பூண்டு பானத்தை காலையில் எழுந்ததும் காலை உணவு உண்பதற்கு முன் ஒரு டம்ளர் குடிக்க வேண்டும். அதே போல், இரவு உணவு உண்பதற்கு முன் ஒரு டம்ளர் குடிக்க வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால், உடல் எடை மற்றும் தொப்பையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

