Latest Updates
-
Krishna Janmashtami 2026: கிருஷ்ண ஜெயந்தி எப்போது வருகிறது? வீட்டில் எப்படி பூஜை செய்யணும் தெரியுமா? -
ராகி மாவும், பச்சை பயறும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி கொழுக்கட்டை செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியன்-புதன்-கேது நட்சத்திரம் ஒரே நட்சத்திரத்தில் இணைவதால் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
பரங்கிக்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்கறி செஞ்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அருமையா இருக்கும் -
ஒரு லிட்டர் பெட்ரோல் விற்றால் பெட்ரோல் பங்க்-க்கு எவ்வளவு ரூபாய் லாபம் கிடைக்கும் தெரியுமா? -
ரக்ஷா பந்தன் அன்று உங்க அண்ணன் ராசிக்கேற்ற நிறத்தில் ராக்கி கட்டுங்க.. நல்ல அதிர்ஷ்டத்தை தரும்.. -
கொள்ளு தோசையும், பூண்டு தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு பணமும், புகழும் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களை செல்வந்தராக்கப் போகுது.! உங்க ராசி என்ன?
இந்த விஷயங்களை எல்லாம் செய்தால்.. பக்கவாதம் வராமல் 80% தடுக்க முடியுமாம்.. ட்ரை பண்ணுங்க..
Stroke In Tamil: பக்கவாதம் ஒரு கொடிய நோய் என்றே கூறலாம். இந்த பக்கவாதம் வந்தால் போதும் படுத்த படுக்கையாகவே கிடக்க நேரிடும். அந்த அளவிற்கு ஆளையே முடக்க கூடிய நோயாக பக்கவாதம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 1.5 கோடி பேர் பக்கவாதத்தால் பாதிப்படைகின்றனர். இதில் சுமார் 50 லட்சம் பேர்கள் நிரந்தர ஊனமுற்றவர்களாக இருக்கின்றனர்.
ஒவ்வொரு 40 விநாடிகளுக்கும் ஒருவர் பக்கவாதத்தால் பாதிப்படைகின்றனர். ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கும் ஒருவர் பக்கவாதத்தால் இறக்கின்றனர். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்கள் (CDC) கருத்துப் படி, 80% பக்கவாத வழக்குகள் முன்னரே தடுக்க கூடியவை என்று நரம்பியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

எனவே பக்கவாதம் வராமல் தடுக்க கீழ்க்கண்ட விஷயங்களை செய்வது மிகவும் அவசியம். இதன் மூலம் 80% வரை பக்கவாதம் வராமல் தடுக்க முடியும் என்கிறார்கள் நிபுணர்கள். அதைப்பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
பக்கவாதம் வருவதற்கான ஆபத்து காரணிகள்
சில குறிப்பிட்ட மக்கள், வயது மற்றும் சில இடங்களில் வசிக்கக் கூடிய மக்களுக்கு பக்கவாதம் வருவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளது. மேலும் இன்றைய நவீன உலகில் இளைஞர்களும் பக்கவாதத்தால் அதிகமாக பாதிப்படைகின்றனர் என்று CDC கூறியுள்ளது.
ஒரு நபரின் வயது, பாலினம், குடும்ப வரலாறு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களும் பக்கவாதம் வருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் கெட்ட பழக்க வழக்கங்களான உயர் இரத்த அழுத்தம், புகைப்பிடித்தல், நீரிழிவு நோய், அதிக கொழுப்பு, உடல் பருமன், உழைப்பின்மை மற்றும் மது அருந்துதல் போன்ற கெட்ட பழக்க வழக்கங்களும் பக்கவாதம் ஏற்பட முக்கிய பங்கு வகிக்கிறது. அதே நேரத்தில் இந்த கெட்ட பழக்கவழக்கங்களை விடுத்து உடற்பயிற்சி செய்தல் போன்ற விஷயங்களை செய்து வரும் போது பக்கவாதத்தின் அபாயத்தை நம்மால் கணிசமாக குறைக்க முடியும்.
பக்கவாத அபாய அறிகுறிகள்
* முகம் இழுப்பது
* கையை தூக்க முடியாத நிலை
* பேசுவதில் சிக்கல்கள்
* உணர்வின்மை தோன்றுதல், பலவீனம், திடீர் குழப்பம், பார்வையில் சிரமம், கடுமையான தலைவலி மற்றும் நடப்பதில் சிரமம் போன்ற பிரச்சினைகள் தோன்றும்.
பக்கவாதம் வராமல் தடுப்பது எப்படி?
இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைக்க வேண்டும்
உயர் இரத்த அழுத்தம் பக்கவாதத்திற்கான முக்கிய காரணியாக அமைகிறது. எனவே உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைப்பது மிகவும் அவசியம். AHA ஜர்னலில் வெளியிடப்பட்ட ஆய்வின் படி, உயர் இரத்த அழுத்தம், 140/90 mm Hg க்கு மேல் இருந்தால் 75% கடுமையான பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே உடற்பயிற்சி செய்தல், இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்தல், வாழ்க்கை முறை மாற்றங்கள், குறைந்த சோடியம் கொண்ட உணவுகளை உண்பது, மன அழுத்தத்தை போக்க தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது போன்ற விஷயங்களை செய்து வரலாம். வழக்கமான கண்காணிப்பை நீங்கள் மேற்கொண்டால் பக்கவாத அபாயத்தில் இருந்து நீங்கள் தப்பிக்க முடியும்.
புகைப்பிடிப்பதை விடுங்கள்
புகைப்பிடிக்கும் பழக்கம் உங்களுக்கு இரத்த நாளங்களில் தடையை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. இது இரத்த ஓட்ட பாதையில் கட்டிகளை உருவாக்கி பக்கவாதம் ஏற்படக் காரணமாக அமைகிறது. புகைப்பிடித்தல் பக்கவாத அபாயத்தை 4 மடங்கு அளவு வர அதிகரிக்கிறது. எனவே பக்க வாத அபாயத்தை தடுக்க புகைப்பிடித்தலை தவிருங்கள்.
ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் எடை மேலாண்மை
பக்கவாத அபாயத்தை குறைக்க முதலில் ஆரோக்கியமான உணவை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். நிறைவுற்ற கொரு, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் உப்பு போன்ற உணவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். இது பெருந்தமனி தடிப்பு மற்றும் இரத்த உறைவு அபாயத்தைக் குறைக்கிறது. இந்த பிரச்சினையே நாளடைவில் பக்கவாதத்திற்கு வழிவகுக்கும்.
தினசரி உடற்பயிற்சி அவசியம்
தினசரி உடற்பயிற்சியில் ஈடுபடுவது மிகவும் அவசியம். தினசரி உடற்பயிற்சி உங்கள் உடல் செயல்பாடு மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. நீரிழிவு நோய்களின் ஆபத்தை குறைக்கிறது. வாரத்திற்கு மூன்று நாளாவது 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
நீரிழிவு நோய் மேலாண்மை
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பது உங்கள் நீரிழிவு நோய் பிரச்சினையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இது இரத்த நாளங்களை சேதப்படுத்தி பக்கவாதம் பிரச்சினையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே பக்க வாதத்தை தடுக்க ஆரோக்கியமான உணவு முறைகள், உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் தடுக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications