Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
பசி இல்லனாலும் நீங்க அளவுக்கு அதிகமா சாப்பிடுறீங்களா? அப்ப இது இந்த நோயோட அறிகுறியா இருக்கலாமாம்!
ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிட்ட பிறகும் உங்களுக்கு பசிக்கிறதா? ஆம். எனில், நீங்கள் அதிகமாக சாப்பிடும் கோளாறால் பாதிக்கப்பட்டிருக்கலாம். இது உங்கள் உடல் எடை மற்றும் மன அழுத்தத்தை அதிகரிக்கும். மேலும், நாள்பட்ட நோய்களால் நீங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
நீங்கள் மிகவும் பட்டினியாக இருக்கும்போது, தட்டில் இருக்கும் மொத்த உணவுகளையும் சாப்பிடுவது இயல்பானது. ஆனால், கட்டுப்பாடில்லாமல் நீங்கள் உணவு உண்பது ஒரு பழக்கமாக இருந்தால், இது இயல்பானதா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடுவதும், கட்டுப்பாடு இல்லாமல் அதிக உணவு சாப்பிடுவதும் அதிகமாக சாப்பிடும் கோளாறு எனப்படும்.

உங்களுக்கு வயிறு நிரம்பியிருந்தாலும் அல்லது பசியில்லாவிட்டாலும் கூட அதிகமாக சாப்பிடுவது, ரகசியமாக தனியாக சாப்பிட முயற்சிப்பது, அசௌகரியமாக வயிறு நிரம்பும் வரை அதிகமாக சாப்பிடுவது போன்றவை அதிகப்படியான உணவுக் கோளாறின் அறிகுறிகள்.
மிகவும் பொதுவான உணவுக் கோளாறை கட்டுப்படுத்த உதவும் சில வழிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
சரியான இடைவெளியில் உணவு உண்ணுங்கள்
அதிகமாக உணவு சாப்பிடும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அடிப்படைச் சிக்கலைத் தீர்ப்பதற்காக உணவு சாப்பிடுவதைத் தவிர்க்கலாம் அல்லது குறைவாக சாப்பிடத் தொடங்கலாம். இருப்பினும், நிபுணரின் கூற்றுப்படி, ஒருவர் எப்போதும் உணவைத் தவிர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும், அதிகப்படியான பசியின் உணர்வைத் தவிர்க்க ஒருவர் உணவைத் தவறாமல் சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தூண்டுதல்களை அடையாளம் காணவும்
உணவுக் கோளாறுகள் பொதுவாக தூண்டுதல்களைக் கொண்டுள்ளன. மன அழுத்த நேரத்தில் அதிகமாக சாப்பிடுவது, மோசமான உடல் உருவம், விருப்பமான உணவுகள் எளிதில் பெறுவது போன்றவை காரணமாக இருக்கலாம். அந்தத் தூண்டுதல்களைக் கண்டறிந்து, அதைத் தவிர்க்கவும், மிதமான அளவில் சாப்பிடவும் உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
மன அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருங்கள்
மன அழுத்த உணவு என்பது மிகவும் பொதுவான உணவுக் கோளாறுகளில் ஒன்றாகும். அதிகளவு மன அழுத்தம் எப்பொழுதும் அதிகமாக சாப்பிடுவது மற்றும் பிற ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கமாக பார்க்கப்படுகிறது. யோகா, தியானம், ஏரோபிக்ஸ், பெயிண்டிங் போன்ற பயிற்சி மற்றும் பொழுதுபோக்குகளின் மூலம் உங்கள் மன அழுத்தத்தை நிர்வகிக்க வேண்டும். உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும் போது, நீங்கள் இயற்கையாகவே மிதமான அளவு மட்டுமே சாப்பிடுவீர்கள்.
நண்பர்கள் மற்றும் குடும்பத்தின் உதவியை நாடலாம்
உங்களைத் தொடர்ந்து கஷ்டப்படுத்தும் உடல்நலப் பிரச்சனைகளை விட்டு வெளிவர நண்பர்கள் அல்லது குடும்பத்தினரின் உதவியை நீங்கள் பெறலாம். இதுபோன்ற பிரச்சினைகளில் தடையின்றி வெளியே வர உங்கள் அன்புக்குரியவர்கள் தங்களால் இயன்ற உதவியை உங்களுக்குச் செய்வார்கள். மேலும், உங்கள் அனுபவங்களையும் கவலைகளையும் பகிர்ந்து கொள்ளவும், சூழ்நிலையைச் சமாளிப்பதற்கான வழிகளைக் கண்டறியவும் உங்களுக்கு நம்பகமான சமூக ஊடகத்தின் ஆதரவை நாடலாம்.
நிபுணரிடம் பேசுங்கள்
வளர்ந்து வரும் இன்றைய நவீன உலகில் பெரும்பாலான மக்கள் உட்கார்ந்த வாழ்க்கை முறையில் வாழ்கிறார்கள். இதன் விளைவாக அதிகப்படியான உணவுக் கோளாறு ஏற்படலாம். உங்கள் வாழ்க்கை முறையை சரிசெய்வதன் மூலமும், உங்கள் தூண்டுதல்களை நிர்வகிப்பதன் மூலமும் இந்த பிரச்சனையை எளிதில் தீர்க்கலாம். உங்களால் அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க முடியவில்லை என்றால், ஒரு நிபுணரின் உதவியை நாடுங்கள். இந்த பிரச்சனையிலிருந்து வெளிவர அவர் உங்களுக்கு உதவுவார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


