Latest Updates
-
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல ந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா? -
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
விஜய் ஆண்டனியின் மகள் இன்று அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை - உண்மை காரணம் என்ன?
பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்ச் பார்க் பள்ளியில் 12 ஆவது படிக்கும் அவரது மகள் ஏற்கனவே மிகுந்த மன அழுத்ததால் பாதிக்கப்பட்டு, அந்த மன அழுத்தத்திற்கு ஏற்கனவே மாத்திரைகளை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் அவரது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை அவரது தந்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து, வீட்டில் வேலை செய்வோரின் உதவியுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மீரா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இன்று நிறைய பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் நிறைய பேருக்கு தாங்கள் மன அழுத்தத்தால் தான் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பது தெரியாமல் உள்ளனர். இப்படி மன அழுத்தத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், பின் அது மனநிலையை மோசமாக பாதித்து, பல மோசமான எண்ணங்களை மனதில் வரவழைத்து, உயிரையே பறித்துவிடும். ஒருவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் எந்த மாதிரியான அறிகுறிகள் இருக்கும் என்பதை இப்போது காண்போம்.
அதிக சோர்வு
ஒருவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கும் போது, அவரது இரத்தத்தில் மன அழுத்தத்திற்கு காரணமான கார்டிசோல் ஹார்மோன்கள் அதிகமாக இருக்கும். இதன் விளைவாக இதயத் துடிப்பு மற்றும் சுவாசிக்கும் செயல்முறையானது துரிதப்படுத்தப்படுகிறது. இப்படி தொடர்ந்து இரத்தத்தில் மன அழுத்த ஹார்மோன்கள் அதிகமாக இந்தால், அது மிகுந்த சோர்வை ஏற்படுத்தும். எனவே நீங்கள் வழக்கத்திற்கு மாறாக மிகுந்த உடல் சோர்வை சந்தித்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள். ஏனெனில் மிகுந்த உடல் சோர்வு மன அழுத்தத்திற்கு மட்டுமின்றி, வேறு பல பிரச்சனைகளின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
பற்களை அரைப்பது
பற்களை அரைப்பதும் மன அழுத்தத்தின் அறிகுறியாகும். இது தூக்கமின்மையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. யார் ஒருவர் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளாரோ, அவரது ஆழ்மனம் நிம்மதியின்றி ஒருவித அழுத்தத்துடனேயே இருக்கும். இதன் விளைவாக நல்ல நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தைப் பெற முடியாமல், ஒரு கட்டத்தில் பற்களை அரைக்கவும் நேரிடும். பற்களை அரைப்பது பல் பிரச்சனைகளை உண்டாக்குவதோடு, மிகுந்த தாடை வலியையும் உண்டாக்கும். எனவே நீங்கள் பற்களை அரைத்தால், அதை சாதாரணமாக விட்டுவிடாதீர்கள்.
தலைவலி
தலைவலியும், மன அழுத்தத்தின் அறிகுறிகளுள் ஒன்றாகும். பெரும்பாலும் இம்மாதிரியான தலைவலி அதிகமாக டென்சனானால் வரக்கூடும். அதுவும் இந்த தலைவலி சில மணிநேரங்கள் நீடித்திருக்கும். அப்போது வலியானது தலையில் இரண்டு புறங்களில் மட்டுமின்றி, அப்படியே அந்த வலி கழுத்து மற்றும் தோள்பட்டைகளிலும் பரவும். இப்படியான வலியை ஒருவர் அடிக்கடி சந்தித்தால், அவர் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளார் என்று அர்த்தம்.
எரிச்சலுணர்வு
மன அழுத்தமானது ஒருவரது மனநிலையை பாதித்து, மனதைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கும். அதாவது, மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கும் போது, நரம்பு மண்டலமானது மிகவும் வேகமாக பதிலளிக்கக்கூடியதாகவும், உணர்ச்சி ஏற்பிகள்அதிக உணர்திறன் கொண்டவையாகவும் இருக்கும். இந்நிலையில் சிறு விஷயங்களுக்கு கூட அதிக எரிச்சலடையக்கூடும்.
அழுகை
சிலர் அதிக மன அழுத்தத்தில் இருக்கும் போது அதிகமாக அழக்கூடும். கண்ணீர் என்பது மன அழுத்தத்தின் விளைவு மட்டுமல்ல, மன அழுத்தத்தின் போது ஒருவரை ஆதரிக்கும் செயல்பாட்டை கொண்டுள்ளது. மன அழுத்தத்தில் இருக்கும் போது ஒருவர் அழுதால், அந்த கண்ணீரின் வழியாக கார்டிசோல் என்னும் ஹார்மோன் அதிகமாக வெளியிடப்பட்டு, ஒருவித நல்ல உணர்வு மனதில் ஏற்படும்.
பாலியல் ஆசை குறைவு
ஒருவரது பாலியல் ஆசை சிறப்பாக செயல்பட வேண்டுமானால், உடலில் ஹார்மோன் சமநிலையுடனும், நரம்புகள் சரியாகவும் இருக்க வேண்டும். ஆனால் மன அழுத்தத்துடன் இருந்தால், மன அழுத்த ஹார்மோன்கள் அதிகம் வெளியிடப்பட்டு, அது பாலியல் ஆசையில் இடையூறை ஏற்படுத்தி, பாலியல் நாட்டத்தைக் குறைக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications