தொப்பையை ஈஸியா குறைக்கணுமா? அப்ப இந்த ஆசனத்தை தினமும் 5 நிமிடம் செய்யுங்க போதும்...

Uttanpadasana Benefits In Tamil: தற்போதைய உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையினால் ஏராளமானோர் தொப்பையால் அவதிப்படுகிறார்கள். தொப்பை ஒருவரது அழகை கெடுப்பதோடு, உடலில் பலவிதமான நோய்களை வரவழைத்து, ஆரோக்கியத்தையே அழித்துவிடும். எனவே தொப்பையை ஒருவர் குறைக்க முயற்சிக்க வேண்டியது அவசியம்.

தொப்பையைக் குறைக்க செய்ய வேண்டிய முதல் காரியம் உடற்பயிற்சியில் ஈடுபடுவது. குறிப்பாக யோகாசனங்கள் ஒருவரது உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைக்க பெரிதும் உதவி புரிகின்றன. அதில் தொப்பையைக் குறைக்க உதவும் மிகவும் ஈஸியான ஆசனம் தான் உத்தான பாதாசனம். இந்த ஆசனம் செய்வதற்கு சுலபமாக இருக்கும். முக்கியமாக இதை நாம் நமது படுக்கையில் படுத்துக் கொண்டே செய்யலாம்.

Uttanpadasana Benefits And How To Do It In Tamil

இப்போது உத்தான பாதாசனம் எப்படி செய்வது, அதன் நன்மைகள் என்ன மற்றும் யாரெல்லாம் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது என்பன போன்றவற்றை விரிவாக காண்போம்.

உத்தான பாதாசனம் செய்முறை

* முதலில் தரையில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும்.
* இரண்டு கால்களையும் ஒன்றாக சேர்ந்து வைத்திருக்க வேண்டும் மற்றும் இரண்டு கைகளும் உடலை ஒட்டியவாறு இருக்க வேண்டும்.
* பின் மூச்சை உள்ளே இழுத்தபடியே இரண்டு கால்களை மெதுவாக ஒரு அடி உயரத்திற்கு உயர்த்த வேண்டும்.
* இந்த நிலையில் ஒரு நிமிடம் இயல்பாக சுவாசித்துக் கொண்டு இருக்க வேண்டும்.
* பின் மெதுவாக கால்களை கீழே இறக்கி, பழைய நிலைக்கு வர வேண்டும்.
* இப்படி ஒரு 4-5 முறை செய்ய வேண்டும்.

உத்தான பாதாசனம் செய்வதால் பெறும் நன்மைகள்

* உத்தான பாதாசனத்தை செய்யும் போது அடிவயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள் இறுக்கமடைவதால், வயிற்றுப்பகுதி வலுவடைந்து, தொப்பை குறையும்.
* முதுகு வலியால் அவதிப்படுபவர்கள், இந்த ஆசனத்தை தினமும் செய்து வந்தால், முதுகு வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
* பெண்கள் இந்த ஆசனத்தை செய்யும் போது இனப்பெருக்க உறுப்புக்களின் செயல்பாடு மேம்படும்.
* செரிமான பிரச்சனைகளைக் கொண்டவர்கள் இந்த ஆசனத்தை தினமும் செய்ய வாயு தொல்லை, மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
* பிரசவம் ஆன பெண்கள் இந்த ஆசனத்தை செய்து வந்தால், அடிவயிற்றுப் பகுதி சுருங்க உதவும்.
* தொடைப்பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் குறையும்.
* இதயத்தின் ஆரோக்கியம் மேம்படும்.
* தினமும் இந்த ஆசனத்தை செய்து வந்தால், உடலின் ஆற்றல் அதிகரிக்கும்.

யாரெல்லாம் உத்தான பாதாசனம் செய்யக்கூடாது?

* உத்தான பாதாசனத்தை கர்ப்ப காலத்தில் பெண்கள் செய்யக்கூடாது.
* வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.
* சியாட்டிகா பிரச்சனையைக் கொண்டவர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.
* உயர் இரத்த அழுத்தம், தீவிரமான முதுகு வலி மற்றும் பெப்டிக் அல்சர் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.

எப்போது செய்வது நல்லது?

பொதுவாக ஆசனங்களை வெறும் வயிற்றில் செய்தால் தான் நல்ல பலன் கிடைக்கும். அதுவும் உத்தான பாதாசனத்தை செய்ய சிறந்த நேரம் என்றால், அது அதிகாலை எழுந்ததும் வெறும் வயிற்றில் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், மாலை வேளையில் வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Thursday, April 13, 2023, 12:32 [IST]
Desktop Bottom Promotion