Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
ஆரோக்கியம் என நினைக்கும் இந்த 5 உணவுகள் இதயத்தை மெதுவாக அழிக்குமாம்.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
Unhealthy Foods For Heart: தற்போது மக்கள் தங்கள் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டுள்ளனர். அதுவும் சமீப காலமாக நிறைய பேர் மாரடைப்பு, கார்டியாக் அரெஸ்ட் போன்ற இதயம் தொடர்பான பிரச்சனைகளால் உயிரிழந்து வருகின்றனர். அதுவும் இளம் வயதிலேயே ஏராளமானோர் மரணமடைந்து வருகின்றனர். இதைப் பார்க்கும் போது, இதுவரை ஆரோக்கியத்தில் அதிக அக்கறை கொள்ளாத மக்கள், தாங்கள் உண்ணும் உணவுகளில் கூடுதல் கவனத்தை செலுத்தி வருகின்றனர்.
இதற்காக பழங்கள், காய்கறிகள், தானியங்கள் போன்றவற்றை மட்டுமின்றி, கடைகளில் விற்கப்படும் சர்க்கரை சேர்க்காத உணவுகள், டயட் உணவுகள் என்ற பெயரில் விற்கப்படும் உணவுகளை வாங்கி உட்கொள்கின்றனர். ஆனால் இப்படி ஆரோக்கியம் என்று நினைத்து சாப்பிடும் சில உணவுகள் நம் இதயத்தை மெதுவாக சேதப்படுத்தும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த இதயநோய் நிபுணர் டாக்டர் சஞ்சய் போஜ்ராஜ் கூறுகிறார்.

இதுக்குறித்து டாக்டர் சஞ்சய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆரோக்கியமானது என்று நினைக்கும் 5 உணவுகள் குறித்து பகிர்ந்துள்ளார். அதுவும் இந்த உணவுகள் இதயம், உடலின் மெட்டபாலிசம் மற்றும் மூளையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக இந்த உணவுகள் உடலினுள் வீக்கத்தை தூண்டி, இன்சுலினை குழப்பமடையச் செய்து, பல்வேறு நோய்களுக்கு வழிவகுப்பதாகவும் டாக்டர் கூறியுள்ளார். அதோடு இந்த உணவுகளுக்கு மாற்றாக அவர் தற்போது எடுத்து வரும் உணவுகள் குறித்தும் பகிர்ந்து கொண்டுள்ளார். இப்போது அந்த 5 உணவுகள் எவையென்பதைக் காண்போம்.
1. சர்க்கரை இல்லாத உணவுகள்
செயற்கை இனிப்புக்களானது மூளையும், குடலையும் சர்க்கரை வருவதாக நினைக்க வைத்து ஏமாற்றி, இன்சுலினை செயல்பாட்டை குழப்பமடையச் செய்து, உணவுகளின் மீதான ஏக்கத்தை அதிகரிக்கும் என்று டாக்டர் சஞ்சய் கூறினார்.
மேலும் "இப்போது தனக்கு இனிப்பு ஏதாவது சாப்பிட தோன்றினால், நான் நற்பதமான பழங்கள், பேரிச்சம் பழம் அல்லது தேன் போன்றவற்றை உட்கொள்கிறேன். இவற்றை என்ன செய்வது என்று உடலுக்கு தெரியும்" என்றும் கூறினார்.
தற்போது கடைகளில் இனிப்புகளுக்கு மாற்றாக செயற்கை இனிப்புகள் விற்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவை சர்க்கரை நோய், இதய நோய் போன்றவற்றின் அபாயத்தை அதிகரிக்கும். எனவே இதுவரை சுகர் ப்ரீ உணவுகளை உட்கொண்டு வந்தால், அவற்றை உடனே நிறுத்துங்கள்.
2. வெஜிடேபிள் சிப்ஸ்
வெஜிடேபிள் சிப்ஸ் என்றதுமே பலருக்கும் இது ஆரோக்கியமானதாக தோன்றலாம். ஆனால் இவையும் எண்ணெயில் தான் பொரிக்கப்படுகின்றன. இப்படி எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொண்டால், அவை உடலினுள் வீக்கத்தை ஏற்படுத்தி, உடலை மெதுவாக சேதப்படுத்தும்.
எனவே இப்படியான சிப்ஸை இதுவரை வாங்கி சாப்பிட்டு வந்தால், அதைத் தவிர்த்திடுங்கள். "இப்போது நான் மொறுமொறுவென்று ஏதாவது சாப்பிட தோன்றினால், சர்க்கரைவள்ளிக் கிழங்கை துண்டுகளாக்கி பேக்கிங் செய்தோ அல்லது வறுத்த கொண்டைக்கடலையையோ தான் சாப்பிடுகிறேன்" என்று கூறினார்.
3. ப்ளேவர்டு யோகர்ட்
தயிரைப் போன்றது தான் யோகர்ட். இந்த யோகர்ட் ஆரோக்கியமானதாக இருக்கலாம். ஆனால் ப்ளேவர்டு யோகர்ட்டுகளில் நாம் நினைப்பதை விட சர்க்கரை அதிகளவில் உள்ளன.
எனவே இதுவரை நீங்கள் இப்படியான ப்ளேவர்டு யோகர்ட்டுகளை உட்கொண்டு வந்தால், அதை தவிர்த்திடுங்கள். மாறாக ப்ளைன் யோகர்ட்டுடன் நற்பதமான பெர்ரி பழங்கள் மற்றும் சிறிது பட்டை தூள் சேர்த்து சாப்பிடுங்கள். நான் இப்படி தான் சாப்பிட்டு வருகிறேன் என்றும் கூறினார்.
4. புரோட்டீன் பார்கள்
புரோட்டீன் பார்களில் புரோட்டீன் அதிகம் இருக்கலாம். ஆனால் அவற்றில் சர்க்கரை, ஆரோக்கியமற்ற கொழுப்புக்கள் மற்றும் செயற்கை பொருட்கள் போன்றவையும் உள்ளன. எனவே இவை உண்மையில் மாறுவேடத்தில் இருக்கும் மிட்டாய் தான்.
இந்த புரோட்டீன் பார்களை உட்கொண்டால், அவை குடலை வீக்கமடைய செய்யும். "நான் இந்த புரோட்டீன் பார்-க்கு பதிலாக ஒரு கையளவு நாட்ஸ் அல்லது வேக வைத்த முட்டைகளை சாப்பிடுகிறேன். இது ஒரு எளிமையான மற்றும் உண்மையான உணவு" என்று டாக்டர் கூறினார்.
5. விதை எண்ணெய்கள்
கனோலா, சோயா பீன் மற்றும் சோள எண்ணெய் போன்ற விதை எண்ணெய்கள் சுத்திகரிக்கப்பட்டவை. இவற்றை சூடேற்றும் போது, அவை ஆக்ஸிஜனேற்றப்பட்டு உங்கள் தமனிகள் மற்றும் செல்களுக்குள் கண்ணுக்குத் தெரியாத வீக்கத்தை ஏற்படுத்துகின்றன.
இப்படி இந்த எண்ணெய்களை தொடர்ந்து உட்கொள்ளும் போது, அது இதயம் உட்பட உடலின் பிற பகுதிகளையும் வீக்கமடையச் செய்து சேதப்படுத்தும். "நான் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தனது சமையலில் ஆலிவ் ஆயில், அவகேடோ ஆயில் போன்றவற்றை பயன்படுத்தி வருகிறேன்" என்று டாக்டர் சஞ்சய் கூறினார்.
எனவே நண்பர்களே! இதுவரை நீங்கள் உங்கள் உணவில் மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை சேர்த்து வந்தால், இனிமேல் அதை தவிர்த்து, டாக்டர் கூறியதைப் போன்று உண்மையில் ஆரோக்கியமானதை தேர்ந்தெடுத்து உட்கொண்டு வாருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications