Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
நைட் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்களுக்கு மாரடைப்பு வரப்போகுது-ன்னு அர்த்தம்.. உஷார்..
Heart Attack Symptoms In Tamil: தற்போது மாரடைப்பு பிரச்சனையால் நிறைய பேர் பாதிக்கப்பட்டு, இறந்து வருகின்றனர். அதுவும் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20.5 மில்லியன் மக்கள் மாரடைப்பால் இறந்து வருகின்றனர். மாரடைப்பு என்பது மிகவும் தீவிரமான ஒரு ஆரோக்கிய பிரச்சனையாகும். மாரடைப்பானது எப்போது ஒருவரது இதயத்திற்கு செல்லும் இரத்தம் முழுமையாக நிறுத்தப்படும் போது ஏற்படுகிறது.
இந்த மாரடைப்பு ஒருவருக்கு ஏற்பட்டால், அது நெஞ்சு வலியை ஏற்படுத்தும் என்று தான் இன்னும் நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மாரடைப்பானது நெஞ்சு வலியை மட்டும் எப்போதும் ஏற்படுத்துவதில்லை. சில சமயங்களில் மாரடைப்பு அமைதியான முறையில் வேறுசில அறிகுறிகளையும் வெளிக்காட்டும்.

மேலும் மாரடைப்பால் பெரும்பாலானோர் அதிகாலையில் தான் அனுபவிக்கின்றனர். எனவே மாரடைப்பு ஒருவருக்கு ஏற்படப் போகிறது என்றால், அதன் அறிகுறிகள் இரவு நேரத்திலேயே தெரியத் தொடங்கும். கீழே அப்படி இரவு நேரத்தில் தெரியக்கூடிய மார்பு வலியைத் தவிர வெளிப்படும் வேறுசில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
உடல் சோர்வு
மாரடைப்பின் மிகவும் பொதுவான அறிகுறிகளுள் ஒன்று உடல் சோர்வு. அதுவும் இந்த உடல் சோர்வு வழக்கத்திற்கு மாறாக காரணமில்லாமல் அதிகம் தெரியும். முக்கியமாக பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படப்போகிறது என்றால் இந்த உடல் சோர்வு அறிகுறி தெரிவது கவனிக்கப்பட்டுள்ளது. எனவே இரவு நேரத்தில் இப்படியான அதிகளவிலான உடல் சோர்வை சந்தித்தால், உங்களுக்கு மாரடைப்பு வர வாய்ப்புள்ளது.
ஒழுங்கற்ற இதயத்துடிப்பு
உங்களுக்கு அடிக்கடி இதயத்துடிப்பு வேகமாகவோ அல்லது ஒழுங்கற்று இருப்பதையோ கவனித்திருக்கலாம். மேலும் அதை ஒரு பெரிய விஷயமாக நினைக்காமல் இருக்கலாம். பொதுவாக அதிக கோபம், பயம் கொள்ளும் போது, ஒருவருக்கு இதயத்துடிப்பு ஒழுங்கற்று இருக்கலாம். ஆனால் காரணமில்லாமல், அதுவும் இரவு தூங்கும் நேரத்தில் இதயத்துடிப்பு ஒழுங்கற்று இருப்பதை உணர்ந்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள். ஏனெனில் அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்.
வாந்தி
இதுவரை மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிகள் பலர் நெஞ்சு வலியை மட்டுமின்றி, வயிற்று வலி அல்லது வாந்தி போன்ற உணர்வுகளை சந்தித்ததாக புகார் அளித்துள்ளனர். எனவே ஒருவர் லேசான நெஞ்சு வலியுடன், காரணமில்லாமல் வாந்தியையும் சந்தித்தால், அது வரப்போகும் மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்.
பிற வலிகள்
மாரடைப்பின் அறிகுறி என்று எடுத்துக் கொண்டால், நெஞ்சு வலி தான் ஏற்படும் என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் நெஞ்சு வலி அப்படியே கைகளுக்கு, அதுவும் இடது கைகளுக்கு பரவி, கழுத்து, முதுகு போன்ற பகுதிகள் வரை சென்று வலியை உண்டாக்கும். இப்படி காரணமில்லாமல் ஒருவர் உடலின் இந்த பகுதிகளில் வலியை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
தாடை வலி
மாரடைப்பின் வித்தியாசமான அறிகுறிகளுள் ஒன்று தாடை வலி. அதுவும் இந்த தாடை வலி, மாரடைப்பின் பிற அறிகுறிகளுடன் சேர்ந்து ஏற்படும். ஆனால் தாடை வலியை சந்தித்தால், பலரும் அதை பற்களில் ஏதோ பிரச்சனை என்று நினைத்து, சாதாரணமாக விட்டுவிடுவார்கள். ஆனால் எப்போது உடல் சோர்வு, வாந்தி, நெஞ்சு வலியுடன், தாடை வலியும் சேர்ந்து வந்தால், அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்.
எனவே நண்பர்களே! மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை இரவு நேரத்தில் நீங்கள் சந்தித்தால், அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் இந்த அறிகுறிகள் தெரியும் போது தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொண்டு, நிலைமை மோசமாவதைத் தவிர்த்திடுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications