Latest Updates
-
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா?
உங்க உடலில் இந்த மாற்றங்கள் இருந்தால் உங்க இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக தொடங்கிருச்சாம்... உஷார்!
சர்க்கரை நோயைப் பற்றிய விழிப்புணர்வு நம்மிடையே மிகவும் குறைவாக உள்ளது, சொல்லப்போனால் பல கட்டுக்கதைகளை நாம் நம்புகிறோம். உலகம் முழுவதும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க இதுவே முக்கிய காரணமாக இருக்கிறது. சர்க்கரை நோய், அடிக்கடி சிறுநீர் கழித்தல், காயம் மெதுவாக குணமடைதல் மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. துரதிர்ஷ்டவசமாக, பலர் இந்த அறிகுறிகளை புறக்கணித்து, நோய் முன்னேற அனுமதிக்கின்றனர். நீரிழிவு நோயுடன் தொடர்புடைய சில அசாதாரண அறிகுறிகள் உள்ளன. இந்த அறிகுறிகளைக் கண்டறிவதன் மூலம் நோயை ஆரம்பத்திலேயே கண்டறியலாம். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

கழுத்துப்பகுதி கருமையாக மாறுவது
கழுத்தில் அடர்த்தியாகவும் கருமையாகவும் இருக்கும் தோல் நீரிழிவு நோயின் அறிகுறியாகும். இந்த தோல் சில நேரங்களில் கரடுமுரடானதாக மாறுகிறது. அகந்தோசிஸ் நிக்ரிகன்ஸ் என்று அழைக்கப்படும் இந்த நிலை இடுப்பு மற்றும் அக்குள்களிலும் காணப்படுகிறது.
வாசனை நிறைந்த சுவாசம்
நீரிழிவு நோயின் அடுத்த சிக்கலாக இருப்பது பழ வாசனையான சுவாசம், இது மருத்துவரீதியாக நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. உடல் இன்சுலினைப் பயன்படுத்த முடியாதபோது அது ஆற்றலுக்காக கொழுப்பை உடைக்கிறது மற்றும் இந்த செயல்பாட்டில் கீட்டோன்கள் வெளியிடப்படுகின்றன. இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கீட்டோன்கள் காரணமாக சுவாசம் அசிட்டோன் போன்ற வாசனை அல்லது பழ வாசனையுடன் இருக்கும்.
உலர்ந்த வாய்
வறண்ட வாய் நீரிழிவு நோயின் ஒரு அசாதாரண அறிகுறியாகும். உயர் இரத்த சர்க்கரை உமிழ்நீரின் சுரப்பைக் குறைக்கிறது, எனவே வாயை உலர வைக்கிறது. இதனால் வாயில் மிகக் குறைந்த உமிழ்நீர் சுரக்கிறது. இதனால் பல் மற்றும் ஈறுகளிலும் ஆபத்து ஏற்படலாம்.
குமட்டல்
குமட்டல் மற்றும் வாந்தி, ஆரோக்கிய சிக்கல்களுக்கான உடலின் பொதுவான எதிர்வினை. குறிப்பாக இது நீரிழிவு நோயின் முக்கிய அறிகுறியாகும். சர்க்கரை நோய் உடலின் செரிமானத் திறனை பாதிக்கிறது. உயர் இரத்த சர்க்கரை காஸ்ட்ரோபரேசிஸை ஏற்படுத்துகிறது, இது உங்கள் உணவை ஜீரணிக்கும் விதம் பாதிக்கப்படும் ஒரு நிலை.
காலில் தாங்க முடியாத வலி
கால்கள் அல்லது பாதங்களில் வலி என்பது ஒருவர் இரத்தத்தில் அதிக சர்க்கரை இருக்கலாம் என்பதற்கான அறிகுறியாகும். நீரிழிவு நோயால் ஏற்படும் நரம்பு பாதிப்பு அல்லது நீரிழிவு நரம்பியல், வலி அல்லது கைகால்களில் உணர்வின்மைக்கு வழிவகுக்கிறது. பலருக்கு கைகால்களில் எரியும் உணர்வு ஏற்படுகிறது.
தொடர்ச்சியான தொற்றுநோய்கள்
நீரிழிவு நோய் நோய்க்கிருமிகளுக்கு எதிராக போராட உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதித்து, உடலில் நோய்த்தொற்றின் அதிகரிக்கிறது. உயர் இரத்த சர்க்கரை அளவுகள் உடலை நோய்களுக்கு ஆளாக்குகின்றன. பிறப்புறுப்பு தொற்றுகள், ஈஸ்ட் தொற்றுகள், சிறுநீர்ப்பை நோய்த்தொற்றுகள் ஆகியவை நீங்கள் பாதிக்கப்படக்கூடிய நோய்த்தொற்றுகளின் வகைகளாகும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

