Latest Updates
-
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்.. -
சர்க்கரை நோயாளிகளுக்கான டாப் 5 காய்கறிகளை பட்டியலிட்ட டாக்டர்! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க.. -
நெல்லை ஸ்டைல் தலக சாம்பார் ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க - ஒரு வாரம் வைச்சு சூப்பரா சாப்பிடலாம் -
தலைசுற்ற வைக்கும் இந்தியாவிலுள்ள வினோதமான திருமண சடங்குகள் - இப்படிலாம் கல்யாணம் பண்ணுனா அவ்வளவுதான் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பணத்தையும், புகழையும் கொண்டு வரப்போகுது! -
சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கவலைகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்களை தீர்க்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
கர்நாடகா தக்காளி தம்பிலி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்
ஒடிசாவில் ஆந்த்ராக்ஸ் நோயால் இருவர் பாதிப்பு: அதென்ன நோய்? அது எப்படி பரவும்? அதன் அறிகுறிகள் என்ன?
Two People Tested Positive For Anthrax: உலகின் பல்வேறு பகுதிகளில் தினந்தோறும் பலவிதமான தொற்றுக்கள் பரவிக் கொண்டு தான் உள்ளன. அதுவும் தற்போது மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில் பல பகுதிகளில் கொசுக்களின் மூலம் ஏராளமான நோய்த்தொற்றுகள் பரவிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் ஒடிசாவின் கோராபுட் மாவட்டத்தில் இருவருக்கு ஆந்த்ராக்ஸ் நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுவும் கோராபுட் மாவட்டத்தில் உள்ள படைகுடா கிராமத்தை சேர்ந்த இருவருக்கு இத்தொற்று ஏற்பட்டுள்ளது. தகவல்களின் படி, ஜூன் 14 ஆம் தேதி நடந்த விருந்திற்கும் இத்தொற்றிற்கும் தொடர்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து சுமார் 410 பேரிடம் சோதனை செய்யப்பட்டது. அதில் அறிகுறிகளை கொண்டு 6 பேரின் இரத்த மாதிரிகள் ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் இருவருக்கு ஆந்த்ராக்ஸ் இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது இவ்விரு நோயாளிகளும் நிலையாக இருப்பதாக மாவட்ட பொது சுகாதார மருத்துவ அதிகாரி முக்திகாந்த் கதுவா கூறினார்.
ஆந்த்ராக்ஸ் என்றால் என்ன?
ஆந்த்ராக்ஸ் என்பது ஒரு அரிய வகை ஆனால் தீவிரமான நோய்த்தொற்றாகும். இது ஸ்போர் உருவாக்கும் பாக்டீரியாவான பேசிலஸ் ஆந்த்ராசிஸால் ஏற்படுகிறது. பொதுவாக இந்த ஆந்த்ராக்ஸ் கால்நடைகள் மற்றும் காட்டு விலங்குகளை பாதிக்கும். இப்படி பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மனிதர்கள் தொடர்பு கொள்ளும் போது, அது மனிதர்களையும் பாதிக்கலாம்.
எப்படி பரவுகிறது?
ஆந்த்ராஸால் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு பரவுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. இருப்பினும், ஆந்த்ராக்ஸ் தோல் புண்களுடன் நேரடி தொடர்பு கொள்வதன் மூலமோ அல்லது அந்த புண்களை சுத்தம் செய்த பொருட்களுடன் தொடர்பு கொள்வதன் மூலமோ பரவுவதற்கு நிறைய வாய்ப்புள்ளது. பொதுவாக இந்த ஆந்த்ராக்ஸை உண்டாக்கும் பாக்டீரியா தோலில் உள்ள காயங்களின் மூலம் உடலினுள் நுழையும். மேலும் இந்த ஆந்த்ராக்ஸால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் இறைச்சிகளை உட்கொள்வதன் மூலம், ஒருவர் இத்தொற்றால் பாதிக்கப்படலாம்.
ஆந்த்ராக்ஸ் அறிகுறிகள்
ஆந்த்ராக்ஸ் நோய்த்தொற்றின் அறிகுறிகளானது வகையைப் பொறுத்தது. அதுவும் தொற்றின் அறிகுறிகளானது பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் தெரியும். ஆந்த்ராக்ஸ் தொற்றின் சில அறிகுறிகள் பின்வருமாறு:
* நெஞ்சு வலி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம்
* களைப்பு
* காய்ச்சல் மற்றும் அதிகப்படியான வியர்வை
* தலைவலி மற்றும் தசை வலி
* அரிப்புக்களுடனான கொப்புளங்கள் அல்லது புடைப்புகள்
* கருப்பு நிற தோலுடன் புண்
* குமட்டல், வாந்தி, வயிற்று வலி அல்லது இரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு
* வீங்கிய நிணநீர் முனைகள்
யாருக்கெல்லாம் இத்தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது?
ஆந்த்ராக்ஸ் நோயால் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் நேரடி தொடர்பு கொள்பவர்களாகவே இருப்பர். இப்போது யாருக்கெல்லாம் ஆந்த்ராக்ஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்று காண்போம்.
* ராணுவத்தில் இருந்தால், அவர்களுக்கு ஆந்த்ராக்ஸ் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
* விலங்குகளை ஆய்வு செய்யும் ஆய்வகத்தில் இருப்பவர்கள்
* ஆந்த்ராக்ஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் இருந்து விலங்குகளின் தோல்கள், ரோமங்கள் அல்லது கம்பளி ஆகியவற்றை கையாள்பவர்கள்
* கால்நடை மருத்துவத்தில் பணிபுரிபவர்கள்
* விளையாட்டு விலங்குகளை கையாள்பவர்கள் ஆகியோருக்கு ஆந்த்ராக்ஸ் நோய் ஏற்படுவதற்கான நிறைய வாய்ப்புள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications