Latest Updates
-
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
ஆன்லைனில் நூடுல்ஸ் வாங்கி சாப்பிட்டு இறந்த திருச்சி சிறுமி.. இந்த நூடுல்ஸ்-க்கு இந்த நாட்டில் தடை இருக்காம்..
சமீபத்தில் திருச்சியில் நடந்த சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. திருச்சியின் அரியமங்கலம் பகுதியில் உள்ள அம்பிகாபுரத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு நூடுல்ஸ் மிகவும் பிடிக்குமாம். ஸ்பைசி நூடுல்ஸ் பிரியை என்பதால் கடைகளிலும், அடிக்கடி வீட்டிலும் ஸ்பைசி நூடுல்ஸை செய்து சாப்பிடுவாராம்.
அப்படி தான் அந்த சிறுமி ஆன்லைனில் 2x ஸ்பைசி நூடுல்ஸை ஆர்டர் செய்து, இரவு சமைத்து சாப்பிட்டு தூங்கியுள்ளார். மறுநாள் காலையில் அச்சிறுமி நீண்ட நேரமாகியும் எழாததால், பெற்றோர்கள் அவரை எழுப்ப முயற்சிக்கும் போது, சிறுமி உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இச்சம்பவம் அறிந்ததும் அப்பகுதி போலீசார் உடனே விரைந்து வந்து, விசாரணை நடத்தினர்.

இதுக்குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கூறுகையில், இந்த சிறுமி நூடுல்ஸ் சாப்பிட்டதால் உயிரிழந்ததாகவும், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நூடுல்ஸ் காலாவதியானது என்பதை கண்டறிந்ததாகவும் தெரிவித்தார்.
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், இச்சிறுமி புல்டாக் 2x ஸ்பைசி நூடுல்ஸை அமேசான் மூலம் வாங்கியது தெரியவந்தது. இதேப் போன்ற நூடுல்ஸ் திருச்சி மொத்த உணவு வணிகத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. அதோடு அரியமங்கலம் குப்பை கிடங்கில் 800 கிலோ காலாவதியான உணவுப் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டு அகற்றப்பட்டன. மேலும் அப்பகுதியில் இருந்து காலாவதியான பொருட்களின் தொகுதி எண்ணைக் கொண்ட கோலா பானங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது திருச்சி மொத்த உணவு வணிகம் தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டு, உணவு பாதுகாப்பு தர நிர்ணயம் வழக்கு பதிவு செய்துள்ளது.
திருச்சி சிறுமியின் உயிரைப் பறித்த இந்த புல்டாக் 2x ஸ்பைசி நூடுல்ஸ் டென்மார்க்கில் உள்ள உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளால், அதன் ஸ்கோவில் யூனிட் அதிகமாக இருப்பதன் காரணமாக தடை செய்யப்பட்டுள்ளது. ஸ்கோவில் யூனிட் என்பது அதில் உள்ள காரத்தின் அளவைக் குறிக்கிறது. இந்த ஸ்கோவில் யூட் புல்டாக் நூடுல்ஸில் மிகவும் அதிகமாக இருப்பதால், இதை உட்கொள்பவர்களுக்கு கடுமையான விஷம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக கூறி டென்மார்க்கில் இந்த நூடுல்ஸ் விற்க தடைசெய்யப்பட்டுள்ளது.
அதிக காரத்தை உட்கொண்டால் மரணம் ஏற்படும் வாய்ப்புள்ளதா என்று நீங்கள் கேட்கலாம். அதிக அளவு கேப்சைசினை எடுக்கும் போது, அது இதயத்தில் காயம் அல்லது அசாதாரண இதயத் துடிப்பை ஏற்படுத்தி, மரணத்தைக் கூட ஏற்படுத்தலாம். கேப்சைசின் என்பது மிளகு மற்றும் மிளகாயில் உள்ள காரத்தைத் தரும் பொருளாகும். நீங்கள் கார பிரியர்களாக இருந்து, இதுவரை காரத்தை அதிகம் எடுத்து வந்தால், இனிமேல் அதிக காரம் உண்பதைத் தவிர்த்திடுங்கள்.
எனவே நண்பர்களே! நீங்கள் இதுவரை இந்த நூடுல்ஸை வாங்கி சாப்பிட்டு வந்திருந்தால், இனிமேல் அந்த நூடுல்ஸை வாங்கி சாப்பிடாதீர்கள். உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், இப்படியான நூடுல்ஸ் போன்ற ஜங்க் உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடத் தொடங்குங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
