Latest Updates
-
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்.. -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா?
இஞ்சியை நீங்க தினமும் இப்படி சாப்பிட்டா போதுமாம்...'10 நாளில்' உங்க உடல் எடை குறைஞ்சிடுமாம்..!
Weight Loss In Tamil : 'உணவே மருந்து, மருந்தே உணவு' என்பது இந்தியர்களின் உணவு முறைக்கான பழமொழியாக கூறப்படுகிறது. இது நிச்சயம் உண்மை என்பதை நாம் அனைவரும் அறிவோம். நம் வீட்டு சமையலறையில் இருக்கும் உணவு பொருட்கள் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை நமக்கு வழங்குகின்றன.
அந்த வகையில், இஞ்சியை நாம் அடிக்கடி சமையலில், தேநீரிலும் பயன்படுத்தி வருகிறோம். இஞ்சியால் நாம் பெறும் எண்ணற்ற மருத்துவ நன்மைகளை பற்றி அறியாதவர்கள் அல்ல நாம். இஞ்சி இந்திய சமையலறைகளில் ஒரு பொதுவான மூலப்பொருள். அதன் பயன்பாடு ஒரு மசாலாவாக, மருத்துவ மூலிகையாக மற்றும் வீட்டு வைத்தியமாக அனைவருக்கும் தெரியும்.

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வயிறு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறவும், வளர்சிதை மாற்றத்தை சீராக்கவும் இஞ்சி பயன்படுகிறது. ஒரு நபரின் எடை அல்லது பிஎம்ஐ குறைப்பதில் இஞ்சி அல்லது அதன் சாறு நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எடை இழப்புக்கு இஞ்சியை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
இஞ்சி நீர்
இஞ்சி நீரை தினமும் குடிப்பது உங்களுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. ஒரு கிளாஸ் தண்ணீரில் சில துளிகள் இஞ்சி சாற்றை சேர்த்து காலையில் குடித்து வந்தால் பிடிவாதமான உங்கள் தொப்பை கொழுப்பு குறையும் என்கிறார்கள் நிபுணர்கள். மேலும், இது உங்கள் செரிமான ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும். நீங்கள் இஞ்சி நீரை பருக ஆர்வமாக இருந்தால், அதில் சில துளிகள் எலுமிச்சை சாறு அல்லது தேன் சேர்த்து சுவையை மேம்படுத்தலாம்.
இஞ்சி தூள்
எடை இழப்புக்கு உலர்ந்த இஞ்சி தூள் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது. எடை குறைக்கும் பண்புகளைத் தவிர, இந்த பொடிகள் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ஒருவர் இஞ்சி பொடியை தண்ணீருடன் சேர்த்து உட்கொள்ளலாம் அல்லது இதை உணவில் சேர்த்து நேரடியாக சாப்பிடலாம்.
இஞ்சி தேநீர்
பல வீடுகளில் இஞ்சி தேநீர் காலையிலும் மாலையிலும் வழக்கமாக உட்கொள்ளப்படும் பானமாக இருக்கிறது. உங்கள் தேநீரில் இஞ்சியின் ஆரோக்கியமான பொருட்களைச் சேர்க்க, நீங்கள் தேநீரில் சில துளிகள் இஞ்சிச் சாற்றை சேர்க்கலாம் அல்லது இஞ்சியை அப்படியே நறுக்கி சேர்க்கலாம். தேநீருடன் சரியாக காய்ச்சி சூடாக பருகும்போது, நல்ல சுவையை உங்களுக்கு வழங்குவதோடு, உங்கள் உடல் எடையையும் குறைக்க உதவும்.
இஞ்சி எலுமிச்சை தண்ணீர்
இஞ்சி மற்றும் எலுமிச்சை ஆகிய இரண்டும் சக்தி வாய்ந்த மசாலாப் பொருட்களையும் ஒன்றாக கலப்பது உங்கள் உடல் எடையை குறைக்க அற்புதமாக வேலை செய்யும் என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். எடையைக் குறைக்கப் பயன்படும் உணவுகளில் எலுமிச்சையும் ஒன்று. குடல் ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெற மக்கள் அதிகாலையில் எலுமிச்சை சாறு குடிப்பார்கள்.
டிடாக்ஸ் பானம்
ஒரு தேக்கரண்டி துருவிய இஞ்சியை எடுத்து ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் சேர்க்கவும். இதனுடன் எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்க்கவும். அதை நன்றாக கலக்கி, காலையில் வெறும் வயிற்றில் குடியுங்கள் அல்லது நாளின் எந்த நேரத்திலும் இந்த பானத்தை அருந்தலாம். இனிப்பு சுவை தேவைப்பட்டால், அதில் சில துளிகள் தேன் சேர்க்கலாம். இது உங்கள் வயிற்றில் உள்ள தொப்பையை குறைத்து, உடல் எடையையும் குறைக்க உதவும்.
இஞ்சி மிட்டாய்கள்
இஞ்சி மிட்டாய்களை நீங்கள் வீட்டிலேயே தயார் செய்யலாம். இஞ்சியை தடிமனான துண்டுகளாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் சேர்த்து, எலுமிச்சை சாறு சேர்க்கவும். இதனுடன் கருப்பு மிளகு தூள், ஆம்சூர் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். கலவையை சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் அவற்றை சூரிய ஒளியில் உலர வைத்து, தினமும் சாப்பிடுங்கள்.
இறுதிக்குறிப்பு
இஞ்சி உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, உடல் எடையை குறைப்பது என பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. இருப்பினும், நீங்கள் எடுத்துக்கொள்ளும் இஞ்சியின் அளவு குறித்து கவனமாக இருக்க வேண்டும்.
இஞ்சியை அதிகமாக உட்கொள்ள வேண்டாம். சிறிய அளவுகளில் மட்டுமே அதை உட்கொள்ளவும். இஞ்சியின் அதிகப்படியான பயன்பாடு வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தலாம். அத்துடன் குமட்டல் மற்றும் வாந்தியையும் உண்டாக்கலாம். எனவே, மிதமான அளவில் இஞ்சியை பயன்படுத்தி, அதிகளவு நன்மைகளை பெறுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
