Latest Updates
-
இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் பண்டிகை கால இனிப்புக்களை ரசிப்பதற்கான 7 சிறந்த வழிகள்! -
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க.. -
நார்த் இந்தியன் ஸ்டைல் முட்டைக்கோஸ் உருளை சப்ஜி ரெசிபி - செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு டாப்பா இருக்கும் -
டிராபிக் போலீஸ் ஏன் வெள்ளை நிற யூனிஃபார்ம் அணிகிறார்கள் - இதுக்கு பின்னாடி உள்ள காரணம் என்ன தெரியுமா?
அதிகாலை சீக்கிரம் எழ முயற்சிப்பவரா நீங்கள்..? இதோ உங்களுக்கான சில டிப்ஸ்..!
அதிகாலையில் எழுந்திருப்பது பல நன்மைகளை வழங்கினாலும், அதிகாலையில் எழுவது நம்மில் பலரால் முடியாத ஒன்று. இன்றைக்காவது சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும் என அலாரம் வைத்து அதை அணைத்துவிட்டு தூங்குபவர்கள் அதிகமாக உள்ளனர். அதிகாலையில் எழுந்திருப்பது உங்கள் நாளை புத்துணர்வுடன் தொடங்க உதவும். சீக்கிரம் எழுவது உடற்பயிற்சி செய்ய உங்களுக்கு அதிக நேரத்தை வழங்கும்.
ஆனால் பலரும் காலையில் வேகமாக எழ முடியாமல் சிரமத்திற்கு ஆளாகின்ற்னர். இருப்பினும் முடியவில்லை. ஆனால் காலையில் வேகமாக எழுவதற்கு நம் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொண்டால் போதும். நிச்சயம் அதிகாலையில் நேரமாக எழுந்து, பொறுமையாகவும், டென்சன் இல்லாமலும் அன்றைய நாளை கடக்க முடியும். பின்வரும் குறிப்புகள் நீங்கள் தினமும் சீக்கிரம் எழுந்திருக்க உதவும். வாங்க அந்த குறிப்புகளை பற்றி முழுமையாக இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

1. காலையில் வேகமாக எழ வேண்டுமெனில், முதலில் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு மாலையில் வேகமாக செல்ல வேண்டும். மேலும் மாலையில் வீட்டிற்கு சென்ற பின், குடும்பத்தினருடன் சந்தோஷமாக நேரத்தை செலவழித்தால், மனம் மட்டுமின்றி, உடலும் ரிலாக்ஸ் ஆகும்.
2. தூங்க செல்லும் முன் குளியல் மேற்கொண்டால், இரவில் நல்ல ஆழ்ந்த நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம். அதிலும் இரவில் சீக்கிரம் குளித்துவிட்டு தூங்கினால், காலையில் அலாரம் அடிப்பதற்கு முன்பே எழ முடியும். நீங்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன், ஏதாவது ஒரு புத்தகத்தைப் படிப்பது அல்லது இன்றைய நிகழ்வுகளை ஒரு குறிப்பேட்டில் எழுதுவது போன்றவற்றை செய்யவும். இதனால் நீங்கள் எழுந்ததும் புத்துணர்வுடன் நாளைத் தொடங்கத் தயாராக இருப்பீர்கள்.
3. நீங்கள் எழுந்தவுடன் காலைக் கடன்களை முடிக்கவும். அது உங்களுக்கு உற்சாகமாகவும், வரவிருக்கும் நாளுக்கு தயாராகவும் உதவுகிறது. உதாரணமாக, குளிர்ந்த நீரில் குளிப்பது, உடற்பயிற்சி அல்லது ஐந்து நிமிடங்கள் தியானம் செய்யவும்.
4. ஒரு வாரம் சீக்கிரம் எழுந்திருக்க முயற்சி செய்யுங்கள். பின்னர், நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று பாருங்கள். உங்களால் அதை பழக முடியாவிட்டால், உங்களுக்கு எது சிறந்தது என்பதைப் பொறுத்து நீங்கள் படுக்கைக்கு செல்லும் நேரத்தை சரிசெய்யவும்.
5. தினமும் சரியான நேரத்திற்கு படுக்கைக்கு சென்று தூங்க முயற்சிக்கவும். படுக்கைக்கு சென்ற பின் படிப்பது TV பார்ப்பதை தவிர்க்கவும். 20 நிமிடங்களுக்குள் உங்களுக்கு தூக்கம் வரவில்லை என்றால், தூக்கம் வரும் வரை எழுந்து ஏதாவது படிக்கவும். ஆனால் மொபைல் பார்ப்பதை தவிக்கவும்.
6. நீங்கள் தினமும் பின்பற்றுவதற்கு ஒரு அட்டவணையை உருவாக்கவும். இதனால், காலையில் நேரத்தை வீணடிக்க உங்களுக்கு வாய்ப்பு குறைவாக இருக்கும்.
7. படுக்கைக்குச் செல்வதற்கு முன் தியானம் அல்லது சில சுவாசப் பயிற்சிகளை செய்யவும். இதனால் நீங்கள் எழுந்ததும், எதிர்மறை எண்ணங்கள் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். அதேபோல நீங்கள் எழுவதற்கு 20 நிமிடங்களுக்கு முன் அலாரம் வைக்கவும். அந்த நேரத்தை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துங்கள். உதாரணமாக, தியானம் செய்தால், படித்தல், சுவாசப் பயிற்சி ஆகியவற்றை செய்யலாம்.
8. நீங்கள் சீக்கிரம் எழுந்திருக்க பழகியதும், உங்கள் உடல் புதிய அட்டவணைக்கு பழகி, சரியான நேரத்தில் தூங்க பழகிவிடும். வழக்கத்தை விட 15 - 30 நிமிடங்கள் முன்னதாகவே படுக்கைக்குச் செல்ல முயற்சிக்கவும்.
9. அதிகாலையில் எழுந்திருப்பதை ஒரு வேலையாக நினைக்க வேண்டாம். அதற்குப் பதிலாக, மாலை அல்லது வார இறுதி நாட்களில் நீங்கள் விரும்பும் விஷயங்களைச் செய்வதற்கு அதிக நேரத்தைச் செலவிடவும்.
10. காலையில் எழுந்திருப்பதில் உங்களுக்கு சிக்கல் இருந்தால், உங்கள் அலாரம் சத்தத்தை அதிகமாக வைக்கவும் (உதாரணமாக, உற்சாகமான பாடல் அல்லது உரத்த சத்தம்). அது உங்களை வேகமாக எழுப்பும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
