Latest Updates
-
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...!
மலச்சிக்கல் வந்தா உடனே சரிபண்ண பாட்டி வைத்தியம் சொல்ற மருந்து என்ன தெரியுமா?...
மலச்சிக்கல் வந்தா உடனே சரிபண்ண பாட்டி வைத்தியம் சொல்ற மருந்து என்ன தெரியுமா?...
நாம் நவீன காலத்தில் உண்ணும் சீரற்ற உணவு முறையால் எல்லாரும் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சினை தான் மலச்சிக்கல் பிரச்சினை. இப்படி தினசரி மலச்சிக்கல் ஏற்படுவது உடலுக்கு அவ்வளவு நல்லது அல்ல. அதற்குத்தான் நாங்கள் சில எளிய பாட்டி வைத்தியங்களை கூற உள்ளோம்.

காரணங்கள்
மன அழுத்தம், போதுமான நீர் அருந்தாது, அதிகமான பால் பொருட்கள் உண்ணுதல், கால்சியம் மற்றும் அலுமினியம் கலந்த ஆன்டி ஆசிட் மருந்துகள், மலம் வெளியேறுவதை அடக்குதல் இது போன்ற பிரச்சினைகளால் நீங்கள் இரத்தத்துடன் மலம் கழித்தல் ஏற்படும்.

மலச்சிக்கல்
மலச்சிக்கல் என்பது மலம் கழித்தலை சிரமத்திற்கு உள்ளாக்கி அடிக்கடி வெளியேறுவதும் தடுக்கப்படும். மலம் கழித்தலுக்கான நேரம் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். 3 நாட்களுக்கு ஒரு முறை என மலம் கழிப்பது அவ்வளவு நல்லது அல்ல.
3 நாட்களுக்கு பிறகு மலமானது ரெம்ப இறுக்கமாகவும் வெளியேற கஷ்டத்தையும் ஏற்படுத்தி விடும்.

அறிகுறிகள்
மலம் கழிக்க சிரமம், வறண்ட மலம் கழித்தல், வலியுடன் மலம் வெளியேறுதல், உலர் மலம், சிறுது சிறுதாக வெளியேறுதல், இறுக்கமான மலம், மலம் கழிக்காமல் இருத்தல், தொடர்ச்சியற்ற முறையில் மலம் கழித்தல், அதிக அழுத்தம் கொடுத்தல், அடிவயிற்றில் வலி, வயிறு வீக்கம், வாந்தி, குமட்டல், எடை இழப்பு, சோர்வு, வயிற்றுப் போக்கு.

லெமன் ஜூஸ்
ஒரு கப் சூடான தண்ணீரில் கொஞ்சம் லெமன் ஜூஸ் மற்றும் தேன் சேர்த்து குடித்தால் போதும் உங்கள் குடல் இயக்கத்தை மேம்படுத்தும். இந்த ஜூஸை ஒரு நாளைக்கு இரண்டு முறை என எடுத்து வந்தால் உங்கள் மலச்சிக்கல் தீரும். மலச்சிக்கல் இல்லாமல் இதை எடுத்துக் கொள்ளும் போது சரியான அளவில் எடுத்துக் கொள்ளுங்கள்.

காபி
காபி ஒரு டையூரிடிக் பானம். காபி உடனடியாக உங்கள் குடல் இயக்கத்தை துரிதப்படுத்தி மலம் வெளியேறுவதை அவசரப்படுத்தும். மேலும் குடலிலுள்ள தசைகளை இயக்கி மலத்தை ஈஸியாக தள்ளி விடும். எனவே இதை சரியான அளவில் தினசரி எடுத்து வந்தால் நல்லது.

உலர்ந்த திராட்சை
உலர்ந்த திராட்சையில் நார்ச்சத்து மற்றும் டார்டாரிக் அமிலம் உள்ளது. இது மல மிளக்கியாக செயல்படுகிறது. எனவே தினசரி கொஞ்சம் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சினை தீரும். மேலும் இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.

செர்ரீஸ், ஆப்ரிகாட்ஸ் மற்றும் ப்ளம்ஸ்
இந்த பழங்களில் நிறைய நார்ச்சத்துகள் உள்ளன. இதனுடன் தயிர் போன்ற புரோபயோடிக் உணவுகளை சேர்த்துக் கொண்டு வந்தால் குடலியக்கம் நன்றாக இருக்கும். நார்ச்சத்து குடலில் ஏற்படும் பிரச்சினைகளை நீக்கி சீரண சக்தியை மேம்படுத்துகிறது.

ஹெர்பல் சென்னா தேநீர்
சென்னா மூலிகை மலமிளக்கியாக செயல்படுகிறது. இதிலுள்ள இயற்கை பொருட்கள் குடலியக்க செயல்பாட்டை துரிதப்படுத்துகிறது.

இஞ்சி அல்லது புதினா டீ
புதினா மற்றும் இஞ்சி டீ மலச்சிக்கலை போக்க பெரிதும் உதவுகிறது. இதிலுள்ள மலமிளக்கும் தன்மை குடலியக்கத்தை மேம்படுத்தி மலம் வெளியேற ஈஸியாக்குகிறது. மேலும் பசியை தூண்டுதல், சீரண மண்டலத்தை வலுப்படுத்துதல், சீரண சக்தியை அதிகரித்தல்.

டான்டெலியன் டீ
இது ஒரு சிறந்த மலமிளக்கியாகவும் நச்சுக்களை வெளியேற்றவும் பயன்படுகிறது. எனவே தினமும் ஒரு கப் டான்டெலியன் டீ உங்கள் மலச்சிக்கல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடும்.

நார்ச்சத்து உங்கள்
Fiber breakfast குடலை சுத்தப்படுத்தும், உணவுப் பொருட்களை அரைக்கும், குடலிலுள்ள தேவையில்லாத கசடுகளை நீரில் அலசி வெளியேற்றி விடும். நார்ச்சத்தும் நீரும் கலந்தது ஒரு ஸ்பான்ஞ் மாதிரி செயல்பட்டு குடலிலுள்ள கழிவுகளை எளிதாக வெளியேற்றி விடும். நீரில் கரையாத நார்ச்சத்துகள் தண்ணீரை உறிஞ்சாமல் அப்படியே இருக்கும். இதனால் நீண்ட நேரம் பசி எடுக்காது.

கருப்பட்டி
கருப்பட்டியை நீங்கள் உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சினை தீரும். நாள்பட்ட அல்லது அவ்வப்போது ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சினையையும் தீர்க்க வல்லது. ஒரு டீ ஸ்பூன் கருப்பட்டியை எடுத்து சூடான நீரில் கலந்து படுக்கைக்கு போவதற்கு முன் குடிக்க வேண்டும். இது காலையில் எழுந்ததும் மலம் எளிதாக வெளியேற உதவும். இது இயற்கையானது மேலும் ரெம்ப சுவையான இனிப்பும் கூட.

எள் விதைகள்
எள் விதைகளிலிருந்து பெறப்படும் நல்லெண்ணெய் குடலுக்கு போதுமான ஈரச்சத்தை கொடுத்து மலச்சிக்கலை தடுக்கிறது. இந்த எள் விதைகளை சாலட், செரல்ஸ் அல்லது உணவுகளில் சேர்த்து வந்தாலே போதும் பயன் பெறலாம்.

பச்சை ஆப்பிள் ஜூஸ்
தேவையான பொருட்கள்
2 பச்சை ஆப்பிள்கள்
3 கிவி பழங்கள்
கொஞ்சம் லெமன் ஜூஸ்
பயன்படுத்தும் முறை
மேற்கண்ட பொருட்களை எல்லாம் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து ஜூஸாக்கி பருகுங்கள். மலச்சிக்கலை துரத்தி விடலாம்.

தவறான உணவுப்பழக்கம்
மலச்சிக்கலுக்கு முக்கிய காரணம் நாம் மேற்கொள்ளும் தவறான உணவுப் பழக்கம். எனவே ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை மேற்கொண்டு ஆரோக்கியமாக வாழுங்கள்.



Click it and Unblock the Notifications











