Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
ட்ரெட்மில்லில் உடற்பயிற்சி செய்வது நல்லதா? கெட்டதா?
வீட்டிற்குள் செய்யும் உடற்பயிற்சி என்று வரும்போது அதில் முதல் இடம் வகிப்பது ட்ரெட்மில். ட்ரெட்மில்லில் உடற்பயிற்சி செய்வது என்பது கௌரவ அடையாளமாக மாறிவருகிறது. உண்மையில் ட்ரெட்மில் உபயோகிப்பது பலனளிக்க
ஒரு காலத்தில் உடற்பயிற்சி என்பது அதிகாலையில் எழுந்து பூங்காக்களிலோ அல்லது சாலைகளிலோ நடப்பது, ஓடுவது என்று இருந்தது. இன்று நம் மக்களின் நேரமின்மை மற்றும் வசதி கருதி வீட்டிற்குள்ளேயே உடற்பயிற்சி செய்யும்ப் பழக்கம் பரவி வருகிறது. உண்மையில் இது ஆரோக்கியதிகற்கு நல்லதா? இல்லையா? என்பது இன்றளவும் விடை கிடைக்காத ஒரு கேள்வியாகவே இருக்கிறது.

வீட்டிற்குள் செய்யும் உடற்பயிற்சி என்று வரும்போது அதில் முதல் இடம் வகிப்பது ட்ரெட்மில். ட்ரெட்மில்லில் உடற்பயிற்சி செய்வது என்பது கௌரவ அடையாளமாக மாறிவருகிறது. உண்மையில் ட்ரெட்மில் உபயோகிப்பது பலனளிக்கிறதா? இந்த கேள்விக்கான விடையைத்தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

இது ஒரு ஏரோபிக் பயிற்சி
ட்ரெட்மில்லில் நடப்பது ஒரு சிறந்த ஏரோபிக் பயிற்சியாகும். சமீபத்தில் நடத்திய ஆய்வில் தினமும் 40 நிமிடம் ட்ரெட்மில்லில் நடப்பது ஆரோக்கிய அதிகரிக்கும் சிறந்த வழியாக இருக்கிறது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். இது இரத்த அழுத்தத்தை குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் எடை இழப்பு, தசைகளின் வலிமை போன்ற நன்மைகளையும் வழங்குகிறது.

மனஆரோக்கியம்
உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது உங்கள் உடல் தகுதியை மட்டும் மேம்படுத்துவதில்லை, அது உங்களின் மனஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. மாலை நேரங்களில் ட்ரெட்மில்லில் நடப்பது உங்களை அன்றைய நாளின் சோர்வுகளில் இருந்து மீட்பதோடு, இரவு நல்ல தூக்கத்தையும் கொடுக்கிறது.

வேடிக்கையானது
ஜிம்மில் சென்று நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போது உங்களை போன்றே எண்ணம் கொண்ட பலரை நீங்கள் பார்க்க வாய்ப்புள்ளது. ஆனால் வீட்டில் ட்ரெட்மில்லில் பயிற்சி செய்யும்போது அதன் வேகம், பயிற்சி செய்யும் முறை என அனைத்தையும் உங்கள் வசதிக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம், இது ஒரு விளையாட்டு போலவே இருக்கும். வீட்டில் ட்ரெட்மில் பயிற்சி எடுக்கும்போது உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளை பார்க்கலாம், உங்கள் குடும்பத்தினருடன் பேசலாம். இவையெல்லாம் உங்களுக்கு சோர்வு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்.

எடை இழப்பு
ட்ரெட்மில்லில் நடக்கும் போதோ அல்லது ஓடும்போதோ உங்கள் கலோரிகள் எரிக்கப்படுகிறது. இது உங்களின் எடை இழப்பிற்கு உதவியாக இருக்கும். மிதமான வேகத்தில் இதில் அரைமணி நேரம் நடப்பது உங்களின் 150 கலோரிகளை குறைக்கும். அதுவே சற்று வேகமாக இதில் நடக்கும்போது இது 200 கலோரிகள் வரை குறைக்க உதவியாக இருக்கும்.

பக்கவாதம்
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் வெளியில் சென்று உடற்பயிற்சி செய்பவர்களை காட்டிலும் வீட்டில் ட்ரெட்மில்லில் நடப்பவர்களுக்கு குணமாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது கண்டறியப்பட்ட்டது.

மூட்டுகள் பலப்படுத்தப்படுகிறது
ட்ரெட்மில்லில் நடப்பது உங்கள் மூட்டுகளின் பலத்தை அதிகரிக்க உதவுகிறது. ட்ரெட்மில்லில் நடப்பது மூட்டுகள் தேய்மானம் அடைவதை குறைக்கிறது. நீங்கள் வெளிப்புறங்களில் நடக்கும்போது ஏற்படும் மூட்டுகளின் தேய்மானத்தை காட்டிலும் ட்ரெட்மில்லில் நடக்கும்போது ஏற்படும் தேய்மானம் குறைவுதான்.

காயங்கள் ஏற்படும் வாய்ப்பு குறைவு
ஒவ்வொரு நூறு மணி நேர வெளிப்புற உடற்பயிற்சிக்கும் நீங்கள் சில காயங்களை உணருவீர்கள். வெளிப்புறத்தில் உடற்பயிற்சி செய்பவர்களில் 65 சதவீதத்தினர். இந்த சூழ்நிலையில் நீங்கள் ட்ரெட்மில்லில் நடக்கும்போது காயங்கள் ஏற்படும் வாய்ப்பு மிகக்குறைவு.

ஜிம்மில் இருக்கும் ட்ரெட்மில்
உங்களுக்கு வெளியே சென்றுதான் உடற்பயிற்சி செய்யவேண்டும் என்று விரும்பினால் ஜிம்மில் உள்ள ட்ரெட்மில் அதற்கு சிறந்த தீர்வாகும். ஒருவேளை நீங்கள் எடை அதிகமானவராக இருந்தால் ஜிம்மில் உள்ள ட்ரெட்மில்தான் நீங்கள் உடற்பயிற்சி செய்ய சரியாக இருக்கும். ஏனெனில் வீட்டில் இருக்கும் ட்ரெட்மில் குறைவான எடைக்கு ஏற்றாற்போல செய்யப்பட்டதாய் இருக்கும்.



Click it and Unblock the Notifications