Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவும் 5 பாட்டி வைத்தியம் !!
உடலில் ஏற்படும் பாதிப்புகளுக்கு நம்மிடம் இருக்கும் இயற்கை பொருகளே மருந்தாக பயன்பெறுகிறது. காய்ச்சல் அஜீரணம், என உபாதைகளுக்கு இந்த எளிய பொருட்களைக் கொண்டே சரி செய்யுங்கள். பக்க விளைவுகள் ஏற்படாது.
ஆரோக்கியமான உணவு உண்டாலும் உடலில் சின்ன சின்ன உபாதைகள் வரத்தான் செய்யும்.
அதற்கு மருந்து மாத்திரை என தேடி மெடிக்கல் ஷாப் செல்லத் தேவையில்லை. வீட்டிலேயே நீங்கள் சரிப்படுத்திக் கொள்ளலாம்.

இயற்கையான நமது பாட்டி வைத்தியங்களால் எந்த வித பாதிப்பும் இல்லாமல் குணப்படுத்த முடியும்.
உங்களுக்கான எளிய தீர்வுகள் இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. தொடர்ந்து படியுங்கள்.

அஜீரணத்திற்கு :
அஜீரணம் மற்றும் வயிற்று மந்தத்திற்கு சிறந்தது கொய்யாவின் கொழுந்து இலை. சாப்பிட்டவுடன் பலனளிக்கும்.

கொழுப்பு குறைய :
உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணையைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம். இதனால் ஆயுள் அதிகரிக்கும்.

வயிற்றுப் போக்கிற்கு :
ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி, அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு குணமாகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.

உடல் வலி நீங்க :
சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் நன்றாகத் தேய்த்து வர உடம்பு வலி நீங்கும்.

மூளை பலம் பெற :
துளசி மனித மூளைக்கு வலிமையைக் கொடுக்கக்கூடியது. அதற்கு, துளசி இலையை ஒரு டம்ளரில் பறித்துப் போட்டு ஊற வைத்து, அந்தத் நீரைக் குடித்து வந்தால் மூளை பலம் பெறும்.

தொண்டை புண்ணிற்கு :
தொண்டையில் புண், வலி ஏற்பட்டால் கொஞ்சம் சித்தரத்தைப் பொடியுடன் தேன் கலந்து சாப்பிடவும்.
தொண்டைப் புண் பாதிப்பு குணமான பிறகு கொஞ்சம் மிளகைத் தூளாக இடித்து, அதில் வெல்லம், நெய் கலந்து உருட்டி விழுங்கி வந்தால் அந்த பாதிப்பு முற்றிலும் குணமாகும்.



Click it and Unblock the Notifications
