Latest Updates
-
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் -
மூட்டு வலி நீங்க, இரத்தம் ஊற உதவும் முருங்கைக்கீரை கொள்ளு சூப் - எப்படி செய்யணும் தெரியுமா? -
சனிபெயர்ச்சியால் 2027-ல் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
21 நாட்கள் தொடர்ந்து 1 நெல்லிக்காய் சாப்பிடுங்க, உடம்புல நடக்குற அதிசயத்தை பாருங்க.. கூறும் டாக்டர்! -
பாலக் புலாவ் ரெசிபி - இந்த சத்தான புலாவை ட்ரை பண்ணுங்க - குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க -
பழைய விமானங்கள் ஓய்வு பெற்ற அவற்றின் நிலை என்னவாகும் தெரியுமா? இப்படிலாம் கூட பண்ணுவாங்களா? -
ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: நாளை முதல் அடுத்த 90 நாட்கள் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க, 1 மாசத்துல உடல் எடை குறைவதை பாப்பீங்க.. -
இன்றைய ராசிபலன் 11 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு பெரிய நஷ்டம் தேடிவரப்போகுதாம்
உடலுக்கு பலம் தரும் சாத்துக்குடி!

மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும் சாத்துக்குடி பழம் நாரத்தை, ஆரஞ்சு வகையைச் சேர்ந்தது. இந்தப் பழம் பார்ப்பதற்கு காய்போல பச்சையாகவே காணப்படும். ஆனால் சுளைகள் இனிப்பாக இருக்கும். சாத்துக்குடியில் பி உயிர்ச்சத்தும், இரும்புச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும் காணப்படுகின்றன.
எலும்பு வளர்ச்சி
கால்சியம் சத்து குறைபாட்டினால் எலும்பு, பற்கள் வளர்ச்சி பாதிக்கப்படும். அவர்களுக்கு சாத்துக்குடி ஏற்றது. சாத்துக்குடியை தினசரி உட்கொள்வதன் மூலம் உடல் பலம் பெறுவதோடு எலும்பு வளர்ச்சியடையும்.
பசியை தூண்டும்
வயிறு மந்தமாக பசியில்லாமல் அவதிப்படுபவர்கள் தினசரி இரண்டு சாத்துக்குடி சாப்பிட ஜீரணசக்தி அதிகரித்து பசி உண்டாகும். வயதானவர்களுக்கு உணவை செரிமானத்தை அதிகரிக்கும், மலச்சிக்கலை போக்கும்
நினைவாற்றலை அதிகரிக்கும்.
மறதி நோயால் அவதிப்படுபவர்களுக்கு சாத்துக்குடி அருமருந்தாகும். தினசரி சாத்துக்குடி ஜூஸ் பருகி வர நினைவாற்றல் அதிகரிக்கும்.
நோயாளிகளுக்கு ஏற்றது.
நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் இரண்டு வேளை சாத்துக்குடி சாறு பருகினால் புத்துணர்ச்சி ஏற்படுவதோடு, உடலுக்கு வலு உண்டாகும். சாத்துக்குடி ரத்தத்தில் எளிதில் கலப்பதால் விரைவில் உடல் நலமடையும்.
சோர்வைப் போக்கும்
சிலர் எப்போதும் சோர்வாக இருப்பர். அசதியினால் தலைசுற்றலுடன் மயக்கம் ஏற்படும். கை, கால் மூட்டுக்களில் வலி உண்டாகும். இவர்களுக்கு தினமும் இரண்டு சாத்துக்குடி வீதம் சாறு எடுத்துக் கொடுத்து வந்தால் இரத்தம் விருத்தியாகும். உடல் அசதி நீங்கும். ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து ரத்தசோகையை போக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications